தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Thalicha Sadham : தாளிச்ச சாதம் – ஈசியான லஞ்ச் பாக்ஸ் ரெசிபி! – போரிங் மதிய உணவுக்கு பை பை!

Thalicha Sadham : தாளிச்ச சாதம் – ஈசியான லஞ்ச் பாக்ஸ் ரெசிபி! – போரிங் மதிய உணவுக்கு பை பை!

Priyadarshini R HT Tamil
Nov 13, 2023 12:30 PM IST

Thalicha Sadham : தாளிச்ச சாதம், ஈசியான லஞ்ச் பாக்ஸ் ரெசிபி. போரிங் மதிய உணவுக்கு பை பை.

Thalicha Sadham : தாளிச்ச சாதம் – ஈசியான லஞ்ச் பாக்ஸ் ரெசிபி! – போரிங் மதிய உணவுக்கு பை பை!
Thalicha Sadham : தாளிச்ச சாதம் – ஈசியான லஞ்ச் பாக்ஸ் ரெசிபி! – போரிங் மதிய உணவுக்கு பை பை!

ட்ரெண்டிங் செய்திகள்

எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

கடுகு – கால் ஸ்பூன்

உளுத்தம் பருப்பு – கால் ஸ்பூன்

கடலை பருப்பு – கால் ஸ்பூன்

மிளகு – கால் ஸ்பூன்

சீரகம் – கால் ஸ்பூன்

சோம்பு – கால் ஸ்பூன்

கறிவேப்பிலை – 2 கொத்து

வர மிளகாய் – 2

பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

செய்முறை

ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு, உளுந்து சோர்த்து பொரியவிடவேண்டும். பின்னர் கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின்னர் மிளகு, சீரகம், சோம்பு என அனைத்தும் சேர்த்து நன்றாக பொரிந்து வந்தவுடன், பெரிய வெங்காயத்துடன் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

அதில் மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். அனைத்தும் வதங்கியவுடன் அடுப்பை அணைத்துவிட்டு, அதில் வடித்து, ஆறிய சாதத்தை சேர்த்து நன்றாக கிளறவேண்டும்.

கிளற அரை மணி நேரம் மூடிவைத்துவிடவேண்டும். அப்போதுதான் இந்த சாதத்தில் அந்த தாளிப்புகள் அனைத்தும் இறங்கி நன்றாக இருக்கும்.

இதை குழந்தைகளின் லஞ்ச் பாக்ஸ்க்கு கட்டிகொடுத்தால் சுவை அவர்கள் சாப்பிடும் வரை அப்படியே இருக்கும். வழக்கமான லஞ்ச் பாக்ஸ் ரெசிபியாக இல்லாமல் இது வித்யாசமாக இருப்ப்தால் குழந்தைகளை இதை விரும்பி சாப்பிடுவார்கள்.

இதற்கு மசாலா வறுத்து, அரைத்து செய்த உருளைக்கிழங்கை தொட்டுக்கொண்டு சாப்பிட சுவை அள்ளும். இல்லாவிட்டால் வெறும் ஊறுகாய், வத்தல் அப்பளமே போதுமானது.

பொதுவாக குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸ்க்கு என்ன செய்வது என்பதுதான் பயங்கர குழப்பமான ஒன்று. ஆனால் இந்த தாளிச்ச சாதத்தையும் உங்கள் லஞ்ச் பாக்ஸ் மெனுவில் சேர்த்துகொள்ள கவலை நீங்கும். செய்வது எளிது, குழந்தைகளுக்கும் பிடிக்கும். உங்களுக்கு டென்சனும் குறையும். கட்டாயம் இந்த லஞ்ச் ரெசிபியை செய்துகொடுத்து குழந்தைகளை மகிழ்ச்சிப்படுத்துங்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்