தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Video: சிறுநீர் கழித்து அவமதிக்கப்பட்ட இளைஞர்..நேரில் அழைத்து காலை கழுவிய ம.பி. முதல்வர்!

Video: சிறுநீர் கழித்து அவமதிக்கப்பட்ட இளைஞர்..நேரில் அழைத்து காலை கழுவிய ம.பி. முதல்வர்!

Karthikeyan S HT Tamil
Jul 06, 2023 12:33 PM IST

Madhya Pradesh: முகத்தில் சிறுநீர் கழித்து அவமதிக்கப்பட்ட மத்தியப்பிரதேச பழங்குடி இளைஞரின் கால்களை கழுவி முதல்வர் சிவராஜ் சிங் செளகான் மரியாதை செய்தார்.

பழங்குடி இளைஞரின் கால்களை கழுவி முதல்வர் சிவராஜ் சிங் செளகான் மரியாதை செய்தார்.
பழங்குடி இளைஞரின் கால்களை கழுவி முதல்வர் சிவராஜ் சிங் செளகான் மரியாதை செய்தார்.

ட்ரெண்டிங் செய்திகள்

மத்தியபிரதேச மாநிலம் சித்ஹி மாவட்டத்தில் சாலையோரம் உட்கார்ந்திருந்த பழங்குடியின தொழிலாளி தேஷ்பத் ரவத் முகத்தில் நபர் ஒருவர் சிறுநீர் கழித்தார். இந்த கொடூர சம்பவத்தின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலானது. இதனைத்தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் அதே பகுதியைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏவின் நெருங்கிய உறவினரும், பாஜக பிரமுகருமான பர்வேஷ் சுக்லா என்பதை கண்டுபிடித்தனர்.

இதனிடையே, பர்வேஷ் சுக்லா தலைமறைவான நிலையில் அவரை கைது செய்ய போலீஸார் தீவிர நடவடிக்கை எடுத்தனர். மேலும், இந்த விவகாரத்தில் குற்றவாளி மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் என மத்தியபிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செளகான் அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து பாஜக நிர்வாகி பர்வேஷ் சுக்லாவை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் போலீசார் நேற்று கைது செய்தனர். அதன்பிறகு ரேவா மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டார். மேலும், மாநில அரசின் உத்தரவின் படி அவரின் வீட்டின் ஒரு பகுதியை அதிகாரிகள் நேற்று புல்டோசர் கொண்டு இடித்து தள்ளினர்.

இந்தநிலையில், முகத்தில் சிறுநீர் கழித்து அவமதிக்கப்பட்ட பழங்குடியின இளைஞரை போபாலில் உள்ள தனது இல்லத்திற்கு வரவழைத்து பேசிய முதல்வர் சிவராஜ் சிங் செளகான் அவரின் காலை கழுவினார். பின்னர் அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து மன்னிப்பும் கேட்டுக்கொண்டார்.

 

இது குறித்து பழங்குடி இளைஞரிடம் சிவராஜ் சிங் செளகான் கூறுகையில், அந்த வீடியோவைப் பார்த்து நான் வேதனைப்பட்டேன். நான் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். மக்கள் எனக்கு கடவுள் போன்றவர்கள் என்றார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்