தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Kudal Varuval: ‘சும்மா நச்சுனு ஒரு புடி..’ குதூகலிக்கும் குடல் வறுவல் செய்யலாமா?

Kudal Varuval: ‘சும்மா நச்சுனு ஒரு புடி..’ குதூகலிக்கும் குடல் வறுவல் செய்யலாமா?

Stalin Navaneethakrishnan HT Tamil
Oct 09, 2023 11:15 AM IST

Food Recipe: விரைவாக, எளிய முறையில் நிறைவான குடல் வறுவல் செய்வது எப்படி தெரியுமா?

சுவையான குடல் வறுவல் செய்முறை
சுவையான குடல் வறுவல் செய்முறை

ட்ரெண்டிங் செய்திகள்

தேவையான பொருட்கள்:

  • கடலை எண்ணெய்-3 ஸ்பூன்
  • பட்டை இலை
  • ஏலக்காய்-3
  • சின்ன வெங்காயம் 7
  • தக்காளி 2
  • இஞ்சி, பூண்டு பேஸ்ட் 2 ஸ்பூன்
  • வீட்டு குழம்பு பொடி
  • மல்லித்தூள் 2 ஸ்பூன்
  • சீரகத்தூள் அரை ஸ்பூன்

செய்முறை விளக்கம்:

நன்கு வெந்நீரில் அலசிய குடலை, குக்கரில் வைத்து 2 விசில் வேக வைக்கவும். முன்னதாக குடல் நன்கு அலசியிருக்க வேண்டும். கூடுதலாக மஞ்சள் தூள் போட்டு நன்கு அலசியிருந்தால் தான், அது சுவையை பாதிக்காது. இப்போது, வேக வைத்த குடலை மீண்டும் ஒரு முறை அலசிவைக்கவும். 

இப்போது கடாயில் கடலை எண்ணெய் சேர்த்து சூடாக்கவும். எண்ணெய் சூடானதும், பட்டை இலை, கிராம்பு போன்றவற்றை தேவைான அளவு போடும். அத்துடன் ஏலக்காய் சேர்க்கவும். அதன் பின் நறுக்கிய சின்ன வெங்காயத்தை எண்ணெயில் போடவும். 

வெங்காயம் வதங்கிய பின், நறுக்கிய தக்காளியை கடாயில் போட்டு வதக்கவும். பின்னர் இஞ்சி, பூண்டு பேஸ்ட் 2 ஸ்பூன் போட்டு சேர்த்து வதக்கவும். பின்னர் தேவையான அளவு வீட்டு குழம்பு மசாலா மூன்று ஸ்பூன் போட்டு பச்சை வாடை போகும் வரை வதக்கவும். மல்லித்தூள் 2 ஸ்பூன், சீரக தூள் அரை ஸ்பூன் சேர்த்து வதக்கவும்.

4 நிமிடம் கழித்து, மசாலா ரெடியானதும், வேக வைத்த குடல் கறியை அதில் போடவும். மசாலாவை சேர்த்து கலக்கும் படி கிண்டவும். மசாலாவும், குடலும் சேர்ந்து ஒரே நிறத்தில் வந்ததும், கடாயை மூடி வைத்து அடுப்பை குறைத்து வைக்கவும். 

மசாலா குடலுடன் ஒட்டில் பொன்னிறமாக மாறும் வரை காத்திருக்கவும். இப்போது மசாலா குடலுடன் ஒட்டி, சட்டியில் ஒட்டும் அளவிற்கு சேர்ந்துவிடும். நன்கு கிண்டிவிட்டு, சிறிது நேரத்தில் இறக்கவும். இப்போது சுவையான குடல் வறுவல் ரெடி. கொஞ்சம் கொத்து மல்லியை மேலே தூவி, பரிமாறி சுவையான உண்ணலாம். 

WhatsApp channel

டாபிக்ஸ்