DMK Protest: கெஜ்ரிவாலை கைது செய்து ஆம் ஆத்மி கட்சி வெற்றியை தடுக்க பாஜக அரசு சதி - தயாநிதி மாறன்
- டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதுசெய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை தெற்கு ரயில்வே தலைமை அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக எம்.பி தயாநிதி மாறன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு, அமலாக்கத்துறையை கண்டித்தும், கெஜ்ரிவாலை விடுதலை செய்ய வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன