Hair Fall Prevention: இயற்கையாக தலைமுடி உதிர்வை தடுக்கும் செம்பருத்தி இலைகள்! எப்படி பயன்படுத்தினால் பலன் கிடைக்கும்?
- கோடை காலத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதோடு மட்டுமல்லாமல், சுற்றுப்புறத்தில் இருக்கும் மாசு காரணமாகவும் தலைமுடி உதிர்வு பிரச்னையானது ஏற்படுகிறது. ஆண், பெண் என இரு பாலரையும் கவலைக்குள்ளாக்கும் தலைமுடி உதிர்வை வீட்டில் இருந்தபடியே இயற்கையான முறையில் தடுக்கலாம்
- கோடை காலத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதோடு மட்டுமல்லாமல், சுற்றுப்புறத்தில் இருக்கும் மாசு காரணமாகவும் தலைமுடி உதிர்வு பிரச்னையானது ஏற்படுகிறது. ஆண், பெண் என இரு பாலரையும் கவலைக்குள்ளாக்கும் தலைமுடி உதிர்வை வீட்டில் இருந்தபடியே இயற்கையான முறையில் தடுக்கலாம்
(1 / 5)
বর্তমান সময়ে এত দূষণ চারদিকে যে, আট থেকে আশি ভুগছে চুল পড়ার সমস্যায়। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে, বয়স ৪০ পেরনোর আগেই মাথায় টাক পড়ে যাচ্ছে। আবার কখনও দেখা যাচ্ছে, এত চুল পড়ছে যে, চওড়া হচ্ছে কপাল। এসব থেকে বাঁচতে, শুধু যে পার্লারে গিয়ে হেয়ার ট্রিটমেন্ট বা স্পা করালেই ফল ফিলবে এমনটা নয়। বরং চারপাশে ছড়িয়ে থাকা প্রাকৃতিক নানা সম্পদও দারুণভাবে কাজে আসে।
(2 / 5)
தலைமுடி வளர்ச்சிக்கும், அதன் கருமையான நிறத்துக்கும் செம்பருத்தி பூ பெரும் பங்கு வகிக்கிறது. செம்பருத்தி பூ போல் அதன் இலைகளும் தலைமுடி உதிர்வை தடுக்கும் வல்லமை கொண்டுள்ளது. இதில் வைட்டமின் சி, ஏ, ஆல்பா ஹைட்ராக்சில் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இவை அனைத்தும் தலை முடி ஆரோக்கியத்துக்கு இன்றியமையாததாக உள்ளது. மயிர்கால்களில் தொற்றுக்கள் ஏற்படுவதை குறைக்கும் தன்மை செம்பருத்தி செடி இலைகளுக்கு உள்ளது
(3 / 5)
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் ஒரு கையளவு செம்பருத்தி இலைகளை ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் அந்த நீரை வடிகட்டி, அதில் வெங்காயத்தின் சாறு சேர்க்க வேண்டும். இந்த கலவையை மயிர்கால்களில் தேய்த்து அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். இதன் பின் மெலிதான ஷாம்பூவால் தலைமுடியை கழுவ வேண்டும். மாதத்தில் 2 முதல் 3 முறை இவ்வாறு செய்வதன் மூலம் தலை முடி உதிர்வு கட்டுக்குள் வரும்
(4 / 5)
ஒரு கையளவு செம்பருத்தி இலைகளை எடுத்து அதில் தேன் கலந்து மிக்ஸியில் விழுதாக அரைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் இந்த கலவையில் பச்சையான பால் சேர்க்க வேண்டும். இந்த கலவையை மாஸ்க் ஆக பயன்படுத்தினால் தலைமுடி மிருதுவாகவும், தலைமுடி உதிர்வும் தடுக்கப்படும். குளிப்பதற்கு 15 நிமிடங்களுக்கு முன்னர் இந்த கலவையை தலையில் தேய்த்தால் உரிய பலனை பெறலாம்
மற்ற கேலரிக்கள்