தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Mindless Snacking: மனம்போல் நொறுக்குத்தீனி சாப்பிடுவதை நிறுத்துவது எப்படி?

Mindless Snacking: மனம்போல் நொறுக்குத்தீனி சாப்பிடுவதை நிறுத்துவது எப்படி?

Jan 20, 2023 02:12 PM IST I Jayachandran
Jan 20, 2023 02:12 PM , IST

  • சலிப்பு, தனிமை, மன அழுத்தம், கோபம் போன்று பசியைத் தவிர வேறு காரணங்களுக்காக நாம் அடிக்கடி அதிகமாக சாப்பிடுகின்றோம். 

மனம்போல் நொறுக்குத்தீனி சாப்பிடும் பழக்கம் தேவைக்கு அதிகமான கலோரிகளை உட்கொள்வதற்கு வழிவகுக்கும். எடை அதிகரிப்பு உள்ளிட்ட பிற உடல்நலப் பிரச்னைகளுக்கு பங்களிக்கும். இந்தப் போக்குக்கான காரணங்களை உணர்ந்து இனி தவிர்த்துக் கொள்ளுங்கள். 

(1 / 7)

மன அழுத்தம்: நாம் மன அழுத்தத்தில் இருக்கும்போது, ​​உணவு உட்கொள்வது மன அழுத்தத்தை மாற்றியமைக்க உதவுவதாக நம்புகிறோம். ஆனால் அது நீண்ட காலத்துக்கு நல்லதல்ல. நடைப்பயிற்சி, புத்தகம் படிப்பது அல்லது நண்பர்களுடன் பேசுவது போன்ற செயல்களில் ஈடுபட்டால் மன அழுத்தம் அல்லது சலிப்பு போன்றவற்றைச் சமாளிக்கலாம். 

(2 / 7)

பிஸியாக வைத்துக் கொள்ளுங்கள்: உங்களை பிஸியாகவும் ஈடுபாட்டுடனும் வைத்திருக்கும் செயல்பாடுகளைக் கண்டறியவும். இந்த வழியில், நீங்கள் சலிப்பு அல்லது மன அழுத்தத்தை உணரும்போது உணவை நோக்கி படையெடுப்பதை நிறுத்தலாம். மனசுக்குப் பிடித்த செயல்களைச் செய்யுங்கள். நல்ல பலன் கிடைக்கும்.

(3 / 7)

வீட்டில் நொறுக்குத் தீனிகள் வேண்டாம்: ஆரோக்கியமற்ற தின்பண்டங்களை வீட்டில் வைக்காதீர்கள். குறைந்த பட்சம் அவற்றை பார்வையில் படும்படி வைக்காதீர்கள். உங்கள் இலக்கை ஆதரிக்கும் சூழல் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் ஆரோக்கியமாக இருக்கவும், சிறந்த உணவைத் தேர்வுசெய்யவும் விரும்பினால், தேவையில்லாத பதப்படுத்தப்பட்ட உணவை வாங்கி சமயலறையில் அடுக்க வேண்டாம். பிஸ்கட், சிப்ஸ், நூடுல்ஸுக்குப் பதிலாக நீங்கள் உண்மையில் சமைக்க வேண்டிய உணவை மட்டும் வாங்கவும்.

(4 / 7)

நன்றாகத் தூங்குங்கள்: ஒவ்வொரு இரவும் போதுமான அளவு தூங்குவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். தூக்கமின்மையால் நட்டநடு ராத்திரியில் ஏதாவது சாப்பிட வேண்டும் எனத் தோன்றும்.  ஒரு இரவுக்கு 7-9 மணிநேர தூக்கத்தை இலக்காகக் கொள்ளுங்கள். சீக்கிரம் தூங்க முயற்சி செய்யுங்கள். இரவு உணவுக்குப் பிறகு வேறு தீனியை நினைத்தும் பார்க்க வேண்டாம்.

(5 / 7)

ஆரோக்கியமான தின்பண்டங்களை கையில் வைத்திருங்கள்: பழங்கள், காய்கறிகள், கொட்டைகள், விதைகள், முழு தானியங்கள் போன்ற ஆரோக்கியமான தின்பண்டங்களை ஃப்ரிட்ஜில் வைத்திருங்கள். அவற்றை நேரடிப் பார்வையில் வையுங்கள். இதனால் உங்களுக்கு பசி ஏக்கம் ஏற்படும் போது அவற்றை முதலில் சாப்பிட ஏதுவாகும். 

(6 / 7)

கவனத்துடன் சாப்பிடுதல்: உங்களின் உணவுப் பழக்கத்தைப் பற்றி மேலும் விழிப்புடன் இருக்க முயற்சி செய்யுங்கள். எப்போதெல்லாம் பசியெடுக்கிறது என்பதில் கவனம் செலுத்துங்கள். வயிறு நிரம்பிவிட்டால் அதற்கு மேல் இரை தேடக்கூடாது. உண்மையில் பசி இல்லாத போது சாப்பிடுவதை தவிர்க்கவும். கவனமுடன் சாப்பிடுவது உங்கள் உடலின் தேவைகளுடன் மிகவும் இணக்கமாக இருக்க உதவும்.

(7 / 7)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்