தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Sharad Pawar Resing: ’அரசியல் ஓய்வை மறுபரிசீலனை செய்யுங்கள்’ சரத்பவாருக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

Sharad Pawar Resing: ’அரசியல் ஓய்வை மறுபரிசீலனை செய்யுங்கள்’ சரத்பவாருக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

Kathiravan V HT Tamil
May 05, 2023 11:42 AM IST

2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு அரசியலில் இருந்து ஓய்வு பெறும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தி உள்ளார்.

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் - தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் - தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்

ட்ரெண்டிங் செய்திகள்

சரத்பவாரின் இந்த முடிவு மகாராஷ்டிரா மட்டுமின்றி தேசிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது. இனி எந்தத் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்றும் அவர் அறிவித்த அவர், என்சிபியின் எதிர்காலத்தை தீர்மானிக்க குழு அமைக்குமாறு கூறியதுடன், அந்தக் குழுவில், பிரபுல் படேல், சுனில் தட்கரே, பிசி சாக்கோ, நர்ஹரி ஜிர்வால், அஜித் பவார், சுப்ரியா சுலே, ஜெயந்த் பாட்டீல், சகன் புஜாப்ல், திலீப் வால்ஸ்-பாட்டீல், அனில் தேஷ்முக், ராஜேஷ் தோபே, ஜிதேந்திர அவ்ஹாத், ஹசன் முஷ்ரிஃப், தனன்ய் ஆகியோர் இடம் பெற வேண்டும் எனவும் பரிந்துரைத்தார்.

இவரது திடீர் அறிவிப்பை சற்றும் எதிர்பாராத என்சிபி கட்சியினர் முடிவை திரும்பப் பெறுமாறு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகும் முடிவினை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு முதலமச்சர் மு.க.ஸ்டாலினும் கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக ட்விட் செய்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு அரசியலில் இருந்து ஓய்வு பெறும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தி உள்ளார்.

அரசியல் வாழ்க்கை

பவார் குடும்பம் என்றழைக்கப்படும் செல்வாக்கு மிக்க அரசியல் குடும்பத்தை பின்னணியாகக் கொண்டவர் சரத் பவார். மகாராஷ்டிர அரசியலில் முக்கியமான அரசியல் தலைவர்களில் ஒருவர்.

இவரது மகன் சுப்ரியா சுலே மக்களவைத் தொகுதி எம்.பியாக உள்ளார். மகாராஷ்டிர சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவராக உள்ள அஜித் பவார் இவரது குடும்பத்தைச் சேர்ந்தவர் தான்.

இந்தியாவில் கிரிக்கெட்டை நிர்வகித்துவரும் பிசிசிஐ அமைப்பின் தலைவராகவும் சரத் பவார் பதவி வகித்திருக்கிறார்.

2005 முதல் 2008ம் ஆண்டு வரை அவர் பிசிசிஐ தலைவராக இருந்தார். ஐசிசி தலைவராக 2010 முதல் 2012 வரை இருந்தார். அதைத் தொடர்ந்து மும்பை கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக 2013 முதல் 2017 வரை பதவி வகித்தார் சரத் பவார்

2017இல் இந்திய அரசு இவருக்கு பத்ம விபூஷன் விருதை வழங்கி சிறப்பித்தது. பத்ம விபூஷன் நாட்டின் சிறந்த குடிமகனுக்கு வழங்கப்படும் இரண்டாவது மிக உயரிய விருதாகும்.

குடும்பம்

சரத் பவாரின் தந்தை கோவிந்த்ராவ் பவார். தாயார் சாரதாபாய் பவார். இந்த தம்பதியருக்கு 11 குழந்தைகள். அவர்களில் ஒருவர் தான் சரத் பவார். புணேவில் கல்வி பயின்றார் சரத் பவார். படிப்பில் சராசரி மாணவராக இருந்தாலும், அரசியலில் தீவிர செயல்பாடு கொண்டிருந்தார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்