தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Ht Elections Story: ’நாடாளுமன்றத் தேர்தல் 1957’ 2வது முறை பிரதமர் ஆன நேரு! முதல் முறை எம்.பி ஆன வாஜ்பாய்!

HT Elections Story: ’நாடாளுமன்றத் தேர்தல் 1957’ 2வது முறை பிரதமர் ஆன நேரு! முதல் முறை எம்.பி ஆன வாஜ்பாய்!

Kathiravan V HT Tamil
Jan 31, 2024 06:00 AM IST

”Parliamentary Elections 1957: இன்றைய ஆளும் பாஜகவின் தாய் அரசியல் அமைப்புகளில் ஒன்றாக கருதப்படும் பாரதீய ஜனசங்கதின் எம்.பிக்கள் எண்ணிக்கை 3இல் இருந்து 4ஆக அதிகரித்தது”

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் வரலாறு 1957
இந்திய நாடாளுமன்றத் தேர்தல் வரலாறு 1957

ட்ரெண்டிங் செய்திகள்

நாடு விடுதலை அடைந்த பிறகு 1950 ஜனவரி 26ஆம் ஆண்டு இந்தியா தன்னை குடியரசு நாடாக அறிவித்துக் கொண்டது. முதல் முறையாக சாதி, மதம், இனம், மொழி, பாலினம், சமூக, உள்ளிட்ட எந்த வித பேதமும் இன்றி 21 வயது நிரம்பிய இந்தியர்கள் அனைவருக்கும் வாக்குரிமையை இந்தியக் குடியரசு வழங்கியது.

முதல் நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி வெற்று பெற்று ஆட்சி அமைத்து நேரு பிரதமர் ஆனார். 

1957ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி முதல் ஜூன் 9ஆம் தேதி வரை இந்தியாவின் இரண்டாவது பொதுத்தேர்தல் நடத்தப்பட்டது. இதில் மொத்தமிருந்த 494 தொகுதிகளில் 371 தொகுதிகளை கைப்பற்றி காங்கிரஸ் இரண்டாவது முறையாக ஆட்சியை பிடித்தது. 

மேலும் மக்களிடம் ஏற்பட்ட நம்பிக்கை காரணமாக காங்கிரஸ் கட்சியின் வாக்கு சதவீகிதம் 45 சதவீகிதத்தில் இருந்து 48 சதவீகிதமாக அதிகரித்தது. 

அடுத்ததாக 27 இடங்களை கைப்பற்றி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாவது கட்சியாக உருவெடுத்தது. பிரஜா சோஷியலிஸ்ட் கட்சி 19 இடங்களை வென்றிருந்தது. 

இன்றைய ஆளும் பாஜகவின் தாய் அரசியல் அமைப்புகளில் ஒன்றாக கருதப்படும் பாரதீய ஜனசங்கதின் எம்.பிக்கள் எண்ணிக்கை 3இல் இருந்து 4ஆக அதிகரித்தது. பல்ராம்பூர் மக்களவை தொகுதியில் இருந்து முதல் முறையாக அடல்பிகாரி வாஜ்பாய் எம்.பியாக நாடாளுமன்றத்திற்கு நுழைந்தார். மற்றொரு இந்து ஓட்டுக்கள் சார்ந்த கட்சியான இந்து மகாசபைக்கு அதன் உறுப்பினர்கள் எண்ணிக்கை 4இல் இருந்து ஒன்றாக குறைந்திருந்தது. 

அதிகபட்ச அளவாக 42 சுயேச்சைகள் இந்த தேர்தலில் எம்.பியாக வென்று இருந்ததனர். எதிர்க்கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு இருந்த எம்.பிக்கள் எண்ணிக்கையை விட சுயேச்சை சின்னத்தில் போட்டியிட்டு வென்ற எம்.பிக்களே அதிகமாக இருந்தது.

தமிழ்நாட்டை பொறுத்தவரை முதல் முறையாக தேர்தலை சந்திதித்த திமுக 15 எம்.எல்.ஏக்களை வென்று இருந்தது. மேலும் திருவண்ணாமலை தர்மலிங்கம் போன்றோர் எம்.பியாகவும் தேர்வாகினர். 

ஆனால் திமுக சந்தித்த முதல் தேர்தல் என்பதால் பலரும் சுயேச்சை சின்னங்களில் ஒன்றான உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டனர். அச்சின்னம் கிடைக்காதவர்கள் வேறு சின்னத்தை தேர்வு செய்து தேர்தலை சந்தித்தனர். இந்திய மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் ஜவஹர்லால் நேரு இரண்டாவது முறையாக பிரதமர் ஆனார். 

IPL_Entry_Point