கதறி அழவிடப் போகும் செவ்வாய்.. வாயை அடக்குனா சிக்கல் வராது.. பணக்கஷ்டம் ஏற்பட வாய்ப்பு.. செவ்வாய் விளையாட்டு ஆரம்பம்
- Lord Mars: செவ்வாய் பகவானின் ராசி மாற்றமானது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இவர் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார்.
- Lord Mars: செவ்வாய் பகவானின் ராசி மாற்றமானது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இவர் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார்.
(1 / 6)
நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். இவர் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக் கூடியவர் செவ்வாய் பகவான். தன்னம்பிக்கை, தைரியம், விடாமுயற்சி, வீரம், வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.
(2 / 6)
செவ்வாய் பகவானின் ராசி மாற்றமானது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இவர் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார்.
(3 / 6)
இதுவரை கும்ப ராசியில் பயணம் செய்து வந்த கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி அன்று மீன ராசியில் நுழைந்தார். மீன ராசியில் ஏற்கனவே ராகு பகவான் பயணம் செய்து வருகின்றார். அவரோடு செவ்வாய் தோஷ தான் இணைந்துள்ளார். செவ்வாய் பகவானின் மீன ராசி சஞ்சாரமானது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகள் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கே காணலாம்.
(4 / 6)
சிம்ம ராசி: உங்கள் ராசியில் எட்டாவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான சவால்கள் உண்டாகும். பேசும்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் பணிச்சுமை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. உடன் வேலை செய்பவர்களோடு வாக்குவாதம் ஏற்படும். வியாபாரத்தில் மந்தமான சூழ்நிலை உண்டாகும்.
(5 / 6)
கன்னி ராசி: உங்கள் ராசிகள் ஏழாவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு வாக்குவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. நீண்ட தூர பயணங்கள் நல்ல பலன்களை தராது. வெளியூர் செல்லும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உடன் வேலை செய்பவர்களோடு கவனமாக இருக்க வேண்டும். உயர் அலுவலர்களோடு கருத்து வேறுபாடு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. புதிய முயற்சிகளை தற்போது தவிர்ப்பது நல்லது. மிகவும் பொறுமையாக இருக்க வேண்டும்.
(6 / 6)
மகர ராசி: உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான தடைகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எதிர்மறை எண்ணங்கள் அதிகம் உருவாகும். வசதி மற்றும் வாய்ப்புகள் கிடைப்பதற்கு சற்று தாமதமாகும். சிறு வேலையை முடிப்பதற்கும் அதிக உழைப்பு தேவைப்படும். வியாபாரத்தில் பல்வேறு விதமான தடைகள் உண்டாகும். தொழிலில் நஷ்டங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
மற்ற கேலரிக்கள்






