Uterus Problems : மாதத்தில் 5 நாள் மட்டும் இந்த உருண்டை போதும்! பிசிஓடி, பிசிஓஎஸ் என கருப்பை பிரச்னைகளுக்கு தீர்வு!
Uterus Problems : மாதத்தில் 5 நாள் மட்டும் இந்த உருண்டை போதும்! பிசிஓடி, பிசிஓஎஸ் என கருப்பை பிரச்னைகளுக்கு தீர்வு!

இப்போது பெண்கள் சிறு வயதிலேயே பூப்பெய்திவிடுகிறார்கள். இதனால் மூட்டுவலி, கை-கால் வலி போன்ற பிரச்னைகளால் அவதிப்படுகிறார்கள். 30 வயதை கடக்கக்கூடிய பெண்கள் இடுப்பு வலி மற்றும் கை-கால் வலி பிரச்னைகளால் அவதிப்படுகிறார்கள். கர்ப்பப்பை தொடர்பான அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு கூறி, கர்ப்பப்பைக்கு வலு சேர்க்கக்கூடியது.
தேவையான பொருட்கள்
உடைத்த அல்லது முழு கருப்பு உளுந்து – 2 கப்
(வெள்ளை உளுந்து கட்டாயம் எடுக்கக்கூடாது)
கருப்பட்டி – 1 அல்லது ஒன்றரை கப்
பொட்டுக்கடலை – அரை கப்
நல்லெண்ணெய் – முக்கால் கப்
செய்முறை
உளுந்தை தண்ணீரில் சேர்த்து நன்றாக அலசி எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதை ஒரு தட்டில் கொட்டி நன்றாக வெயில் அல்லது நிழலில் காய வைக்க வேண்டும்.
காய்ந்தவுடன், இந்த உளுந்தை கடாயில் சேர்த்து வறுத்துக்கொள்ள வேண்டும். நல்ல பொன்னிறமானவும், பொட்டுக்கடலையையும் சேர்த்து வறுத்து நன்றாக ஆறவிடவேண்டும்.
இதை ஒரு காய்ந்த மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக பொடித்துக்கொள்ள வேண்டும். அதனுடன் பொடித்த கருப்பட்டியையும் சேர்த்து நன்றாக அடித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் எண்ணெயை கடாயில் சேர்த்து மிதமாக சுடவைத்துக்கொள்ள வேண்டும்.
அரைத்த பொடியை ஒரு காய்ந்த பாத்திரத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதில் மிதமான சூட்டில் உள்ள எண்ணெய் சேர்த்து கரண்டியால் கலக்க வேண்டும். கை வைத்தால் சுட்டுவிடும். எனவே கரண்டிதான் சிறந்தது.
கையில் எடுத்து பிடித்துப்பார்த்தால் லட்டுகளாக பிடிபடும். அதை பிடித்து வைத்து மாதத்தில் 5 நாட்கள் சாப்பிட்டால் மாதவிடாய் தொடர்பான அனைத்து பிரச்னைகளும் குணமாகும்.
இதனால் தான் அந்த காலத்தில் பூப்பெய்திய பெண்களுக்கு, உளுந்த களியை நல்லெண்ணெய் சேர்த்து செய்து கொடுப்பார்கள்.
இதற்கு தேவைப்பட்டால் ஏலக்காய்ப்பொடிகூட சேர்த்துக்கொள்ளலாம். ஆரோக்கியமான உளுந்து உருண்டை தயார்.
இதை வெளியில் வைத்து ஒரு மாதம் வரை பயன்படுத்தலாம். இதை குறிப்பாக மாதவிடாய் காலத்தில் எடுத்துக்கொள்வது நல்லது.
இதனால் மாதவிடாய் தாமதமாவது, குறைவான உதிரப்போக்கு, அதிக உதிரப்போக்கு போன்ற பிரச்சனைகள் இருக்காது. பிசிஓடி, பிசிஓஎஸ் போன்ற பிரச்னைகளுக்கும் தீர்வாகும். மாதவிடாய் சரியாக இருக்கும்.
இதை எந்த நேரத்தில் எடுத்துக்கொள்ளலாம். தினமும் எடுத்துக்கொள்ளலாம். குழந்தைகளுக்கு கட்டாயம் கொடுக்க வேண்டிய உருண்டை.
உளுந்தின் சத்துக்கள் மற்றும் நன்மைகள்
இந்தியாவில் உளுந்து ஒரு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த தானியமாகக் கருதப்படுகிறது. இதன் ஆரோக்கிய நன்மைகள் இதை கட்டாயம் எடுத்துக்கொள்ள வைக்கிறது. இதை உணவில் சாப்பிடலாம். ஆயுர்வேத மருந்துகளிலும் கலக்கப்படுகிறது. இதில் எண்ணிலடங்கா ஆரோக்கிய நன்மைகள் உள்ளன.
100 கிராம் உளுந்தில் 1.6 கிராம் கொழுப்புச்சத்து உள்ளது. 59 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது. 25 கிராம் புரதச்சத்து, 0.93 கிராம் பொட்டாசியம், 0.38 கிராம் சோடியம் மற்றும் 341 கலோரிகள் உள்ளது. இதில் கூடுதலாக கால்சியம், இரும்பு, வைட்டமின் பி6 மற்றும் மெக்னீசியம் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன.
உங்கள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
இரும்புச்சத்தை அதிகரிக்கிறது.
உங்கள் இதயத்தை ஆரோக்கியமாகவும், உங்களை மகிழ்ச்சியாகவும் வைக்கிறது.
நீரிழிவு நோயின் நண்பன். ரத்தத்தில் சர்க்கரை அளவை பராமரிக்கிறது.
தலைமுடிக்கு பளபளப்பை கொடுக்கிறது.
உளுந்து உடல் எடையை குறைக்கிறது.
உங்கள் எலும்பை உறுதியாக்குகிறது.
உங்கள் சிறுநீரகத்தை பாதுகாக்கிறது.
உங்கள் சருமத்துக்கு நல்லது.
ஆண் இனப்பெருக்க உறுப்புக்கு உதவுகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்