தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  சளித்தொல்லையில் இருந்து விடுபட உதவும் ஊட்டச்சத்து மிக்க உணவுகள்

சளித்தொல்லையில் இருந்து விடுபட உதவும் ஊட்டச்சத்து மிக்க உணவுகள்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Feb 22, 2022 05:43 PM IST

தீராத சளி பிரச்னை, தூக்கமில்லாத இரவுகளுக்கு காரணமாக உள்ளது. இதிலிருந்து உடனடி நிவாரணம் பெற விரும்புவோர் சாப்பிட வேண்டிய உணவுகள் மற்றும் ஆரோக்கிய பானங்கள் பற்றி தெரிந்துகொள்வோம்.

சளி தொல்லையிலிருந்து விடுபட எளிய வீட்டு மருத்துவமுறையை காணலாம்
சளி தொல்லையிலிருந்து விடுபட எளிய வீட்டு மருத்துவமுறையை காணலாம்

ட்ரெண்டிங் செய்திகள்

சளி தொல்லை பாதிப்பு உள்ளவர்களுக்கு மூக்கிலிருந்து தொடர்ந்து சளி வடிதல், தும்மல், இருமல், தொண்டை வலி அல்லது தொண்டை கரகரப்பு ஆகியவை ஏற்படுகிறது. எனவே சளி தொல்லை பாதிப்பிலிருந்து விடுபட, சாப்பிட வேண்டிய ஊட்டச்சத்து மிகுந்த உணவுகள் எவை என்பதை பார்ப்போம்.

கிவி பழம்

ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் சி மற்றும் ஈ உட்பட பல்வேறு ஊட்டச்சத்துகளின் களஞ்சியமாக கிவிப் பழம் உள்ளது. இவை உடலநலத்தை சீராக்குவதோடு மட்டுமல்லாமல், வைரஸ் தொற்றுக்கு உடல் இரையாவைதையும் தடுக்கிறது. 

<p>ஊட்டச்சத்துக்களின் களஞ்சியமாக திகழும் கிவி பழம் ஆன்டிபாடிகள் உருவாக காரணமாக உள்ளது</p>
ஊட்டச்சத்துக்களின் களஞ்சியமாக திகழும் கிவி பழம் ஆன்டிபாடிகள் உருவாக காரணமாக உள்ளது

ஊட்டச்சத்துகள் நிறைந்த இந்தப் பழம் உடலில் ஆன்டிபாடிகள் உருவாக்கத்தை தூண்டுகிறது. உடலுக்கு தீமையை தரும் பேத்தோஜென்களுக்கு எதிராக வெள்ளை ரத்த அணுக்கள் செயல்பட உதவுகிறது.

திரவங்கள் அல்லது கஞ்சி

உடலில் தொற்றின் காரணமாக ஏற்படும் காய்ச்சல், சளியிலிருந்து விரைவில் குணமாக திரவங்கள் அல்லது கஞ்சி உதவுகிறது. உடலில் பல்வேறு பகுதிகளில் சிக்கியுள்ள சளியில் இடம்பெற்றிருக்கும் பாக்டீரியா அல்லது வைரஸ்களை இருமல் மற்றும் தும்மல் மூலம் நீக்க ஈரப்பதம் தேவைப்படுகிறது. 

எனவே சளி ஏற்பட்டால் அதிக அளவில் திரவங்கள் குடிக்க வேண்டும். தண்ணீர், இளநீர், மூலிகை டீ போன்றவற்றை தொண்டை கரகரப்பு மற்றும் மூக்கடைப்பிலிருந்து விடுபடுவதற்கு சாப்பிடலாம். 

காஃபின்கள் அதிகம் நிறைந்த காபி, மதுபானம் போன்றவற்றை குடிப்பதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் அவை உங்கள் சளித்தொல்லையை மேலும் மோசமாக்கும்.

தயிர்

தயிரில் உள்ள நன்மை தரும் பாக்டீரியாக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது. இதிலுள்ள புரதம், வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றுக்கு எதிராக போராடி, உடனடி நிவாரணத்தை தருகிறது.

<p>சளி இருந்தாலும் தயிர் சாப்பிடுவதை தவிர்த்தல் கூடாது</p>
சளி இருந்தாலும் தயிர் சாப்பிடுவதை தவிர்த்தல் கூடாது

இஞ்சி

இஞ்சியில் உள்ள அழற்சி மற்றும் வைரஸ் தொற்றுக்கு எதிரான பண்புகள் சளிக்கு எதிராக நன்கு போராடுகிறது. இஞ்சி கலந்த டீ பருகுவது, இஞ்சியை பச்சையாக சாப்பிடுவது வலியை கட்டுப்படுத்தவும், நெஞ்சு எரிச்சல், தொண்டை கரகரப்பை குறைக்கவும் செய்கிறது.

தேன்

மருத்துவம் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு தன்மை கொண்டதாக இருக்கும் தேன், சளி மற்றும் காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க சிறந்த மருந்தாக உள்ளது. இதிலுள்ள இனிப்பு சுவை, உமிழ்நீர் மற்றும் சளி சுரப்புகளை தூண்டி அடைக்கப்பட்ட காற்று பாதைகளை நீக்குகிறது.

<p>தேன் நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்ததாக மட்டுமல்லாமல் நுண்ணுயிர் கொல்லியாகவும் உள்ளது</p>
தேன் நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்ததாக மட்டுமல்லாமல் நுண்ணுயிர் கொல்லியாகவும் உள்ளது

கொட்டைகள் மற்றும் விதைகள்

உங்கள் உணவில் புரதத்தின் அளவை அதிகரிப்பதற்கு கொட்டைகள் மற்றும் விதைகளை சேர்த்துக்கொள்வது அவசியமாகிறது. காலநிலை மாற்றத்துக்கு ஏற்ப அத்தியாவசிய கொழுப்புகளையும் சேர்த்துக்கொள்ளலாம். குறிப்பாக கொட்டைகள் மற்றும் விதைகளில் செலினியம், வைட்டமின் டி, துத்தநாகம், செம்பு உள்பட இதர ஊட்டச்சத்துகள் உடல் ஆரோக்கியம், நோய் எதிர்ப்பு அமைப்பு மற்றும் சளி சவ்வுகளை பராமரிக்க உதவுகிறது.

WhatsApp channel