தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Sambar Podi : ஓட்டல் ஸ்டைல் சாம்பார் இனி வீட்டிலே செய்யலாம்! இந்த ஒரு பொடி போதும்! ஒரு மாதம் கெடாது!

Sambar Podi : ஓட்டல் ஸ்டைல் சாம்பார் இனி வீட்டிலே செய்யலாம்! இந்த ஒரு பொடி போதும்! ஒரு மாதம் கெடாது!

Priyadarshini R HT Tamil
Mar 10, 2024 12:59 PM IST

Sambar Podi : புளி சேர்க்காமல் இட்லி, தோசை, பொங்கல், உப்புமாவுக்கு தொட்டுக்கொள்ளும் சாம்பாருக்கும் இந்தப்பொடியை பயன்படுத்தலாம். நான் வெஜ் குழம்புகளுக்கு பயன்படுத்தக்கூடாது.

Sambar Podi : ஓட்டல் ஸ்டைல் சாம்பார் இனி வீட்டிலே செய்யலாம்! இந்த ஒரு பொடி போதும்! ஒரு மாதம் கெடாது!
Sambar Podi : ஓட்டல் ஸ்டைல் சாம்பார் இனி வீட்டிலே செய்யலாம்! இந்த ஒரு பொடி போதும்! ஒரு மாதம் கெடாது!

ட்ரெண்டிங் செய்திகள்

கடலை பருப்பு – 2 ஸ்பூன்

உளுந்தம் பருப்பு – 2 ஸ்பூன்

வர மல்லி – 6 ஸ்பூன்

குரு மிளகு – 1 ஸ்பூன்

சீரகம் – ஒரு ஸ்பூன்

வெந்தயம் – கால் ஸ்பூன்

கடுகு – கால் ஸ்பூன்

மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்

பெருங்காயத்தூள் – அரை ஸ்பூன்

அல்லது

கட்டி பெருங்காயம் – 2 சிறிய உருண்டைகள்

வர மிளகாய் – 20

கறிவேப்பிலை – கைப்பிடியளவு

உப்பு – தேவையான அளவு

செய்முறை

கடாயை சூடாக்கி, கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு, துவரம் பருப்பு ஆகிய மூன்று பருப்பையும் சிவக்க வறுக்க வேண்டும்.

பின்னர் மிளகு, சீரகம், வெந்தயம், கடுகு ஆகிய அனைத்தையும் ஒன்றாக சேர்த்து கடுகு வெடித்து வரும் வரை வறுக்க வேண்டும்.

பின்னர் வரமல்லியை வறுக்க வேண்டும்.

வரமிளகாய், கழுவி காயவைத்த கறிவேப்பிலை ஆகிய இரண்டையும் ஒன்றாக சேர்த்து வறுத்துக்கொள்ள வேண்டும்.

வறுத்த அனைத்தையும் சேர்த்து நன்றாக ஆறவைத்து, உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் சேர்த்து காய்ந்த மிக்ஸி ஜாரில் பொடித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

இதை ஒரு காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து வைத்து ஒரு மாதம் வரை பயன்படுத்தலாம்.

பெருங்காயப்பொடி இல்லாமல் முழுதாக சேர்த்தால் நல்லது. அதை அரை ஸ்பூன் எண்ணெயில் வறுத்து, உரலில் தட்டிவிட்டு, மிக்ஸியில் இந்தப்பொருட்களுடன் சேர்த்து அரைக்க வேண்டும். அப்போதுதான் அது நன்றாக அரைபடும்.

பொதுவாக எந்தப்பொடிக்கும் கல் உப்பு சேர்ப்பது நல்லது. இந்துப்பும் சேர்க்கலாம். கல்உப்பு சேர்க்கும்போது அதை நன்றாக வறுத்துக்கொள்ளலாம். அப்போதுதான் உப்பின் ஈரப்பதம், பொடியில் சேராது.

இந்தப்பொடியைப் பயன்படுத்தி சாம்பார் வைப்பது எப்படி?

தேவையான பொருட்கள்

முருங்கை, மாங்காய், கேரட் – 1 கப் (பொடியாக நறுக்கியது)

புளி – எலுமிச்சை அளவு (ஊறவைத்து கரைத்தது)

மஞ்சள் தூள் சேர்த்து வேக வைத்த பருப்பு – ஒரு கப்

வெங்காயம், தக்காளி – ஒரு கப் (நறுக்கியது)

கடுகு, உளுந்து – கால் ஸ்பூன்

கறிவேப்பிலை, மல்லித்தழை – சிறிதளவு

புதிதாக அரைத்த பொடி – 2 ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

செய்முறை

கடாயில் எண்ணெயை சூடாக்கி, கடுகு, உளுந்து தாளித்து பொரிந்தவுடன், கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம், தக்காளி, கேரட், முருங்கை, மாங்காய், தக்காளி சேர்த்து வதக்க வேண்டும்.

அனைத்தும் வதங்கியவுடன், அதில் உப்பு, அரைத்த சாம்பார் மசாலாப்பொடி சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

பின்னர் புளித்தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவேண்டும். பின்னர் வெந்த பருப்பை சேர்த்து கலந்துவிட்டால் சுவையான ஓட்டல் ஸ்டைல் சாம்பார் தயார்.

சூடான சாதத்தில் நெய்யுடன் சேர்த்து சாப்பிட சுவை அள்ளும்.

இந்தப்பொடியை சேர்த்து எந்த காய்கறியையும் வைத்து சாம்பார் வைக்கலாம். மற்ற குழம்பு வகைகளுக்கும், பொரியலுக்கும் கூட இந்தப்பொடியை பயன்படுத்தலாம்.

புளி சேர்க்காமல் இட்லி, தோசை, பொங்கல், உப்புமாவுக்கு தொட்டுக்கொள்ளும் சாம்பாருக்கும் இந்தப்பொடியை பயன்படுத்தலாம். நான் வெஜ் குழம்புகளுக்கு பயன்படுத்தக்கூடாது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel