தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  Air India Has Signed An Agreement With Ksu Aviation To Launch Taxibot Operations

TaxiBots: ஏர் இந்தியா விமானத்தில் டாக்ஸிபாட் சேவை : இதனால் கிடைக்கும் பயன் என்ன?

Stalin Navaneethakrishnan HT Tamil
Apr 13, 2023 04:04 PM IST

Air India: டெல்லி மற்றும் பெங்களூரு விமான நிலையங்களில் ஏர் இந்தியா டாக்ஸிபாட் சேவையை தொடங்க உள்ளது.

விமான நிலையத்தில் உள்ள டாக்ஸிபாட் வசதி
விமான நிலையத்தில் உள்ள டாக்ஸிபாட் வசதி

ட்ரெண்டிங் செய்திகள்

ஏனெனில் TaxiBots ஏற்றுக்கொள்வதன் மூலம் மூன்று ஆண்டுகளில் எரிபொருள் நுகர்வு சுமார் 15,000 டன்கள் சேமிக்கப்படும் என்று ஏர் இந்தியா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

செமி-ரோபோடிக் கருவியான TaxiBot, விமானத்துடன் இணைக்கப்பட்டவுடன், விமான நிலைய முனைய வாயிலில் இருந்து டாக்ஸி-அவுட் பாயிண்ட் வரை இது செயல்படும். விமானம் தரையிறங்கிய பிறகு (டாக்ஸி-இன் ஃபேஸ்) விமானத்தின் இயந்திரங்களைப் பயன்படுத்தாமல் டெர்மினல் வாயிலிலிருந்து இழுக்கவும் இது பயன்படும்.

 இதனால் ஜெட் எரிபொருள் சேமிக்கப்படுகிறது. முன்னோடி தொழில்நுட்பம் எரிபொருள் நுகர்வு, கார்பன் உமிழ்வு, இரைச்சல் அளவுகள் மற்றும் விமான நிறுவனங்களுக்கான செலவுகளை இது கட்டுப்படுத்துகிறது.

TaxiBot-ஐ ஏற்றுக்கொண்டது குறித்து ஏர் இந்தியாவின் தலைமை செயல் அதிகாரியும் (CEO) நிர்வாக இயக்குனருமான கேம்ப்பெல் வில்சன் கூறுகையில், "ஒரு பொறுப்பான விமான நிறுவனமாக, நிலைத்தன்மையை மேம்படுத்துவதற்கும் நமது கார்பன் தடயத்தை நிர்வகிப்பதற்கும் ஏர் இந்தியா தொடர்ந்து பல வழிகளைத் தேடி வருகிறது. உமிழ்வு மற்றும் எரிபொருள் நுகர்வு ஆகியவற்றைக் குறைப்பதில் எங்களின் அர்ப்பணிப்புக்கு இது இன்னும் ஒரு எடுத்துக்காட்டு. KSU உடனான இந்த ஒத்துழைப்பு, TaxiBots-ன் திறன்களை சிறப்பாக மதிப்பிடுவதற்கு எங்களை அனுமதிக்கும், மேலும் ஏர் இந்தியாவின் துணை நிறுவனங்கள் மற்றும் பிற விமான நிலையங்கள் முழுவதும் அதிக அளவில் பயன்படுத்தப்படுவதற்கு வழிவகுக்கும்" என்றார். 

ஏர் இந்தியா புதிய விமானங்களை அறிமுகப்படுத்துதல், சிறந்த நடைமுறைகள் மற்றும் புதுமையான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டு, ஏர் இந்தியா குழுமம் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலுடன் (CSIR) புரிந்துணர்வு ஒப்பந்தத்திலும் இதற்காக கையெழுத்திட்டது. 

KSU ஏவியேஷன் இயக்குனர் அஷ்வனி கன்னா கூறுகையில், "ஏர் இந்தியாவின் கார்பன் தடயத்தை நிவர்த்தி செய்வதற்கான கவனம் செலுத்தும் அணுகுமுறையின் ஒரு பகுதியாக TaxiBot இன் முறையான அறிமுகம் குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ஏர் இந்தியா ஒரு பெரிய மாற்றத்திற்கு உட்பட்டுள்ளது. இந்த பயணத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக நிலையான நடைமுறைகளை ஏற்றுக்கொண்டுள்ளது. கார்பன் தடயத்தைக் குறைப்பதில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவும், நிகர பூஜ்ஜியமாக இருப்பதைத் துரிதப்படுத்தவும் ஏர் இந்தியா போன்ற ஒத்த எண்ணம் கொண்ட நிறுவனங்களுடன் கூட்டு சேர நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்" என்று கூறியுள்ளார். 

அக்டோபர் 2019 இல், ஏர் இந்தியா, உலகிலேயே முதன்முதலில், ஏர்பஸ் ஏ320 விமானத்தில் டாக்ஸிபோட்டைப் பயன்படுத்தியது, அதில் பயணிகளுடன் வணிக விமானத்தை இயக்கியது குறிப்பிடத்தக்கது. 

IPL_Entry_Point

டாபிக்ஸ்