தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Girl Opens Tea Stall: பிரிட்டிஷ் கவுன்சில் வேலையை விட்டு டீக்கடை வைத்த பெண்!

Girl Opens Tea Stall: பிரிட்டிஷ் கவுன்சில் வேலையை விட்டு டீக்கடை வைத்த பெண்!

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 17, 2023 02:23 PM IST

பிரிட்டிஷ் கவுன்சிலில் செய்த வேலையை விட்டுவிட்டு டீக்கடை தொடங்கிய இளம் பெண்ணின் கனவு குறித்து இங்கே காண்போம்.

ஷர்மிஸ்தா கோஷ்
ஷர்மிஸ்தா கோஷ்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்தியாவில் பெரும்பாலும் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் கனவு எப்போதும் ஒன்றுதான். நன்றாகப் படிக்க வேண்டும் நல்ல சம்பளத்திற்கு வேலைக்குச் செல்ல வேண்டும் என்பதுதான்.

குடும்பத்தில் இருக்கும் பெரியவர்கள் கூட சிறு வயதிலிருந்து இதனைச் சொல்லியே வளர்ப்பார்கள். அப்படி வளரும் இளைஞர்கள் சிறிது காலம் படித்த வேலைக்குச் சென்று விட்டு பின்னர் நமது கனவை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று நினைத்து முழு காலத்தையும் அந்த வேலையிலேயே செலவிட்டு விடுகிறார்கள்.

இப்படியே பலரின் வாழ்க்கை செல்ல தனது வேலையை ஒருவர் விட்டுவிட்டு கனவுகளுக்கான வேலையைத் தொடங்கியுள்ளார். அப்படி ஒரு சிறந்த சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது அது குறித்து இங்கே காண்போம்.

பிரிட்டிஷ் கவுன்சிலில் வேலை செய்த ஷர்மிஸ்தா கோஷ் என்ற பெண் ஒருவர் தனது வேலையை விட்டுவிட்டு சொந்தமாக டீக்கடை ஒன்றை ஆரம்பித்துள்ளார். இவர் டெல்லியில் ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டப் படிப்பை முடித்தவர்.

இவர் தனது வேலையை விட்டு விட்டு ஏன் டீக்கடை வைத்தார் எனப் பலருக்கும் கேள்வி எழும். இதுகுறித்து இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பிரிகேடியர் சஞ்சய் கண்ணா என்பவர் தனது லிங்க்டு இன் கணக்கில் முழுமையாக விளக்கியுள்ளார்.

அதில் அவர்,"டீக்கடை வைத்திருக்கும் ஷர்மிதா கோர்ஸ் ஆங்கிலத்தில் எம் ஏ பட்டத்தை முடித்தவர். பிரிட்டிஷ் கவுன்சிலில் வேலை பார்த்த இவருக்கு நாடு முழுக்க டீக்கடை கிளைகளை தொடங்க வேண்டும் என்பதே இலட்சியமாகும். இதற்காக அவர் தனது வேலையை இழந்து விட்டு வந்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு டெல்லி கான்ட்டின் கோபிநாத் பஜாரில் ஒரு சிறிய டீக்கடைக்கு சென்றபோது அங்குச் சிறப்பாக ஆங்கிலம் பேசும் பெண் ஒருவர் என்னை வரவேற்றார். அப்படி ஒரு நபரின் அந்த டீக்கடையில் யாரும் எதிர்பார்க்க மாட்டார்கள்.

அந்தப் பெண் தனது தோழி பாவனா ராவ் என்பவர் உடன் இணைந்து இந்த டீக்கடையை நடத்தி வருகிறார். அவரது தோழி பாவனா லூப்தான்சா ஏர்லைன்ஸில் பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவரும் இணைந்து இந்த டீக்கடையை நடத்தி வருகிறார்கள்.

இருவரும் இணைந்து மாலையில் இந்த டீக்கடையை நடத்தி வருகிறார்கள். உயர் படிப்பு நல்ல வேலை என யோசிக்காமல் பிடித்த வேலையைச் செய்ய வேண்டும் என்பதற்கு இவர்கள் எடுத்துக்காட்டாகும். பிடித்த வேலையை நீண்ட காலத்திற்குச் செய்து வந்தால் அதில் சிறந்து விடலாம்.

கனவை நோக்கிய சிறிய முயற்சிகளைச் செய்து அதன் பயணத்தைத் தொடங்குவதே இலக்கை அடையக்கூடிய முதல் முயற்சியாகும் என அவர் பதிவிட்டுள்ளார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்