தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  ராகுல் தகுதி நீக்கத்தை எதிர்த்து வழக்கு- வயநாடு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு?

ராகுல் தகுதி நீக்கத்தை எதிர்த்து வழக்கு- வயநாடு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு?

Pandeeswari Gurusamy HT Tamil
Mar 25, 2023 10:29 AM IST

Rahul Gandhi disqualified: ராகுல் காந்தி போட்டியிட்டு வெற்றி பெற்ற வயநாடு தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி அடுத்த வாரம் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது

Former Congress president and MP Rahul Gandhi was disqualified from the Parliament on Friday (File Photo)
Former Congress president and MP Rahul Gandhi was disqualified from the Parliament on Friday (File Photo) (HT_PRINT)

ட்ரெண்டிங் செய்திகள்

சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ள நிலையில் அவரை எம்பி பதவியில் இருந்து நீக்கம் செய்து மக்களவை செயலகம் உத்தரவிட்டுள்ளது காங்கிரஸ் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மோடி என்ற பெயர் பற்றி அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் கடந்த 23-03-2023தீர்ப்பு வழங்கியுள்ளது.

சூரத் நீதிமன்ற தலைமை ஜூடியல் மாஜிஸ்திரேட் ஹெச்.ஹெச். வர்மா இந்தத் தீர்ப்பை வழங்கினார். 2 ஆண்டு சிறை தண்டனை மட்டுமல்ல, அத்துடன் ரூபாய் 15,000த்தையும் அபராதமாக கட்டி விட்டு செல்லுமாறும் அவர் உத்தரவிட்டு இருக்கிறார்.

இந்திய தண்டனை சட்டப் பிரிவுகள் 499 (அவதூறு), 500 (அவதூறுக்காக தண்டனை) ஆகியவற்றின் கீழ் ராகுகாந்தி குற்றவாளி என அறிவிக்கப்பட்டு இந்த தீர்ப்பானது வழங்கப்பட்டு இருக்கிறது. இந்தத் தீர்ப்புக்கு எதிராக 30 நாட்களுக்குள் அவர் மேல் முறையீடு செய்யலாம். அதுவரை அவருக்கு இந்த சிறைத் தண்டனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சூரத் நீதிமன்றம் விதித்த தண்டனையை தொடர்ந்து ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்து மக்களவை செயலகம் நேற்று உத்தரவிட்டுள்ளது. இது காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் இன்று கேரளாவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் முரளி தரன் ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரம் குறித்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். ராகுல் காந்திக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதும், தகுதிநீக்கம் செய்வதை சட்டவிரோதம் என்று அறிவிக்க கோரி வழக்கு தொடர்ந்துள்ளார். இதில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் படி 80 (3)க்கு எதிரானது என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் ராகுல் காந்தி போட்டியிட்டு வெற்றி பெற்ற வயநாடு தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி அடுத்த வாரம் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கர்நாடகத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலையொட்டி வயநாடு தொகுதிக்கும் தேர்தல் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்