தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Greaves Mobility: புதிய வசதிகளுடன் களமிறங்கிய Ampere Primus

Greaves Mobility: புதிய வசதிகளுடன் களமிறங்கிய Ampere Primus

Suriyakumar Jayabalan HT Tamil
Feb 22, 2023 12:07 PM IST

கிரேவ்ஸ் மொபிலிட்டி நிறுவனம் புதிய Ampere Primus எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் செய்துள்ளது.

Ampere Primus எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
Ampere Primus எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

ட்ரெண்டிங் செய்திகள்

தற்போது முன்னணி நிறுவனங்களும் எலக்ட்ரிக் வாகன தயாரிப்பில் மிக வேகமாக செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் கிரேவ்ஸ் மொபிலிட்டி என்ற நிறுவனம் தனது புதிய Ampere Primus எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் செய்துள்ளது.

இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் புதிய டூயல் கலர் டோன் ஆப்ஷனோடு வெளியாகி உள்ளது. இதற்கு தற்போது 499 ரூபாய் முன்பதிவு தொகையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது குறைந்த கால சலுகையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு தொழில்நுட்ப வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

இதன் சிறப்பம்சங்கள்

  • இந்த ஸ்கூட்டர் Himalayan white, Havelock blue, buck black, royal orange என நான்கு வண்ணங்களில் கிடைக்கின்றன.
  • இந்த ஸ்கூட்டரின் எக்ஸ் ஷோரூம் விலையானது 1,09,900 லட்சம் ரூபாயிலிருந்து தொடங்குகிறது.
  • இந்த ஸ்கூட்டர் Ampere நிறுவனத்தின் சிறந்த ஸ்கூட்டர் ஆக கூறப்படுகிறது. மேலும் இதனை பல்வேறு பயணங்களுக்கு பயன்படுத்தலாம் எனவும் கூறப்படுகிறது.
  • இந்த ஸ்கூட்டர் குறைவான விலையில் அதிக டெக்னாலஜி வசதிகளில் கொண்டுள்ளது. இது கட்டாயம் வெற்றி அடையும் என நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இதில் 3KWH LFP பேட்டரி வசதி கொடுக்கப்பட்டுள்ளது. இதனை ஒரு முறை சார்ஜ் செய்தால் 100 கிமி வரைச் செல்லும் எனக் கூறப்படுகிறது.
  • இதன் அதிகபட்ச வேகம் 77 KPH எனக் கூறப்படுகிறது. இது 5 நொடிகளில் 40 கிலோமீட்டர் வேகத்தை எட்டிவிடும்.
  • இதில் Eco, City, Power, Reverse என நான்கு ரைட் மோட் வசதி கொடுக்கப்பட்டுள்ளன.
  • இந்த ஸ்கூட்டரில் ப்ளூடூத் கனெக்டிவிட்டி வசதி, நேவிகேஷன், போன் கனெக்டிவிட்டி போன்ற வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்