தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Chhattisgarh: சூதாட்ட கம்பெனியிடம் இருந்து 508 கோடி வாங்கினாரா பாகல்? பகீர் கிளப்பும் புகார்!

Chhattisgarh: சூதாட்ட கம்பெனியிடம் இருந்து 508 கோடி வாங்கினாரா பாகல்? பகீர் கிளப்பும் புகார்!

Kathiravan V HT Tamil
Nov 04, 2023 11:00 AM IST

”பாஜக மத்திய புலனாய்வு அமைப்புகளைப் பயன்படுத்தி தன்னைக் குறிவைப்பதாக முதல்வர் பூபேஷ் பாகல் குற்றம் சாட்டி உள்ளார்”

சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல்
சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல் (HT_PRINT)

ட்ரெண்டிங் செய்திகள்

நவம்பர் 7 மற்றும் 17ஆம் தேதிகளில் சத்தீஸ்கர் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் பூபேஷ் பாகல் தலைமையிலான காங்கிரஸ் கட்சியே மீண்டும் ஆட்சிக்கு வரும் என தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் கூறுகின்றன.

இந்த நிலையில் சத்தீஸ்கரில் முதல்வர் பூபேஷ் பாகேல் சூதாட்ட செயலி நிறுவனத்திடம் இருந்து 500 கோடி பணம் பெற்று தேர்தல் பரப்புரைகளுக்கு பயன்படுத்துவதாக பாஜக குற்றம்சாட்டி உள்ளது.

வட இந்தியாவில் பிரபலமான மகாதேவ் சூதாட்ட செயலி விளம்பரதாரர்கள் சுமார் 508 கோடி ரூபாய் பூபேஸ் பாகலுக்கு கொடுத்ததாக அமலாக்கத்துறை கூறி உள்ளது. 

இது தொடர்பாக பேசி உள்ள மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி,  நமது தேர்தல் வரலாற்றில் இதற்கு முன் மக்கள் இதுபோன்ற ஆதாரங்களைக் கண்டதில்லை என்று கூறி உள்ளார். தேர்தலில் பூபேஷ் பாகல் போட்டியிடுவது மக்களின் ஆதரவுடன் அல்ல, மாறாக ஹவாலா மற்றும் பந்தய ஆபரேட்டர்கள் ஆதரவுடன் என்று குற்றம் சாட்டினார்.

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பாஜக மத்திய புலனாய்வு அமைப்புகளைப் பயன்படுத்தி தன்னைக் குறிவைப்பதாக முதல்வர் பூபேஷ் பாகல் குற்றம் சாட்டி உள்ளார்.

ஐந்து மாநித் தேர்தல் நெருங்கும் நிலையில் பாஜக, காங்கிரஸ் கட்சிகள் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி விமர்சித்து வருகின்றனர்.

IPL_Entry_Point