Ayodhya Ram Lalla: விண்ணை பிளக்கும் ஜெய் ஸ்ரீராம் கோஷத்துடன் அயோத்திக்கு வந்து சேர்ந்த ராம் லல்லா சிலை!
First Look of Ram lalla: அயோத்தியில் குழந்தை ராமரின் பிராண பிரதிஷ்டா நிகழ்ச்சிக்கான (ஜனவரி 22) நேரம் வந்துவிட்டது. மைசூர் அருண் யோகிராஜ் ராம்லல்லாவை சிறப்பமாக வடித்தார்.
(1 / 7)
ராம் லாலா புதன்கிழமை (ஜனவரி 17) இரவு அயோத்தியின் ராமர் கோயிலுக்குள் நுழைந்தார். மைசூரை சேர்ந்த அருண் யோகிராஜ் என்பவரால் கிருஷ்ண கல்லில் செதுக்கப்பட்ட குழந்தை ராமர் சிலை நேற்றிரவு ராமர் கோவில் உள்ளே கொண்டு வரப்பட்டது. ஆர்வலர்களுடன், அருண் யோகிராஜும் நிற்பதை படத்தில் காணலாம்.
(HT_PRINT)(2 / 7)
ஜனவரி 22ஆம் தேதி ராம்லல்லா பிராண பிரதிஷ்டை நடைபெறுகிறது. ராமர் கோவில் கருவறையில் உள்ள கூர்மபீடத்தில் ராமர் சிலை இன்று (ஜனவரி 18) பிரதிஷ்டை செய்யப்படுகிறது. குழந்தை ராமரின் தரிசனத்திற்காக நாடே ஏங்கி நிற்கும் தருணம் இது. இது பலராமர் சிலையின் முதல் தோற்றம்.
(PTI)(3 / 7)
200 கிலோ எடையுள்ள ராம் லல்லா சிலை கிரேன் மூலம் தூக்கி லாரியில் வைக்கப்பட்டு ஸ்ரீராம ஜென்மபூமியில் உள்ள ராமர் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டது.
(PTI)(4 / 7)
அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ள ராம்லல்லா சிலை மஞ்சள் தார்பாய் மூடப்பட்ட டிரக்கில் வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் ராமர் கோவில் நோக்கி கொண்டு செல்லப்பட்டது.
(ANI Photo/Rahul Singh)(5 / 7)
ராமர் சிலையை ஏற்றிச் சென்ற லாரியுடன் வாகனப் பாதுகாப்புப் படையினர் சென்றனர். அதேபோல் துப்பாக்கி ஏந்திய காவலர்களும் இருக்கிறார்கள்.
(ANI Photo/Amit Sharma)(6 / 7)
சிலையை ஏற்றிச் சென்ற லாரி பலத்த பாதுகாப்புடன் காணப்பட்டதையடுத்து, சுற்றி இருந்த அனைவரும் ஜெய் ஸ்ரீராம் என முழக்கங்களை எழுப்பினர்.
(Rahul Singh)மற்ற கேலரிக்கள்