தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Andhra 379 Food : என்ன என்ன ஐட்டங்களோ.. 379 வகையான உணவுகள்- அசந்து போன மருமகன்!

Andhra 379 food : என்ன என்ன ஐட்டங்களோ.. 379 வகையான உணவுகள்- அசந்து போன மருமகன்!

Divya Sekar HT Tamil
Jan 17, 2023 12:51 PM IST

379 food items : ஆந்திராவில் சங்கராந்தியை முன்னிட்டு பெண் வீட்டார் புதுமாப்பிள்ளைக்கு 379 உணவு வகைகளுடன் விருந்தினை வைத்துள்ளனர்.

அசந்து போன மருமகன்
அசந்து போன மருமகன்

ட்ரெண்டிங் செய்திகள்

ஆந்திர பிரதேசத்தில் உள்ள கோதாவரி விருந்தோம்பலுக்கும் பெயர் பெற்றவை. வகை வகையாக மருமகன்களுக்கு விருந்து வைத்து சங்கராந்தி பண்டிகையன்று பெயர் பெறுவதை ஆந்திராவில் பல்வேறு பகுதி மக்களும் பெருமையாக கருதுகிறார்கள். குறிப்பாக கோதாவரி மாவட்ட மக்கள் இத்தகைய விருந்து வைப்பதில் புகழ் பெற்று திகழ்கிறார்கள்.

கடந்த ஆண்டு மேற்கு கோதாவரி மாவட்டத்தில் தொழில் அதிபர் ஒருவர் தனது மருமகனுக்கு 365 வகைகளில் பொங்கல் விருந்து வைத்திருந்தார். இந்த ஆண்டு எலுரு நகரை சேர்ந்த தொழில் அதிபர் பீமாராவ் அந்த சாதனையை முறியடித்துள்ளார். அவர் மகள் குஷ்மாவை விசாகப்பட்டினம் அருகே உள்ள அனகாபள்ளியை சேர்ந்த புத்தா முரளிதர் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்திருந்தார்.

379 வகையான உணவுகள்
379 வகையான உணவுகள்

திருமணத்திற்குப் பிறகு இது அவரது முதல் சங்கராந்தி பண்டிகை இது. எனவே முரளிதரையும், மகள் குஷ்மாவையும் தொழில் அதிபர் பீஷ்மாராவ் தனது வீட்டுக்கு தலை பொங்கல் விருந்துக்கு அழைத்திருந்தார். விருந்தில் 379 வகையான உணவுகள் பரிமாறப்பட்டன. அந்த உணவு வகைகளை பார்த்து மருமகன் முரளிதர் அதிர்ச்சி அடைந்தார். 379 வகையான உணவுகளில் 10 சதவீதத்தை கூட அவர் சாப்பிடவில்லை. மேலும் இந்த 379 உணவுப் பொருட்களுக்கான மெனுவை தயாரிக்க 10 நாட்கள் ஆனதாக தெரிகிறது.

இந்த பிரமாண்ட விருந்து ஆந்திராவில் பரபரப்பாக பேசப்பட்டது. இதேபோல், இந்த ஆண்டு மேற்கு கோதாவரி மாவட்டம் பீமாவரத்தைச் சேர்ந்த மற்றொரு குடும்பம் தங்கள் மருமகனுக்கு 173 உணவு வகைகளை பரிமாறி ஆச்சிரியப்படுத்தியுள்ளது.

தொழிலதிபரான தடவர்த்தி நாகபத்ரி லக்ஷ்மி நாராயணா மற்றும் அவரது மனைவி சந்தியா ஆகியோர் தங்கள் மருமகன் சாவலா பிருத்விகுப்தாவை கடந்த சனிக்கிழமை அழைத்து இந்த 173 வகை உணவுகளை வழங்கி ஆச்சரியப்படுத்தியுள்ளனர்.

173 வகை உணவுகள்
173 வகை உணவுகள்

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்