தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Sabarimala Temple: மகர ஜோதி தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் கவனத்துக்கு…

Sabarimala temple: மகர ஜோதி தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் கவனத்துக்கு…

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Nov 29, 2022 09:01 AM IST

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மகர ஜோதி தரிசனத்துக்காக வரும் பக்தர்கள் அறிந்துகொள்ள வேண்டிய விபரங்களை தேவசம் போர்டு நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மகர ஜோதி தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் அறிந்து கொள்ளும் விபரங்கள் வெளியிடப்பட்டது
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மகர ஜோதி தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் அறிந்து கொள்ளும் விபரங்கள் வெளியிடப்பட்டது

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த ஆண்டுக்கான மகர விளக்கு பூஜைக்காக டிசம்பர் 30இல் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படும். வரும் 2023 ஜனவரி 14இல் மகர விளக்கு தரிசனம் நடைபெறுகிறது. இதன் பின்னர் ஜனவரி 20இல் கோயில் நடை சாத்தப்படும்.

இந்த நாள்களில் கோயிலில் தரிசனம் மேற்கொள்ள வருவோர் உடனடியாக முன்பதிவு செய்வதற்கு வசதியாக பல்வேறு பகுதிகளில் முன்பதிவு கவுண்டர்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, ஸ்ரீ கண்டேஸ்வரம் சிவன் கோயில் திருவனந்தபுரம், மகா கணபதி கோயில் கொல்லம், நிலக்கல் தர்ம சாஸ்தா கோயில், பந்தளம் பம்பை - விலாயானவட்டம், பத்தினம்திட்டா, ஆலப்புழா ரயில் நிலையம் செங்கனூர், எருமேலி கோயில் கோட்டயம், ஏற்றுமானூர், மகாதேவர் கோயில் வைக்கம், எர்ணாகுளம், பெரும்பாவூர், கீழில்லம், இடுக்கி, குமுளி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நாள்களில் மேற்கொள்ளப்படும் பூஜை கட்டணங்களின் விவரங்கள் பின்வருமாறு:

  • நெய் அபிஷேகம் - 1 தேங்காய் - ரூ. 10
  • அஷ்டாபிஷேகம் - ரூ. 6000
  • கணபதி ஹோமம் - ரூ. 375
  • உஷ பூஜை - ரூ. 1500
  • நித்ய பூஜை - ரூ. 4000
  • பகவதி சேவை - ரூ. 2500
  • களபாபிஷேகம் - ரூ. 38, 400
  • படி பூஜை - ரூ. 1, 37, 900
  • துலாபாரம் - ரூ. 625
  • புஷ்பாபிஷேகம் - ரூ. 12, 500
  • ஒற்றை கிரக பூஜை - ரூ. 100
  • மாலை/வடி பூஜை - ரூ. 25
  • நெல் பறை - ரூ. 200
  • மஞ்சள் பறை - ரூ. 400
  • தங்க அங்கி சார்த்தி பூஜை - ரூ. 15, 000
  • நீராஞ்சனம் - ரூ. 125
  • இருமுடி கட்டு நிறைத்தல் - ரூ. 300

இதையடுத்து காலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு நிர்மால்யம் அபிஷேகம் நடைபெறும். இதன் பின்னர் 3.30 மணிக்கு கணபதி ஹோமம், 7.30 மணிக்கு உஷ பூஜை, பின் காலை 11 வரை நெய் அபிஷேகம், 11.30 வரை அஷ்டாபிஷேகம், 12.30க்கு உச்சி கால பூஜை நடைபெறும்.

இதைத்தொடர்ந்து 1 மணிக்கு நடை சாத்தப்பட்டு மாலை 3 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு, 6.30 மணிக்கு தீபா ஆராதனை, 7 முதல் 9.30 வரை புஷ்பா அபிஷேகம், 9.30 மணிக்கு இரவு பூஜை, 11 மணிக்கு ஹரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும்.

  • சபரிமலையில் பிளாஸ்டிக் முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளதால், பக்தர்கள் தங்களது இருமடிக்கட்டில் பிளாஸ்டிக் பொருள்கள் வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும்.
  • புண்ணிய நதியான பம்பையை அசுத்தம் செய்யாமல் பாதுகாப்பதை ஒவ்வொரு பக்தரும் கடைப்பிடிக்க வேண்டும். அங்கு உடைகள் உள்பட எந்த பொருள்களையும் வீச வேண்டாம்.
  • குப்பைகள் குப்பை தொட்டிகளில் மட்டும் வீச வேண்டும். வேறு இடங்களில் வீசுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். கழிப்பறை பயன்படுத்தி பம்பை, சன்னிதானம் மற்றும் மலை ஏறும் வழிகளை தூய்மையாக பாதுகாக்க வேண்டும்.
  • மது உள்பட எவ்வித போதை பொருள்களையும் பயன்படுத்தகூடாது. சன்னிதானம், வனப்பாதை உள்பட இடங்களில் புகைபிடிக்க கூடாது. ஆயுதங்கள், பட்டாசுகள் உள்பட வெடிபொருள்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • எளிதில் தீபற்றக்கூடிய பொருள்கள், ஸ்டவ், சமையல் எரிவாயு போன்றவற்றை சன்னிதானத்தில் பயன்படுத்த அனுமதி இல்லை.
  • பாதுகாப்பு பரிசோதனைகள் உள்ள இடங்களில் பக்தர்கள் பரிசோதனைக்கு உட்பட வேண்டும். பக்தர்கள் தங்களுக்கு வேண்டிய உதவிக்கு காவல்துறையை தொடர்பு கொள்ளலாம்.
  • சந்தேகத்துக்கு இடமான பொருள்கள் ஏதாவது தென்பட்டால் காவல்துறையினடம் விவரம் தெரிவிக்க வேண்டும். மலைப்பாதையில் வழி தவறி சென்றால் புறக்காவல் நிலையத்தின் உதவியை நாட வேண்டும்.
  • வயாதனவர்கள், குழந்தைகள் தங்களது கழுத்தில் முகவரி மற்றும் தொலைப்பேசி எண்ணுடன் கூடிய அடையாள அட்டை அணிய வேண்டியது அவசியமாகும்.
  • பக்தர்களுக்காக ஏற்படுத்தப்பட்ட ஆக்சிஜன் பார்லர்கள், மருத்துவ மையங்கள் சேவையை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். பம்பை, நிலக்கல்லில் அவரச சிகிச்சை வசதிகளுடன் கூடிய நடமாடும் மருத்துவ மையங்கள் பகர்தர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது 

IPL_Entry_Point