தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Cm Kejriwal: சிறையில் இருந்து முதல் உத்தரவு பிறப்பித்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்-பதவி விலக பாஜக வலியுறுத்தல்

CM Kejriwal: சிறையில் இருந்து முதல் உத்தரவு பிறப்பித்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்-பதவி விலக பாஜக வலியுறுத்தல்

Manigandan K T HT Tamil
Mar 24, 2024 10:31 AM IST

CM Arvind Kejriwal:முதல்வர் பதவியை கெஜ்ரிவால் ராஜினாமா செய்ய வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி கோரிக்கை விடுத்து வருகிறது. ஆனால், சிறையில் இருந்தபடியே ஆட்சியை நடத்துவேன் என்று ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கெஜரிவால் தொடர்ந்து கூறி வருகிறார்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜரிவால் (PTI)
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜரிவால் (PTI)

ட்ரெண்டிங் செய்திகள்

"அவர் (கெஜ்ரிவால்) அமலாக்கத்துறை காவலில் இருந்து தனது முதல் உத்தரவை பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவுகள் மாநகர அரசின் நீர்த்துறை தொடர்பானவை. இதற்கான உத்தரவுகளை நீர்வளத்துறை அமைச்சர் அதிஷி பின்னர் அறிவிப்பார்" என்று ஆம் ஆத்மி வட்டாரங்கள் தெரிவித்தன.

அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று பாஜக வலியுறுத்தி வருகிறது. ஆனால், சிறையில் இருந்தபடியே ஆட்சியை நடத்துவேன் என்று ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கெஜரிவால் தொடர்ந்து கூறி வருகிறார்.

கெஜ்ரிவாலின் சிறைத் திட்டங்கள் குறித்து பாஜக எம்.பி மனோஜ் திவாரி, சனிக்கிழமை கூறுகையில், சிறையில் இருந்து கும்பல்கள் ராஜ்ஜியம் நடத்துகின்றன, அரசாங்கங்கள் அல்ல என்றார்.

ஞாயிற்றுக்கிழமை, திவாரி கெஜ்ரிவாலுக்கு எதிரான தனது குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்தார். சனிக்கிழமை டெல்லிக்கு முதலமைச்சரின் செய்தியை வழங்கிய தனது மனைவி சுனிதா கெஜ்ரிவாலுக்கு எதிராக அவர் விமர்சனங்களை முன்வைத்தார்.

"அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை நினைத்துப் பார்த்தால்... 'ஏக் சஃபர் ஸ்வராஜ் சே ஷரப் தக்' என்று தலைப்பிடப்பட்ட ஒரு கதையை நீங்கள் நினைப்பீர்கள். அரவிந்த் கெஜ்ரிவால் கவலைப்படும் ஒரே விஷயம், அவர் எப்படி விரைவில் ஒரு 'ராஜ்மஹாலில்' வாழத் தொடங்குவார் என்பதுதான்" என்று அவர் கூறினார்.

மேலும் சுனிதா கெஜ்ரிவாலை கடுமையாக விமர்சித்தார்.

"சுனிதா கெஜ்ரிவால் நேற்று முதல்வர் நாற்காலியில் அமர்ந்து பேட்டி அளித்தார், அவரும் எந்த அவமானத்தையும் உணரவில்லை. அமலாக்கத் துறையும் சிபிஐயும் சிறப்பாக செயல்படுவதாக நாட்டில் ஒரு விவாதம் நடந்து வருகிறது. ஒரு சிலர் - ஊழல்வாதிகள்- அந்த விசாரணை அமைப்புகளை மோசமாக பேசுகிறார்கள். 2014-ம் ஆண்டுக்கு முன்பு அமலாக்கத்துறையும், சிபிஐயும் இப்படி செயல்படவில்லை. ஏனென்றால், 2014 க்கு முன்பு, காங்கிரஸ் அரசு அந்த அதிகாரத்தை ஏஜென்சிகளுக்கு வழங்கவில்லை, ஏனெனில் அவர்கள் கட்சி முழுவதும் ஊழலைப் பாதுகாக்க வேண்டியிருந்தது. 2014-ம் ஆண்டுக்குப் பிறகு ஆட்சி மாறிவிட்டது. நரேந்திர மோடி புதிய சாதனை படைத்துள்ளார். எந்த அமைப்பாக இருந்தாலும், அவர்களுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது" என்று அவர் மேலும் கூறினார்.

அரவிந்த் கெஜ்ரிவால் மார்ச் 28 வரை அமலாக்க இயக்குநரகத்தின் காவலில் உள்ளார். இதை எதிர்த்து அவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

"அரவிந்த் கெஜ்ரிவால் தனது கைது சட்டவிரோதமானது என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். மார்ச் 28 வரை அமலாக்கத்துறைக்கு வழங்கப்பட்ட காவலும் சட்டவிரோதமானது என்றும், அவருக்கு உடனடியாக நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், எந்த உத்தரவுக்கும் தடை விதிக்கவில்லை. அனைத்து ஆவணங்களையும் ஆதாரங்களையும் பார்த்த பிறகு, எது நடந்ததோ அது முற்றிலும் சட்டத்தின்படி என்று நீதிமன்றங்கள் நம்புகின்றன. இரண்டு நாட்களுக்கு முன்பு, இந்த வழக்கை நள்ளிரவில் உச்ச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல முயன்றனர். அரவிந்த் கெஜ்ரிவால் தனது மனுவையும் உச்ச நீதிமன்றத்தில் இருந்து திரும்பப் பெற வேண்டியிருந்தது" என்று பாஜகவின் சம்பித் பாட்னா கூறினார்.

அரவிந்த் கெஜ்ரிவால் கைதைக் கண்டித்து ஆம் ஆத்மி தலைவர்கள் டெல்லியில் பெரும் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்