தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Bike Accident: இளைஞர் வயிற்றில் சிக்கிய அடிபம்ப் கைப்பிடி…கட்டர் மூலம் நீக்கம்

Bike Accident: இளைஞர் வயிற்றில் சிக்கிய அடிபம்ப் கைப்பிடி…கட்டர் மூலம் நீக்கம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jan 20, 2023 12:23 PM IST

அதிவேகமாக பைக்கில் சென்றவர் போர் அடிப்பம்பு மீது மோதி விபத்தில் சிக்கியதில் அவரது வயிற்றை துளைத்து அடிப்பம்பு கைப்பிடி உள்ளே புகுந்தது. வலியால் துடித்த அவரது வயிற்றிலிருந்து கட்டர் மூலம் அடிப்பம்பு பகுதிகள் வெட்டி எடுக்கப்பட்டு பின் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளார்.

பைக் விபத்தில் இளைஞர் வயிற்றின் உள்ளே துளைத்த  அடிபம்ப் கைப்பிடி நீக்கம்
பைக் விபத்தில் இளைஞர் வயிற்றின் உள்ளே துளைத்த அடிபம்ப் கைப்பிடி நீக்கம்

ட்ரெண்டிங் செய்திகள்

அப்போது அடிப்பம்பு கைப்பிடி வயிற்றை துளைத்து உள்ளே சென்று விட்டது. இதனால் அவர் வலி தாங்க முடியாமல் அவர் அலறி துடித்துள்ளார். அவரது நிலையை பார்த்த பலரும் நாகராஜ் தந்தைக்கு தகவல் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து அங்கு வந்த நாகராஜின் தந்தை உடனடியாக மெக்கானிக் ஒருவரின் உதவியுடன் கட்டரை கொண்டு வந்து மகன் வயிற்றில் சிக்கிகொண்டிருந்த அடிப்பம்பு கைப்பிடியை வெட்டினர். பின் அவரை அங்கிருந்து ஆம்புலனஸ் மூலம் ஓங்கோலில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார்.

இதையடுத்து மருத்துவர்கள் காயமடைந்திருந்த நாகராஜுக்கு அறுவை சிகிச்சை செய்து வயிற்றில் சிக்கி கொண்டிருந்த கைப்பிடியின் துருப்பிடித்த பாகங்கள், உலர்ந்த பெயிண்ட் ஆகியவற்றை அப்புறப்படுத்தினர். தற்போது அவர் அவசர சிகிச்சை பிரிவில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

அதிவேகமாக பைக்கில் வந்தபோது இந்த கொடூர விபத்து நிகழ்ந்திருப்பது அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

IPL_Entry_Point

டாபிக்ஸ்