தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  Rahul Gandhi To Vacate Mp Bungalow

Rahul Gandhi : நான் பங்களாவை காலி செய்கிறேன்.. ராகுல் காந்தி கடிதம்!

Divya Sekar HT Tamil
Mar 28, 2023 01:07 PM IST

விதிமுறைகளுக்கு உட்பட்டு பங்களாவை காலி செய்வதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்

ராகுல் காந்தி (கோப்புப்படம்)
ராகுல் காந்தி (கோப்புப்படம்) (PTI)

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த நிலையில் 2 ஆண்டுகள் தண்டணை விதிக்கப்பட்டதை சுட்டிக்காட்டி ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்டது. இதனால் ராகுல் காந்தி மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட வயநாடு லோக் சபா தொகுதி காலியானதாகவும் மக்களவை செயலகத்தால் அறிவிக்கப்பட்டது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இது பாஜக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை எனக்கூறி காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். காங்கிரஸின் கூட்டணி கட்சிகள் மற்றும் பாஜக எதிர்ப்பு நிலைப்பாட்டில் உள்ள கட்சிகளும் இதனை கடுமையாக சாடி வருகின்றனர்.

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, 12, துக்ளக் லேனில் உள்ள அரசு அவருக்கு ஒதுக்கியிருந்த பங்களாவை அவர் ஏப்ரல் 22ம் தேதிக்குள் காலி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. அவர் லோக்சபா உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட சில நாட்களில் அவர் அரசு குடியிருப்பை காலிசெய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இன்று ராகுல் காந்தி லோக்சபா துணை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், ”12 துக்ளக் லேன் பங்களாவை காலி செய்யும்படி நேற்று (மார்ச் 27) மக்களவை வீட்டுக் குழுவில் இருந்து நோட்டீஸ் அனுப்பியதற்கு நன்றி. கடந்த 4 முறை லோக்சபா உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டேன். நான் இங்கு கழித்த காலம் மகிழ்ச்சியானது. உங்கள் கடித்தத்தில் குறிப்பிட்டபடி விதிமுறைகளுக்கு உட்பட்டு வீட்டை காலி செய்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்