தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  யூடியூப் பார்த்து கருக்கலைத்த மாணவி - 6 மாத சிசுவுடன் வகுப்பறையில் உயிரிழப்பு

யூடியூப் பார்த்து கருக்கலைத்த மாணவி - 6 மாத சிசுவுடன் வகுப்பறையில் உயிரிழப்பு

Suriyakumar Jayabalan HT Tamil
Apr 15, 2023 11:16 AM IST

YouTube Video கல்லூரி மாணவி ஒருவர் யூடியூப் வீடியோ பார்த்து வகுப்பறையில் கருக்கலைப்பு செய்து ஆறு மாத குழந்தையுடன் இரத்த வெள்ளத்தில் உயிர் இழந்தார்.

உயிரிழப்பு
உயிரிழப்பு

ட்ரெண்டிங் செய்திகள்

வழக்கம்போல் கல்லூரி மாணவிகள் அனைவரும் விளையாட்டு மைதானத்திற்கு இடைவேளையின் போது சென்றுள்ளனர். அந்த மாணவி வகுப்பறையில் தனியாக உள்பக்கமாகத் தாளித்து கதவை மூடிக்கொண்டார்.

மைதானத்திற்கு நீண்ட நேரம் ஆகியும் வராத காரணத்தினால் சக நண்பர்கள் மாணவியை அழைத்து வர வகுப்பறைக்குச் சென்றுள்ளனர். அப்போது வகுப்பறையின் கதவு மூடி இருந்துள்ளது. அந்த கதவைத் தட்டியும் கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த மாணவிகள் கதவை உடைத்து உள்ளே பார்த்துள்ளனர். அப்போது ரத்தப்போக்குடன் மாணவி மயங்கிக் கிடந்துள்ளார்.

அந்த மாணவிக்கு அருகே ஆறு மாத பச்சிளம் குழந்தை ஒன்று கடந்துள்ளது. இதனைப் பார்த்து மாணவிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனே மாணவியையும் அந்த கருவையும் மீட்டு மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர்.

மருத்துவமனையில் பரிசோதனை செய்த மருத்துவர்கள் மாணவியும், ஆறு மாதப்பற்றிலும் குழந்தையும் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த நெல்லூர் தாலுகா காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளனர்.

தற்போது உயிரிழந்த மாணவியின் தந்தை அழைத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணையில், உயிரிழந்த மாணவி கருவைக் கலைப்பதற்காக யூடியூப் வீடியோ பார்த்து அதனை முயற்சி செய்துள்ளார் எனத் தெரியவந்துள்ளது. அதேசமயம் உயிரிழந்த பெண்ணின் செல்போனை ஆய்வு செய்த போது, அவர் கார் ஓட்டுநர் ஒருவருடன் தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது. ஒருவேளை அவரால் அந்த மாணவி கர்ப்பமாக இருக்கலாம் எனச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

பின்னர் இது குறித்து காவல்துறையினர் கார் ஓட்டுநரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். யூடியூப் வீடியோ பார்த்து வகுப்பறையில் கருக்கலைப்பு செய்து மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்