தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Biggboss7tamil: ‘இப்படியே வெளிய போகக் கூடாது மாயா..’ பூர்ணிமா போட்ட சபதம்!

BiggBoss7Tamil: ‘இப்படியே வெளிய போகக் கூடாது மாயா..’ பூர்ணிமா போட்ட சபதம்!

Nov 13, 2023 12:05 PM IST Stalin Navaneethakrishnan
Nov 13, 2023 12:05 PM , IST

  • Biggboss Tamil: பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் நேரலை ஒளிபரப்பு, கதகதப்பாக இருக்கிறது. நேற்றைய கமல் எபிசோடுக்குப் பின் மாயா-பூர்ணிமா செயல்பாடில் மாற்றம் இருக்குமா? என்கிற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அங்கே நடப்பது என்ன? அவர்களுக்குள் நடந்த விவாதங்களில் சில இதோ!

இந்த வாரம் தங்களுக்கு எதிராக எல்லாம் அமைந்து விட்டதாக பிக்பாஸ் வீட்டில் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள் பூர்ணிமாவும், மாயாவும். ‘நான் 40 நாட்களுக்கு மேல் இருந்துவிட்டேன்.. இனி நான் என்னை மாற்றினால் அதை எப்படி எடுப்பார்கள்? அது எப்படி சரியாக இருக்கும்? நான் நிறைய நியாயங்களை சொன்னோம்; அதை கோபமாக சொன்னோம். ஆனால், அவர்கள் சொன்னது எல்லாமே தவறு, ஆனால் அதை அவர்கள் அழுது கொண்டே சொன்னார்கள். அதனால் அவர்களுக்கு சிம்பதி வந்துவிட்டது,’’ என்று மாயாவிடம் பூர்ணிமா கூறினார். 

(1 / 5)

இந்த வாரம் தங்களுக்கு எதிராக எல்லாம் அமைந்து விட்டதாக பிக்பாஸ் வீட்டில் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள் பூர்ணிமாவும், மாயாவும். ‘நான் 40 நாட்களுக்கு மேல் இருந்துவிட்டேன்.. இனி நான் என்னை மாற்றினால் அதை எப்படி எடுப்பார்கள்? அது எப்படி சரியாக இருக்கும்? நான் நிறைய நியாயங்களை சொன்னோம்; அதை கோபமாக சொன்னோம். ஆனால், அவர்கள் சொன்னது எல்லாமே தவறு, ஆனால் அதை அவர்கள் அழுது கொண்டே சொன்னார்கள். அதனால் அவர்களுக்கு சிம்பதி வந்துவிட்டது,’’ என்று மாயாவிடம் பூர்ணிமா கூறினார். (Disney + Hotstar)

‘அவங்க செய்த தவறுகள், விதி மீறலுக்கு பயங்கரமா திட்டு வாங்குவாங்க என்று நினைத்தோம்; ஆனால், அதை வைத்து அவர்களை பாராட்டுகிறார்கள். விதிமீறி அவர்கள் கார்ட்ன் ஏரியாவுக்கு வந்து, அவர்களுக்கு தேவையானதை வாங்கிக் கொண்டு, உன்னை மன்னிப்பும் கேட்க வைத்தார்கள் என்று அவர்களை கமல் சார் புகழ்கிறார். எனக்கு புரியவே இல்ல.. இது எப்படி?’ என்று மாயாவிடம் பொங்கினார் பூர்ணிமா!

(2 / 5)

‘அவங்க செய்த தவறுகள், விதி மீறலுக்கு பயங்கரமா திட்டு வாங்குவாங்க என்று நினைத்தோம்; ஆனால், அதை வைத்து அவர்களை பாராட்டுகிறார்கள். விதிமீறி அவர்கள் கார்ட்ன் ஏரியாவுக்கு வந்து, அவர்களுக்கு தேவையானதை வாங்கிக் கொண்டு, உன்னை மன்னிப்பும் கேட்க வைத்தார்கள் என்று அவர்களை கமல் சார் புகழ்கிறார். எனக்கு புரியவே இல்ல.. இது எப்படி?’ என்று மாயாவிடம் பொங்கினார் பூர்ணிமா!(Disney + Hotstar)

‘நாம சரியா இருந்தது எப்படி தவறா போய் சேர்ந்தது?’ என்று மாயா கேட்க, ‘அது தான் இவங்க ட்ரிக்.. இவங்க அழுதே, சிம்பதியை காட்டி பண்ணிட்டாங்க. நீங்க மாயாவா செயல்பட்டிருந்தால், கடைசி வரை ஃப்ரஷ் கொடுத்திருக்க மாட்டீங்க.. நீங்க கேப்டனா இருந்ததால் தான் கடைசியில் கொடுத்தீங்க, அதுவும் ஒன்னுக்கு 10 கொடுத்தீங்க’ என்று மாயாவுக்கு நியாயம் கற்பித்தார் பூர்ணிமா.

(3 / 5)

‘நாம சரியா இருந்தது எப்படி தவறா போய் சேர்ந்தது?’ என்று மாயா கேட்க, ‘அது தான் இவங்க ட்ரிக்.. இவங்க அழுதே, சிம்பதியை காட்டி பண்ணிட்டாங்க. நீங்க மாயாவா செயல்பட்டிருந்தால், கடைசி வரை ஃப்ரஷ் கொடுத்திருக்க மாட்டீங்க.. நீங்க கேப்டனா இருந்ததால் தான் கடைசியில் கொடுத்தீங்க, அதுவும் ஒன்னுக்கு 10 கொடுத்தீங்க’ என்று மாயாவுக்கு நியாயம் கற்பித்தார் பூர்ணிமா.(Disney + Hotstar)

பூர்ணிமா-மாயா உரையாடல் நடந்து கொண்டிருக்க, ஐஸூ போன சோகத்தில் உடல்நலக் கோளாறு ஏற்பட்டு உறங்கிக் கொண்டிருந்தார் நிக்சன். ‘எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது’ என்பதைப் போல அவர்கள் உறங்கிக் கொண்டிருக்க, மாயாவும், பூர்ணிமாவும் இடையிடையே, ‘கரெக்ட் தானடா..’ என்று அவரையும் துணைக்கு அழைத்துக் கொண்டிருந்தனர். 

(4 / 5)

பூர்ணிமா-மாயா உரையாடல் நடந்து கொண்டிருக்க, ஐஸூ போன சோகத்தில் உடல்நலக் கோளாறு ஏற்பட்டு உறங்கிக் கொண்டிருந்தார் நிக்சன். ‘எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது’ என்பதைப் போல அவர்கள் உறங்கிக் கொண்டிருக்க, மாயாவும், பூர்ணிமாவும் இடையிடையே, ‘கரெக்ட் தானடா..’ என்று அவரையும் துணைக்கு அழைத்துக் கொண்டிருந்தனர். (Disney + Hotstar)

‘நம்ம நிறைய நல்லது பண்ணிருக்கோம்.. ஆனால் நம்மை தவறா புரொஜக்ட் பண்ணிருக்காங்க. விசித்ரா பண்ணதை ஏன் குறும்படம் போடல? இங்கே இவ்வளவு நடந்திட்டு இருக்கும் போது, அவங்க சிரிச்சுட்டு இருந்தாங்க,’’ என்று பூர்ணிமா கூற, ‘ஆனால், ஆடியன்ஸ் எல்லாத்தையும் பார்த்திருப்பாங்கல்ல.. அவங்க ஏன் அப்படி ரியாக்ட் பண்றாங்க?’’ என்று மாயா கேட்க, ‘அது தான், நாம சிரிச்சுட்டு சொன்னத, அவங்க அழுதுட்டு சொல்லி சிம்பதி வாங்கிட்டாங்க’ என்று பூர்ணிமாக கூறினார். 

(5 / 5)

‘நம்ம நிறைய நல்லது பண்ணிருக்கோம்.. ஆனால் நம்மை தவறா புரொஜக்ட் பண்ணிருக்காங்க. விசித்ரா பண்ணதை ஏன் குறும்படம் போடல? இங்கே இவ்வளவு நடந்திட்டு இருக்கும் போது, அவங்க சிரிச்சுட்டு இருந்தாங்க,’’ என்று பூர்ணிமா கூற, ‘ஆனால், ஆடியன்ஸ் எல்லாத்தையும் பார்த்திருப்பாங்கல்ல.. அவங்க ஏன் அப்படி ரியாக்ட் பண்றாங்க?’’ என்று மாயா கேட்க, ‘அது தான், நாம சிரிச்சுட்டு சொன்னத, அவங்க அழுதுட்டு சொல்லி சிம்பதி வாங்கிட்டாங்க’ என்று பூர்ணிமாக கூறினார். (Disney + Hotstar)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்