Garlic Food: சுவையான தேன்-பூண்டு பன்னீர் வறுவல் செய்வது எப்படி?
சுவையான தேன்-பூண்டு பன்னீர் வறுவல் செய்வது எப்படி என்பது குறித்துக் காண்போம்.
சில உணவகத்தில் சாப்பிடும்போது மட்டும் வெரைட்டியான, சுவையான உணவை ருசிப்பர். அது எப்படி தயார் செய்வது என்பதுகூட நமக்குத் தெரிந்திருக்காது. அப்படி ஒரு ருசியான ஆரோக்கியமான உணவுதான், தேன் பூண்டு பன்னீர் வறுவல்.
தூங்குவதற்கு முன் நாம் சாப்பிடும் உணவு ஆரோக்கியமான செரிமான அமைப்பை உறுதி செய்வது முக்கியம். மேற்குறிப்பிட்ட பன்னீர் ஒரு ஆரோக்கியமான உணவுப்பொருள். அது, எடை இழப்புக்கு உதவுவதோடு, மார்பகப் புற்றுநோயின் அபாயத்தையும் குறைக்கிறது. மேலும், நமது பற்கள் மற்றும் எலும்புகளை வலுவாக்குகிறது.
நீரிழிவு நோயாளிகளுக்கும் இது சிறந்தது என்பதால், கீழே உள்ள தேன்-பூண்டு பன்னீர் வறுவல் செய்முறையை செய்து பார்த்து ருசிக்கத் தவறாதீர்கள். தேன் பூண்டு பன்னீர் வறுவலை செய்வது குறித்துப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
பன்னீர் (பாலாடைக் கட்டி) - 250 கிராம்;
தேன் - 2 தேக்கரண்டி;
சோயா சாஸ் - 1 தேக்கரண்டி;
நறுக்கிய வெள்ளைப்பூண்டு - சிறிதளவு;
இஞ்சி - ½ தேக்கரண்டி;
மிளகாய்த்தூள் - ½ தேக்கரண்டி;
உப்பு - சிறிதளவு;
எண்ணெய் - சிறிதளவு
தேவையான முறை:
- ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் இஞ்சி, பூண்டு, மிளகாய்த்தூள் ஆகியவற்றைத் தாளிக்கவும்
- பன்னீர் துண்டுகளை சேர்த்து லேசாக பொன்னிறமாகும் வரை கிளறவும்.
- பின் இரண்டு தேக்கரண்டி தேன், 1 தேக்கரண்டி சோயா சாஸ் மற்றும் சிறிதளவு தேவையான உப்பினைச் சேர்க்கவும்.
- பன்னீர் துண்டுகளை சாஸ் சேர்த்து மேலும் சில நிமிடங்கள் வறுக்கவும். சுவையான தேன்-பூண்டு பன்னீர் வறுவல் ரெடி. இதனை சப்பாத்தி, தோசையில் தொட்டு சாப்பிடலாம். சாதத்தில்கூட பிசைந்து உணவு எடுத்துக்கொள்ளலாம்.
நன்மைகள்:
பன்னீர் ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் பால் புரதங்களின் சத்துக்களைக் கொண்டுள்ளது. கோவிட் -19 தொற்றுநோய்க்கு மத்தியில், தற்போது அனைவரின் உடலையும் வலுவான நோயெதிர்ப்பு மண்டலத்தை உருவாக்க உதவுகிறது.
செரிமான அமைப்பின் இயல்பான செயல்பாட்டிற்கு உதவுகிறது. வளமான கால்சிய சத்தினால், எலும்புகள் மற்றும் பற்களை உருவாக்குகிறது. இது எடை இழப்பு திட்டங்களில் ஒரு முக்கிய அங்கமாக மட்டுமல்லாமல், நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு சிறந்த உணவாகவும், புற்றுநோயின் அபாயத்தையும் குறைக்க உதவுகிறது.
தேன், பெரும்பாலும் மிகவும் ஆரோக்கியமான இனிப்பாகப் பலரால் விரும்பப்படுகிறது. ஏனெனில் இது அதிக ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது. அதிக ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் நொதிகளைக் கொண்டுள்ளது. சர்க்கரையை விட குறைவாக பதப்படுத்தப்படுகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்