தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Pepper Kulambu : வாய்க்கு ருசியான, தொண்டைக்கு இதமான மிளகு குழம்பு – சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட அட்டகாசமான சுவை!

Pepper Kulambu : வாய்க்கு ருசியான, தொண்டைக்கு இதமான மிளகு குழம்பு – சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட அட்டகாசமான சுவை!

Priyadarshini R HT Tamil
Oct 10, 2023 11:00 AM IST

Pepper Kulambu : மழைக்காலத்தில் வாய்க்கு ருசியான, தொண்டைக்கு இதமான மிளகு குழம்பை சூடான சாத்தில் பிசைந்து சாப்பிட அட்டகாசமான சுவை அள்ளும்.

Pepper Kulambu : மழைக்கு இதமான மிளகு குழம்பு – சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட அட்டகாசமான சுவை!
Pepper Kulambu : மழைக்கு இதமான மிளகு குழம்பு – சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட அட்டகாசமான சுவை!

ட்ரெண்டிங் செய்திகள்

வெந்தயம் – 1 டேபிள் ஸ்பூன்

குண்டு காய்ந்த மிளகாய் – 5

தனியா – 1 டேபிள் ஸ்பூன்

சோம்பு – அரை டேபிள் ஸ்பூன்

கடுகு – அரை டேபிள் ஸ்பூன்

மிளகு – 2 டேபிள் ஸ்பூன்

கறிவேப்பிலை – 2 கொத்து

சீரகம் – அரை ஸ்பூன்

தாளிக்க தேவையான பொருட்கள்

எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

கடுகு – கால் ஸ்பூன்

கறிவேப்பிலை – 2 கொத்து

சின்ன வெங்காய – 2 கைப்பிடி

தக்காளி – 2

புளிக்கரைசல் – 1 கப்

மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

கஷ்மீரி மிளகாய் தூள் – 1 ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

ஊறவைத்து அரைக்க தேவையான பொருட்கள்

முந்திரி – 10

கசகசா – அரை ஸ்பூன்

மழைக்கு இதமான இந்த மிளகு குழம்பை மாதம் ஒருமுறை செய்து சாப்பிட்டால் உடலுக்கும் நல்லது மனதுக்கும் நல்லது.

இந்த குழம்புக்கு சைட் டிஷ் தேவையே இல்லை. சூடான சாதம் இருந்தாலேபோதும சாப்பிட்டுவிடலாம். இந்த குழம்பில் சேர்க்க காய்கறிகள் எதுவும் தேவையில்லை.

செய்முறை

ஒரு காய்ந்த கடாயை அடுப்பில் வைத்து சூடாக்கி, பெருங்காயம் 2 கட்டி, வெந்தயம் 1 டேபிள் ஸ்பூன், குண்டு காய்ந்த மிளகாய் 5, தனியா – 1 டேபிள் ஸ்பூன், சோம்பு – அரை டேபிள் ஸ்பூன், கடுகு – அரை டேபிள் ஸ்பூன், மிளகு – 2 டேபிள் ஸ்பூன், கறிவேப்பிலை – 2 கொத்து ஆகிய அனைத்தையும் ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து வறுத்துக்கொள்ள வேண்டும். கடுகு நன்றாக வெடித்து வரும்வரை வறுக்க வேண்டும்.

பின்னர் அடுப்பை அனைத்துவிட்டு சீரகம் மட்டும் அந்த சூட்டிலேயே சேர்க்க வேண்டும். அனைத்தையும் ஆறவைத்து பொடி செய்துகொள்ள வேண்டும்.

பின்னர் கடாயில் எண்ணெய் சூடாக்கி கடுகு, கறிவேப்பிலை தாளித்து, வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும். பின்னர் தக்காளி சேர்த்து நன்றாக குழையும் வரை வதக்க வேண்டும்.

அதில் புளிக்கரைசல், மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்றாக கொதிக்கவிடவேண்டும்.

பின்னர் முந்திரி, கசகசாவை ஊறவைத்து நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும்.

அதையும் கொதிக்கும் குழம்பில் சேர்த்து நன்றாக கொதி வந்தவுடன், அரைத்து வைத்துள்ள பொடியை அதில் சேர்த்து நன்றாக எண்ணெய் பிரிந்து வரும் வரை கெட்டியாக கொதிக்க வைத்து எடுத்தால், சூடான, சுவையான மிளகு குழம்பு தயார்.

சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட சுவை அள்ளும். கட்டாயம் ஒருமுறை செய்து பாருங்கள்.

WhatsApp channel