தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  Assam Crackdown On Child Marriage Continues

அசாமில் 2,441 கைது எதற்காக?

Priyadarshini R HT Tamil
Feb 06, 2023 01:18 PM IST

அசாமில் குழந்தை திருமணத்திற்கு எதிரான நடவடிக்கை தொடர்கிறது, இதுவரை 2,441 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோப்புப்படம்.
கோப்புப்படம்.

ட்ரெண்டிங் செய்திகள்

பிஸ்வநாத்தில் அதிகபட்சமாக 139 பேரும், பர் பேட்டாவில் 130 பேரும், துப்ரியில் 126 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

எதிர்கட்சிகள் விமர்சித்தாலும், போரட்டங்கள் நடத்தினாலும், அசாம் போலீசார் குழந்தை திருமணத்திற்கு எதிரான கைது நடவடிக்கையை தொடர்ந்து வருகின்றனர். இதனால் 3 நாட்களில் மட்டும் 2,442 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 

அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் வரை, குழந்தை திருமணம் என்னும் சமூக குற்றத்துக்கு எதிரான கைது நடவடிக்கைகள் தொடரும் என அம்மாநில முதல்வர் ஹிமந்த் பிஸ்வாஸ் சர்மா தெரிவித்துள்ளார். இதை அரசியல் ஸ்டன்ட் என்று எதிர்கட்சிகள் விமர்சனம் செய்தாலும், அந்த சமூக கேட்டை முடிவுக்கு கொண்டுவரும் வரை நாங்கள் ஓயமாட்டோம் என்று அவர் மேலும் கூறியுள்ளார். 

கைது நடவடிக்கைகள் மாநிலம் முழுவதும் போடப்பட்டுள்ள 4,074 முதல் தகவல் அறிக்கைகளின் அடிப்படையில் செய்யப்படுகிறது.

பிஸ்வநாத்தில் அதிகபட்சமாக 139 பேரும், பர் பேட்டாவில் 130 பேரும், துப்ரியில் 126 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ள மற்ற மாவட்டங்களாக பாக்சா (123) மற்றும் போங்காய்கோன், ஹோஜாய் (117) உள்ளன. 

துப்ரியில் அதிகபட்சமாக 374 முதல் தகவல் அறிக்கைகள் குழந்தை திருமணத்திற்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ளன. ஹோஜாயில் 255 வழக்குகளும், மோரிகோனில் 224 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த கைது நடவடிக்கைகளுக்கு எதிராக பாராக் பள்ளத்தாக்கு முழுவதிலும், பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 

அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முஸ்லிமீன் கட்சித்தலைவர் அசாதுதீன் ஓவைசி இந்த கைது நடவடிக்கைகளுக்கு பின் உள்ள நோக்கம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், குழந்தை திருணம் என்ற சமூக அவலத்தை தடுக்க அஸ்சாம் அரசு உண்மையில் கல்வியை அதிகரிப்பதில் அரசு கவனம் செலுத்தியிருக்க வேண்டும். 

குழந்தை திருமணத்தை நீங்கள் உண்மையிலேயே தடுத்து நிறுத்த விரும்பினால் நிறைய பள்ளிகளை திறக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆனால் நீங்கள் அதை செய்யவில்லை. நீங்கள் மதரசாக்களையும் மூடிவிட்டீர்கள். அவையும் கல்வியை போதித்தவைதான் என்று அவர் கூறினார். குழந்தை திருமணம் செய்த ஆண்களை கைது செய்துவிட்டீர்கள் என்றால் வீட்டில் தனியாக உள்ள பெண்களுக்கு யார் பொறுப்பு? என்று ஓவைசி கேட்கிறார். 

அசாம் காங்கிரஸ் தலைவர் பூபென் போரா கூறுகையில், இந்த கைது நடவடிக்கைகளில் சிறிதளவு மனிதாபிமானம் காட்டப்பட வேண்டும். “நாங்களும் குழந்தை திருமணத்திற்கு எதிரானவர்கள்தான். ஆனால், தற்போது திருமணமாகி குடும்பமாகி, வளர்ந்த குழந்தைகளுடன் வசிப்பவர்களை தொந்தரவு செய்வதில் என்ன பயன் உள்ளது. இது அரசியல் ஸ்டன்ட் மட்டுமே“ என்றார். 

அசாம் ஜாட்டிய பரிஷத் தலைர் லுரின்ஜியோதி கோகோய் கூறுகையில், இந்த கைது நடவடிக்கைகள் மக்களிடையே ஏற்படுத்தும் பாதிப்பு என்வென்று தெரியாமல் அரசு இந்த கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. கைது செய்யப்படும்போது, மனைவி மற்றும் குடும்பத்தினரின் சூழல் குறித்து அரசு சிந்தித்திருக்க வேண்டும். இது அதிரடியாக எடுக்கப்பட்ட நடவடிக்கை“ என்றார். 

குழந்தை திருமணத்திற்கு எதிரான இந்த கைது நடவடிக்கைகள் விதிகள் வகுக்கப்படாமல் நடத்தப்பட்டது என ஏஐயுடிஎப் கூறியுள்ளது. 

மாநில அமைச்சரவை அண்மையில், 14 வயதுக்கு கீழே உள்ள பெண்களை திருமணம் செய்திருப்பவர்களை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்வதற்கு ஒப்புதல் அளித்திருந்தது. குழந்தை திருமண தடுப்புச்சட்டம் 2006 ன் கீழ் 14-18 வயது வரை உள்ள குழந்தைகளை திருமணம் செய்திருப்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய முடிவெடுத்திருந்தது. பெண் 14 வயதுக்கு கீழ் இருந்து, அவருக்கு திருமணம் செய்யப்பட்டிருந்தால் அந்த திருமணம் சட்டப்படி செல்லாது என்று அறிவிக்கப்பட்டு, அவரை மணந்த ஆண் கைது செய்யப்பட்டு, அந்த பெண் குழந்தை காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.   

IPL_Entry_Point

டாபிக்ஸ்