தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Syrian Baby: நிலநடுக்கத்தில் மீண்ட குழந்தை - தன் மகளாக்கிய மருத்துவர்!

Syrian Baby: நிலநடுக்கத்தில் மீண்ட குழந்தை - தன் மகளாக்கிய மருத்துவர்!

Suriyakumar Jayabalan HT Tamil
Feb 11, 2023 01:07 PM IST

துருக்கி இடர்பாடுகளிலிருந்து மீட்டெடுக்கப்பட்ட ஐந்து மாத குழந்தையை மருத்துவர் ஒருவர் தன் குழந்தையாகத் தத்தெடுத்துக் கொண்டார்.

சிரியா குழந்தை
சிரியா குழந்தை

ட்ரெண்டிங் செய்திகள்

சிரியா பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏராளமான முக்கிய இடங்கள் தரைமட்டமாகியுள்ளன. இதில் ஜான்டரிஸ் பகுதியில் உள்ள மருத்துவமனையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் குழந்தையைப் பிரசவித்த பிறகு உயிரிழந்துள்ளார்.

அந்த இடிபாடுகளில் சிக்கி கர்ப்பிணிப் பெண் உயிரிழந்துள்ளார். ஆனால் அவருக்குப் பிறந்த பெண் குழந்தை உயிரோடு இருந்துள்ளார். இருவருக்கும் இணைப்பாக இருந்த தொப்புள்கொடி அறுபடாமலேயே இருந்துள்ளது. அந்த குழந்தையை மீட்புப் படையினர் லாபகரமாக மீட்டனர்.

அருகிலிருந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அந்த குழந்தை உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. தற்போது நலமாக இருக்கும் அந்த குழந்தைக்கு சமூக வலைத்தளங்களில் அனுதாபங்கள் அதிகரித்து வருகின்றன.

உலகம் முழுவதும் கவனத்தை உயர்த்த அந்த குழந்தையைப் பலரும் தத்தெடுக்க முயற்சி செய்து வருகின்றனர். ஆனால் தற்போது அந்த குழந்தையைப் பராமரித்து வரும் மருத்துவர் காலித் அத்தியா என்பவர் அந்த குழந்தைக்கு அயா எனப் பெயரிட்டுள்ளார்.

இந்த பெயருக்கு அரபு மொழியில் அதிசயம் என்று பொருள். இந்த குழந்தையைத் தத்தெடுக்க உலகம் முழுவதும் ஆர்வம் காட்டினாலும் அந்த மருத்துவர், யாருக்கும் தர மாட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இந்த மருத்துவர்," ஐந்து மாத இந்த பெண் குழந்தையை என் குழந்தைகளோடு நான் சொந்த குழந்தையாக வளர்க்கப் போகிறேன். தற்போது எனது மனைவி தாய்ப்பால் கொடுத்து அவரை வளர்த்து வருகிறார். அவளும் என் குழந்தை தான். நான் அவரை சிறப்பாக வளர்க்கப் போகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்