Unknown Benefits of Mango Leaves : வாயிலை அலங்கரிப்பதற்கு மட்டுமல்ல; மாவிலையில் எத்தனை நன்மைகள் உள்ளது பாருங்கள்!
Unknown Benefits of Mango Leaves : மாவிலையில் உள்ள நீங்கள் அறிந்திராத பயன்களை தெரிந்துகொள்ளுங்கள்.

மாவிலையை நாம் பெரும்பாலும் வீடுகளில் தோரணங்கள் கட்டுவதற்கு மட்டும்தான் பயன்படுத்துவோம். இதை நாம் வாய்வழியாக பெரும்பாலும் உட்கொள்ள பயன்படுத்துவதில்லை. ஆனால் மாவிலையில் பல்வேறு நற்குணங்கள் உள்ளன. இதன் இளம் இலைகள் சில கலாச்சாரங்களில் சமையலில்லை பயன்படுத்தப்படுகிறது. இது ஆயுர்வேத மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுகிறது.
சரும ஆரோக்கியத்துக்கு உதவுகிறது
மாவிலைகளில், ஆன்டி பாக்டீரியல் குணங்கள் உள்ளன. இது ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது. இது சரும ஆரோக்கியத்துக்கும், குணப்படுத்துவதற்கும் உதவுகிறது.
தலைமுடிக்கு நல்லது
மாவிலையில் வைட்டமின் ஏ, பி, மற்றும் சி ஆகியவை உள்ளது. இது உடலில் உள்ள கொலோஜென் உற்பத்தியை அதிகரிக்கிறது. இது தலைமுடி ஆரோக்கியத்துக்கும் பளபளப்புக்கும் நல்லது. இது ஃப்ளேவனாய்ட்கள் மற்றும் ஃபினால்கள் நிறைந்தது.
நீரிழிவு நோய்க்கு உதவுகிறது
மாவிலையில் இன்சுலின் எதிர்ப்பு குணங்கள் உள்ளது. அது நீரிழிவு நோய்க்கு உதவக்கூடியது என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளன. இதுகுறித்து மேலும் ஆய்வுகள் செய்யும்போது, அதிக நற்குணங்கள் தெரியவரும்.
உயர் ரத்த அழுத்தம்
மாவிலையில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளது. இது கொழுப்பு சேர்வதில் இடையீடுகிறது. இந்த ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. ரத்த நாளங்களை வலுப்படுத்த உதவுகிறது. இதன் மூலம் ரத்த அழுத்தத்தை இயல்பில் வைக்க உதவுகிறது.
புற்றுநோயை கட்டுக்குள் வைக்கிறது
மாவிலையில் உள்ள ஃபாலிபினால்கள் மற்றும் டெர்பினாய்ட் போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் புற்றுநோய்க்கு எதிரான குணங்கள் நிறைந்தது. இது ஃப்ரி ரேடிக்கல்கள் ஏற்படுத்தும் சேதத்தை தடுக்கிறது. இதுதான் புற்றுநோய்க்கான காரணமாகும்.
அல்சரை குணப்படுத்துகிறது. விக்கலை நிறுத்துகிறது.
அல்சரை குணப்படுத்துவதற்கு இது பல காலமாக மாவிலைகள் பயன்படுத்தப்படுகிறது. தொடர்ந்து ஏற்படும் விக்கலை குணப்படுத்துகிறது. இதுகுறித்து ஆய்வுகள் அதிகரிக்கும்போது, இவற்றின் சரியான பயன்கள் மேலும் தெரியவரும்.
எடை மேலாண்மையில் உதவுகிறது
மாவிலை, உடல் பருமனை குறைக்க உதவுகிறது. இது கொழுப்பு உடலில் சேர்வதை தடுக்கிறது. இதனால் உடல் பருமனாவது குறைக்கப்படுகிறது.
வீக்கத்துக்கு எதிரான குணங்கள்
மாவிலையில் வீக்கத்துக்கு எதிரான குணங்கள் உள்ளது. மூளை ஆரோக்கியத்துக்கும், அறிவாற்றல் திறனுக்கும் உதவுகிறது.
மனஅழுத்தத்தை போக்க உதவுகிறது
மாவிலை பயம் மற்றும் பதற்றத்தை போக்க உதவுகிறது. மாவிலையை தண்ணீரில் கொதிக்க வைத்து குளிக்கலாம். இதனால் அவர்களுக்கு மனஅழுத்தம் குறையும்.
குறிப்பு
இத்தனை நற்குணங்கள் நிறைந்த மாவிலை அனைவருக்கும் ஏற்றதல்ல. எனவே இவற்றை உட்கொள்வதற்கு முன் மருத்துவரை அணுகுவதே சிறந்தது. மருத்துவர் பரிந்துரைத்துள்ள சிகிச்சைக்கு மாற்றாக மாவிலைகளை பயன்படுத்தக்கூடாது.
இதை உணவில் எப்படி சேர்த்துக்கொள்வது?
10 – 12 இளம் மாவிலைகளை 150 மில்லிலிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து, வடிகட்டி வெறும் வயிற்றில் பருகவேண்டும். இதை வெறும் வயிற்றில் அல்லது மாலையில் பருகவேண்டும் அல்லது மாவிலை தேநீர் பைகளை சூடான தண்ணீரில் சில நிமிடங்கள் ஊறவைத்தும் பருகலாம்.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

டாபிக்ஸ்