SRH vs RCB Result: ஆறு தோல்விக்கு பிறகு ன் ரைசர்ஸ் கோட்டையில் வெற்றியை சுவாசித்த ஆர்சிபி - ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு
பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்திலும் ஆர்சிபி வீரர்கள், சன் ரைசர்ஸ் அணிக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தினார்கள். இதன் விளைவாக ஆறு தொடர் தோல்விகளுக்கு பிறகு வெற்றியின் பக்கம் திரும்பியுள்ளது.

ஐபிஎல் 2024 தொடரின் 41வது போட்டி சன் ரைசர்ஸ் ஹைதராபாத் - ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணிகளுக்கு இடையே ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டி தொடங்குவதற்கு முன் சன்ரைசர்ஸ் அணி 7 போட்டிகளில் 5 வெற்றிகளை பெற்று மூன்றாவது இடத்திலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு 8 போட்டிகளில் ஒரு வெற்றியை மட்டும் பெற்றும் 10வது இடத்திலும் இருந்தது. ஆர்சிபி அணிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாக இது அமைந்திருந்தது.
ஆர்சிபி அதிரடி
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் டூ பிளெசிஸ் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இதைத்தொடர்ந்து முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக விராட் கோலி 51, ராஜத் பட்டிதார் 50, கேமரூன் க்ரீன் 36, டூ பிளெசிஸ் 25 ரன்கள் எடுத்தனர்.