தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Assembly Elections: மேகாலயாவில் மீண்டும் ஆட்சிக்கு வருமா தேசிய மக்கள் கட்சி?

Assembly Elections: மேகாலயாவில் மீண்டும் ஆட்சிக்கு வருமா தேசிய மக்கள் கட்சி?

Priyadarshini R HT Tamil
Feb 26, 2023 01:22 PM IST

North East Assembly Elections: மேகாலயா சட்டப்பேரவை தேர்தல் நாளை நடைபெறவுள்ளது. சட்டத்திற்கு புறம்பான நிலக்கரி சுரங்கங்கள் முதல் வேலையில்லா திண்டாட்டம் வரை உள்ள பிரச்னைகளில் மக்கள் எவ்வாறு வாக்களிப்பார்கள் என்று இங்கு பார்க்கலாம்.

கோப்புப்படம்.
கோப்புப்படம்.

ட்ரெண்டிங் செய்திகள்

மேகாலயாவின் 60 வாக்குச்சாவடிகளில் 36 காசியின் ஜெயின்டியா மலை பகுதியில் உள்ளது. 24 பகுதிகள் கேரோ மலைப்பகுதியில் உள்ளது. 21 லட்சம் (21,75,236)  வாக்காளர்கள் வாக்களிக்க தகுதியானவர்களாக உள்ளார்கள். அதில் 10.99 லட்சம் பேர் பெண்கள். 10.68 லட்சம் வாக்காளர்கள் ஆண்கள். ஆண் வாக்காளர்களைவிட பெண் வாக்காளர்களே அங்கு அதிகம் உள்ளார்கள். இதில் 81 ஆயிரம் வாக்காளர்கள் முதல் முறையாக ஓட்டுப்போட உள்ளார்கள். 369 வேட்பாளர்களில் 36 பேர் பெண்கள். மொத்த எண்ணிக்கையில் 44 வேட்பாளர்கள் சுயேட்சையாக களத்தில் உள்ளார்கள்.     

அங்கு ஆட்சியில் உள்ள தேசிய மக்கள் கட்சி மீண்டும் ஆட்சி அமைக்க நினைக்கும் இக்கட்சி இம்முறை எதிர்ப்பு காரணியுடன் இம்முறை போராட வேண்டியிருக்கும். மலை மற்றும் தொலைதூர பகுதிகளில் உட்கட்டமைப்பு வளர்ச்சி பணிகளில் எவ்வித முன்னேற்றமும் இல்லாதது இந்த முறை அவர்களுக்கு சவாலாக அமையும். அதுவே மாநிலத்தின் பெரிய பிரச்னையாக உள்ளது. தேசிய மக்கள் கட்சியின் மீது உள்ள லஞ்ச குற்றச்சாட்டுகளும் அந்த அரசுக்கு பாதகமாக அமையும். 

காஷி மலைத்தொடர்கள் மற்றம் ஜெயின்டியா பகுதிகளில் சட்டத்திற்கு புறம்பான நிலக்கிரி சுரங்க பிரச்னைகளும் இந்த தேர்தலில் பிரதிபலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேலையில்லா திண்டாட்டம் ஒரு முக்கிய தேர்தல் பிரச்னையாக அமையும். அனைத்து கட்சிகளுமே வேலைக்கு உத்தரவாதமளித்து தேர்தல் வாக்குறுதியளித்துள்ளனர். 

காங்கிரஸ் ஆட்சிக்குபின் மாநில கட்சியான தேசிய மக்கள் கட்சி இங்கு ஆட்சியில் உள்ளது. கடந்த முறை பாஜக இக்கட்சியுடன் கூட்டணி அமைத்திருந்தது. ஆனால் இம்முறை பாஜக அனைத்து தொகுதிகளிலும் தனியாக வேட்பாளர்களை களம் இறக்கியுள்ளது. மேகாலயாவில் மாட்டிறைச்சி பிரதான உணவாக இருப்பதால், நாட்டின் மற்ற மாநிலங்களில் மாட்டிறைச்சிக்கு எதிராக கடும் நடவடிக்கையை எடுக்கம் பாஜக அங்கு மாட்டிறைச்சி சாப்பிடுவோம் என்று அறிவிக்க வேண்டிய நிலையில் உள்ளது. தனித்து போட்டியிடும் பாஜக வெற்றி பெற்றால் மாட்டிறைச்சி தடை செய்யப்படுமோ என்ற அச்சம் அங்குள்ள மக்களிடம் நிலவுகிறது. காங்கிரசுக்கு இழந்த செல்வாக்கை மீண்டும் பெற போராடி வருகிறது. இந்த முறை மேகாலயாவில் மாநில கட்சிகள், பாஜக, காங்கிரஸ், திரணாமூல் காங்கிரஸ் என கடும் போட்டிகள் நிலவுகிறது. இதற்கான விடைகள் மார்ச் 2ம் தேதி தெரிந்துவிடும். 


தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்