Gujarat: ஓரினச்சேர்க்கையால் வந்த வினை.. பார்சல் அனுப்பி காதலியின் கணவர், மகளை கொன்ற பெண்! - குஜராத்தில் பயங்கரம்!
படுகாயம் அடைந்த அவரது குழந்தைகள் வடலியில் அருகே உள்ள மருத்துமனைக்கு அவசரகதியாக கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சைப் பெற்ற பிறகு, அவர்கள் அங்கிருந்து ஹிம்மத் நகர் சிவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்

குஜராத்தில் பார்சல் வெடித்து தந்தை மகள் பலி!
குஜராத்தில், அடையாளம் தெரியாத நபரிடம் இருந்து பெற்ற பார்சல் வெடித்ததில், தந்தை மகள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
குஜராத் மாநிலம் சபர்கந்தா மாவட்டம், வேதா கிராமத்தைச் சேர்ந்தவர் ஜிதேந்திரா வன்சாரா (33). இவரது வீட்டிற்கு நேற்று அடையாளம் தெரியாத நபர் ஒருவர், பார்சல் ஒன்றை கொண்டு வந்து கொடுத்திருக்கிறார்.
அந்த பார்சலை பிரித்து பார்த்த போது, அதில் எலக்ரானிக் பொருள் ஒன்று இருந்து இருக்கிறது. இதனையடுத்து ஜிதேந்திரா குடும்பம் அதில் மின்சாரம் கொடுக்க, அது வெடித்து இருக்கிறது. இந்த சம்பவத்தில் ஜிதேந்திரா வன்சாரா சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார்.