தேனில் அடங்கி உள்ள மருத்துவ குணங்கள்!

pixa bay

By Pandeeswari Gurusamy
Apr 10, 2024

Hindustan Times
Tamil

மலையில் உள்ள மரங்களில் இருந்து சேகரிக்கப்படும் தேனில், மூலிகை மருத்துவ குணம் இருப்பதால், மருந்து பொருட்களுடன் சேர்த்து கொடுக்கும்போது ஜீரண பாதையில் மருந்து உறிஞ்சப்பட்டு விடுகிறது. இதனால் இரத்த ஓட்டத்தில் மருந்து விரைவில் கலந்து செயல்படத் தொடங்குகிறது.

pixa bay

விரைவில் செரிப்புத் தன்மையை உண்டாக்கி, மலச்சிக்கலை போக்குகிறது.

pixa bay

குழந்தைகள் தினம்தோறும் தேனை அருந்தினால் கால்சியம் மற்றும் மக்னீசியத்தின் அளவு அதிகமாகி நல்ல வலிமை கிடைக்கும்.

pixa bay

கண் நோய், தோல் நோய்களுக்கும் தேனை பயன்படுத்தலாம். வெங்காயச்சாறுடன் தேனை கலந்து சாப்பிட்டால் கண் பார்வை பிரகாசம் அடையும்.

pixa bay

இளம் சூடான வெந்நீருடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து, தேனை அருந்தினால், வாந்தி, குமட்டல், ஜலதோஷம், தலைவலி போன்ற நோய்கள் குணமாகும்.

pixa bay

தேனில் உள்ள குளுக்கோஸ் சத்து சிறிய இரத்த நாளங்களை சீராக விரிவடையச் செய்து, ரத்த ஓட்டத்தை சீராக்கும். இதனால் இதயத்திற்கு ஏற்படும் பாதிப்பு தடுக்கப்படும்.

pixa bay

தேன், முட்டை,பால் கலந்து சாப்பிட்டால் ஆஸ்துமா நோயில் சிக்காமல் தப்பலாம்.

pixa bay

மூட்டு வலிகளுக்கு சிறந்த மருந்து தேன். வலி உள்ள இடத்தில் நன்றாகத் தேய்த்து விட வேண்டும். தினமும் ஒரு ஸ்பூன் தேன் உட்கொண்டு வந்தால் மூட்டுகள் வலிக்காது. 

pixa bay

தேனுடன் இஞ்சி, விதை நீக்கிய பேரிச்சம்பழத்தை ஊற வைத்து சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி பெருகும்.

pixa bay

தூக்கம் ஏற்படுவதற்கு தேன் அருமையான மருந்து ஆகும்.

pixa bay

ஹெல்த்தி பிரேக் ஃபாஸ்ட்