New Election Commissioners: புதிய தேர்தல் ஆணையர்களாக ஞானேஷ் குமார், எஸ்.எஸ்.சந்து நியமனம்
New Election Commissioners: புதிய தேர்தல் ஆணையர்களாக ஞானேஷ்குமார், எஸ்.எஸ்.சந்து நியமனம் செய்யப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
New Election Commissioners: புதிய தேர்தல் ஆணையர்களாக ஞானேஷ்குமார், எஸ்.எஸ்.சந்து நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் அடுத்த புதிய தேர்தல் ஆணையர்களை தேர்ந்தெடுக்கும் கூட்டம் நடைபெற்றது. அதில் கேரள மாநிலத்தினைப் பூர்வீகமாகக் கொண்ட ஞானேஷ் குமார் மற்றும் பஞ்சாப் மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட எஸ்.எஸ்.சந்து எனப்படும் சுக்விந்தர் சிங் சந்து ஆகியோரை புதிய தேர்தல் ஆணையர்களாக நியமிக்க வேண்டும் என்று நெருங்கிய வட்டாரங்கள் வியாழக்கிழமை உறுதிப்படுத்தின.
இது குறித்து பேசிய மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, "இந்த குழுவில், அரசுக்கு பெரும்பான்மை உள்ளது. கேரளாவைச் சேர்ந்த ஞானேஷ் குமார் என்பவரும், பஞ்சாபைச் சேர்ந்த சந்து என்பவரும் தேர்தல் ஆணையர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற தேர்வுக் குழுவில் மக்களவையில் காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மற்றும் பிற தொழிற்சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அப்போது பேசப்பட்டு எடுக்கப்பட்ட முடிவுகளைப் பற்றி, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பத்திரிகையாளர்களிடம் கூறினார். எனினும், தேர்தல் ஆணையாளர்களை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்ம் முறைப்படி அறிவிப்பார்.
அனுப் சந்திர பாண்டே ஓய்வு மற்றும் அருண் கோயலின் திடீர் ராஜினாமா ஆகியவற்றால் ஏற்பட்ட காலியிடங்களை நிரப்ப மார்ச் 15ஆம் தேதிக்குள் இரண்டு தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்பட வாய்ப்புள்ளது என்று தேர்தல் ஆணையத்திற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.
கூட்டத்திற்கு முன்னதாக கூட்டத்திற்கான அனைத்து குழு உறுப்பினர்களுக்கும் திருத்தப்பட்ட தகவல் அனுப்பப்பட்டதாக, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மற்றும் அவரது சகாக்கள் தெரிவித்தனர். முன்னதாக மார்ச் 15ஆம் தேதி மாலை 6 மணிக்கு இந்த சந்திப்பு திட்டமிடப்பட்டிருந்தது.
மக்களவைத் தேர்தலுக்கான அட்டவணையை தேர்தல் ஆணையம் அறிவிப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு, அருண் கோயல் கடந்த வாரம் ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மார்ச் 9ல் ஏற்றுக்கொண்டார். அதை அறிவிக்க மத்திய சட்ட அமைச்சகம் அறிவிப்பை வெளியிட்டது. இதையடுத்து, தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தேர்தல் ஆணையத்தின் ஒரே உறுப்பினரானார்.
முன்னதாக, அருண் கோயல் ராஜினாமா செய்ததற்கான காரணம் இன்னும் தெரியவில்லை. மக்களவைத் தேர்தல் ஆயத்தங்கள் உச்சத்தில் இருக்கும் நிலையில் அருண் கோயல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறவுள்ள தேர்தலுக்கான தயார்நிலையை சரிபார்க்க குழுக்கள் மாநிலங்களுக்கு வருகை தந்தாலும், தேர்தல் தேதிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
மார்ச் 8ஆம் தேதி, தேர்தல் ஆணையம், மக்களவைத்தேர்தல் தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் ரயில்வே அதிகாரிகளுடன் நாடு முழுவதும் பாதுகாப்புப் பணியாளர்களை நிறுத்துவது மற்றும் நகர்த்துவது குறித்து பாதுகாப்புக் கூட்டத்தை நடத்தியது.
முன்னதாக, மற்றொரு தேர்தல் ஆணையர் அசோக் லவாசா 2020ஆம் ஆண்டு ஆகஸ்டில் தேர்தல் ஆணையர் பதவியை ராஜினாமா செய்தார். கடந்த மக்களவைத் தேர்தலின் போது தேர்தல் ஆணையம் எடுத்த பல்வேறு தேர்தல் நடத்தை விதிமீறல் முடிவுகள் குறித்து அவர் கருத்து வேறுபாடு கருத்துகளை சொல்லியிருந்தார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9