Beauty Tips : பட்டுப்போன்ற பளபளக்கும் முகம் வேண்டுமா? கரும்புள்ளிகளை நீக்க இதை மட்டும் செய்ங்க போதும்!
- Beauty Tips : சிலருக்கு முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள் முகப்பொலிவையே முற்றிலும் குலைக்கும். இதனால் அவர்களுக்கு மனஉளைச்சல் ஏற்படும்.
- Beauty Tips : சிலருக்கு முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள் முகப்பொலிவையே முற்றிலும் குலைக்கும். இதனால் அவர்களுக்கு மனஉளைச்சல் ஏற்படும்.
(1 / 6)
இந்த கிரீமை தினமும் இரவில் 15 நாட்கள் தடவினால் உங்கள் முகம் தங்கம்போல் ஜொலிக்கும். ரசாயனங்கள் கலந்து தயாரிக்கப்படும் கிரீம்களை வாங்கி பயன்படுத்துவதைவிட இது சிறந்தது.
(2 / 6)
கிராம்பு – சிறிதளவு
கற்றாழை ஜெல் – தேவையான அளவு
வைட்டமின் இ ஆயில் பில்ஸ் – 1
(மெடிக்கல்களில் கிடைக்கும்)
கிளிசரின் – ஒரு ஸ்பூன்
(நாட்டு மருந்து கடைகள் அல்லது மெடிக்கலில் கிடைக்கும்)
இனிப்பு பாதாம் எண்ணெய் – தேவையான அளவு
சர்க்கரை ஒரு ஸ்பூன்
(3 / 6)
கிராம்பை மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடித்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதை தண்ணீரில் சேர்த்து அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்கவிடவேண்டும்.
கொதித்த கலவையை அப்படியே ஆறவைத்துவிடவேண்டும். ஆறியவுடன், அதை வடிகட்டிக்கொள்ள வேண்டும். வெள்ளை துணியில் வைத்து வடிகட்டுவது சிறந்தது.
(4 / 6)
அந்த தண்ணீரில் இரண்டு ஸ்பூன் எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதில் கிளிசரின், கற்றாழை ஜெல், வைட்டமின் இ எண்ணெய் பில்ஸ் என அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்து, ஒரு காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து வைத்துக்கொண்டு மேலே கூறியதுபோல் பயன்படுத்த வேண்டும்.
(5 / 6)
வடிகட்டும்போது கிடைக்கும் சக்கையை பயன்படுத்தி ஒரு ஸ்கிரப் தயாரிக்க முடியும்.
அந்த பொடியில் ஒரு ஸ்பூன், சர்க்கரை ஒரு ஸ்பூன், இனிப்பு பாதாம் எண்ணெய் கால் ஸ்பூன், கிராம் கொதிக்க வைத்த தண்ணீர் தேவையான அளவு எடுத்து கலந்து, இந்த ஸ்கிரபை செய்துகொள்ள வேண்டும்.
மற்ற கேலரிக்கள்