தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Roger Moore Death Anniversary : 4 மனைவிகள், நல்லெண்ணதூதர், பாண்ட் கதாநாயகன் ரோஜர் முரின் பர்ஸ்னல் முகம்!

Roger Moore Death Anniversary : 4 மனைவிகள், நல்லெண்ணதூதர், பாண்ட் கதாநாயகன் ரோஜர் முரின் பர்ஸ்னல் முகம்!

Priyadarshini R HT Tamil
May 23, 2023 07:00 AM IST

Roger Moore Death Anniversary : உலகளவில் ரசிகர்களை கொண்ட ஜேம்ஸ்பாண்ட் 007 படத்தில் பல்வேறு கதாநாயகர்கள் நடித்திருந்தாலும், ரோஜர் முர்ருக்கு அதில் தனி இடம் உண்டு. அதிக பாண்ட் படங்களில் நடித்தவர் என்ற சிறப்பைபெற்றவரும் இவர். இவரது நினைவு நாளில் அவர் குறித்த சில தகவல்கள் இங்கே!

ஜேம்ஸ் பாண்ட் படத்தின் கதாநாயகர்களுள் ஒருவரான ரோஜர் முர்
ஜேம்ஸ் பாண்ட் படத்தின் கதாநாயகர்களுள் ஒருவரான ரோஜர் முர்

ட்ரெண்டிங் செய்திகள்

சின்னத்திரையில், இவர் சைமன் டெம்ப்ளார் என்பதில் முக்கிய கதாபாத்திரத்திலும், தி செயின்ட என்ற மிஸ்ட்ரி திரில்லர் சீரிஸில் செயின்ட் என்ற டைட்டில் கதாபாத்திரத்தில் நடித்தார். இவை பிரிட்டிஷ் சீரிஸ்கள். இவைத்தவிர அமெரிக்க சீரிஸ்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

இவர் 1991ம் ஆண்டில் யுனிசெஃப்பின் நல்லெண்ண தூதராகவும், தொண்டு சேவை தூராகவும் 2003ம் ஆண்டில் குயின் எலிசபெத்தால் நியமிக்கப்பட்டார். 2007ம் ஆண்டில் ஹாலிவுட் வாக் ஆஃப் ஃபேமில் ஸ்டார் விருதையும் வென்றார்.

இவர் லண்டன் நகரில் உள்ள ஸ்டாக்வெல்லில் 1927ம் ஆண்டு அக்டோபர் 14ம் தேதி பிறந்தார். இவரது தந்தை ஜார்ஜ் ஆல்பிஃரெட் மூர், போலீஸ் அதிகாரி ஆவார். இவரது தாய் நமது நாட்டின் கல்கத்தாவில் வசித்த ஆங்கில குடும்பத்தில் பிறந்தவர். முதலில் ஒரு அனிமேட்டராக தனது வாழ்க்கையை துவக்கினார். பின்னர் திரைப்பட இயக்குனர் பிரியன் டெஸ்மாண்ட் ஹர்ஸ்ட் என்பவரின் வீட்டில் நடந்த திருட்டை கண்டுபிடிக்கச் சென்றபோது, மூர் அந்த இயக்குனருக்கு அறிமுகமானார். இப்படியாக அவரின் திரை வாழ்க்கை துவங்கியது. பின்னர் ராயல் டிராமா அகாடமியில் அவர் நடிப்பு பயின்றபோதுதான் அவருக்கு பாண்ட் படங்களில் நடித்த லூயிஸ் மேக்ஸ்வெல்லின் நட்பு கிடைத்தது.

அவர் பின்னர் அலெக்ஸாண்டர் கொர்டாவின் பர்பெஃக்ட் ஸ்ட்ரேஞ்சர்ஸ் படத்தில் முதன்முதலாக நடித்தார். இப்படியாக இவர் ஜேம்ஸ்பாண்ட் படங்களில் நடித்து புகழ்பெற்றார்.

இவர் டிராமா 1946ம் ஆண்டு அகாடமியில் சந்தித்த டூர்ன் வேன் ஸ்டீன் என்ற இவரை விட 6 வயது மூத்த பெண்மணியை திருமணம் செய்துகொண்டார். கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தார். பின்னர் அவரைவிட 12 வயது மூத்த டோரதி ஸ்குயிர்ஸ் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். அவரையும் பிரிந்து இத்தாலிய நடிகை லூயிசா மட்டோயிலி மூன்றாவதாக திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவருக்கும் மூன்று குழந்தைகள் பிறந்தனர். அவரையும் பிரிந்த மூர் கிறிஸ்டினா கிகி தோல்ஸ்ட்ரப் என்பவரை திருமணம் செய்துகொண்டார். பின்னர் கேன்சரால் 2017ம் ஆண்டு மே 23ம் தேதி இறந்தார்.

அவரது நினைவு நாளில் அவர் குறித்து சில தகவல்களை ஹெச்.டி தமிழ் பகிர்ந்துகொள்கிறது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்