Prajwal Revanna Case: தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு மேலும் சிக்கல்..பிடியை இறுக்கும் கர்நாடக போலீஸ்!
Prajwal Revanna case: தலைமறைவாக உள்ள எம்.பி பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக கர்நாடக சிறப்பு புலனாய்வுக் குழு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.

பாலியல் சர்ச்சையில் சிக்கிய முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் தொகுதி எம்.பியுமான பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக கர்நாடக சிறப்பு விசாரணைக் குழு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
முன்னாள் பிரதமர் எச்.டி.தேவகவுடாவின் பேரன் ரேவண்ணா, ஜெர்மனியில் இருப்பதாக கூறப்படுகிறது. ரேவண்ணாவை கைது செய்ய அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விமான நிலையங்கள், துறைமுகங்கள் அல்லது எல்லை சோதனைச் சாவடிகள் உட்பட இந்தியாவின் எந்தவொரு குடியேற்ற இடத்திலும் வந்தவுடன் தடுப்புக்காவலை அவர் எதிர்கொள்வார்.
"பிரஜ்வால் ரேவண்ணா வெளிநாடு சென்ற தகவல் கிடைத்ததை அடுத்து லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. லுக்அவுட் நோட்டீஸ் குறித்து அனைத்து துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களுக்கும் நாங்கள் தெரிவித்துள்ளோம்" என்று கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வரா வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.