தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Joint Pain : ஆயுசுக்கும் மூட்டுவலி வராது! இந்த 3 பொருளை வைத்து தேநீர்! 5 நாளைக்கு பருகவேண்டும்!

Joint Pain : ஆயுசுக்கும் மூட்டுவலி வராது! இந்த 3 பொருளை வைத்து தேநீர்! 5 நாளைக்கு பருகவேண்டும்!

Priyadarshini R HT Tamil
Apr 06, 2024 11:13 AM IST

Joint Pain : இதை சாப்பிடுவதால் உங்களுக்கு பக்கவிளைவுகள் கிடையாது. தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும். அலர்ஜியால் ஏற்படும் தும்மல் குறையும். இரும்புச்சத்தை அதிகரிக்கும். மழைகால தொற்றுகள் ஏற்படாமல் தடுக்கும். உடலுக்கு நோய் எதிர்ப்ப அதிகரிக்கும். சிறுநீரகத்தை சுத்திகரிக்கும்.

Joint Pain : ஆயுசுக்கும் மூட்டுவலி வராது! இந்த 3 பொருளை வைத்து தேநீர்! 5 நாளைக்கு பருகவேண்டும்!
Joint Pain : ஆயுசுக்கும் மூட்டுவலி வராது! இந்த 3 பொருளை வைத்து தேநீர்! 5 நாளைக்கு பருகவேண்டும்!

ட்ரெண்டிங் செய்திகள்

தேவையான பொருட்கள்

வரமல்லி விதைகள் – ஒரு ஸ்பூன்

(வாசனை நிறைந்தது. மருத்துவ குணங்கள் உள்ளது. வைட்டமின் ஏ, பி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கார்போஹைட்ரேட், புரதம் என அனைத்து சத்துக்களும் உள்ளது. இதில் அதிகளவில் ஆன்டி ஆக்ஸிடன்ட் உள்ளது. இது கண்களில் ஏற்படக்கூடிய அரிப்பு, அலர்ஜி, கண் சிவத்தல் போன்ற அனைத்து பிரச்னைகளையும் சரிசெய்யும். 

ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும். இதில் உள்ள கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் ஆகிய சத்துக்கள் எலும்புகளுக்கு நல்ல உறுதியைத்தரும். இதனால் எலும்பு தொடர்பான பிரச்னைகள் அனைத்தையும் சரிசெய்து, உடல் வலி, உடல் சோர்வையும் நீக்கும். 

பெண்களுக்கு ஏற்படக்கூடிய கருப்பை தொடர்பான அனைத்து பிரச்னைகளையும் சரிசெய்து, அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு கொடுக்கும். ரத்த சோகை நோயில் இருந்து, எளிதில் விடுவிக்கும்.

சீரகம் – ஒரு ஸ்பூன்

உடல் உள்ளுறுப்புக்களை சுத்தம் செய்யும் வயிறு மற்றும் செரிமான மண்டலத்தை சுத்தப்படுத்தும். இதை தினமும் சிறிதளவு எடுத்தால், வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், அஜீரணம் போன்ற தொல்லைகள் இல்லாமல் இருக்கும். வயிறு தொடர்பான பிரச்னைகள் இல்லாவிட்டால் உடல் சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.

சோம்பு – ஒரு ஸ்பூன்

அதிகளவு இரும்புச்சத்து, வைட்டமின் சி, ஏ உள்ளது. ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். கண் பார்வை குறைபாட்டை சரிசெய்யும். உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும். சிறுநீரை சுத்தப்படுத்தும். பெருங்குடலில் உள்ள பாக்டீரியாக்களை அதிகரிக்கும். நெஞ்செரிச்சல், வாயுக்கோளாறு, அஜீரண கோளாறு, மலச்சிக்கல் பிரச்னைகளை குணப்படுத்தும். பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் பிரச்னைகளை நீக்கும். பற்களில் உள்ள கிருமிகளை அழித்து, வாய் துர்நாற்றத்தை சரிசெய்யும்.

செய்முறை

இரவு உறங்கச்செல்லும் முன், ஒரு டம்ளர் தண்ணீரில் இதை கலந்து அப்படியே மூடிவைத்து விடவேண்டும். இந்த நீரை வடிகட்டி காலையில் வெறும் வயிற்றில் பருகவேண்டும்.

இதை ஆண்கள், பெண்கள் இருவரும் பருகலாம். இது ஈஸ்ட்ரோஜன் பிரச்னைகளை சரிசெய்யும். மாதவிடாய் கோளாறுகளை சரிசெய்யும். பிசிஓடி, பிசிஓஎஸ், தைராய்டு ஆகிய பிரச்னைகளையும் சரிசெய்யும். பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதலை குணப்படுத்தும். சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கும். ரத்தத்தை சுத்தப்படுத்தும்.

யூரிக் ஆசிட் என்பதை குறைக்கும். உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரித்தால், உடல் வலி, உடல் சோர்வு, கை-கால் குத்தல், கை-கால் வலி உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை குணப்படுத்தும்.

ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை கரைத்து வெளியேற்றும். கல்லீரல் தொடர்பான அனைத்து பிரச்னைகள் மற்றும் சிறுநீரக பிரச்னைகளையும் குணப்படுத்தும். ‘

இதை சாப்பிடுவதால் உங்களுக்கு பக்கவிளைவுகள் கிடையாது. தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும். அலர்ஜியால் ஏற்படும் தும்மல் குறையும். இரும்புச்சத்தை அதிகரிக்கும். மழைகால தொற்றுகள் ஏற்படாமல் தடுக்கும். உடலுக்கு நோய் எதிர்ப்ப அதிகரிக்கும். சிறுநீரகத்தை சுத்திகரிக்கும். 

இந்த நீரை பயன்படுத்தி வாய் கொப்பளித்தால், வாயில் உள்ள கிருமிகள் அகலும். மூன்று நாளிலே உங்களுக்கு நல்ல ஒரு வித்யாசம் தெரியும். இதை பருகி அரை மணி நேரம் வேறு எதையும் எடுக்கக்கூடாது. இதை வாரம் ஒருமுறை கட்டாயம் எப்போதும் பருகலாம். பிரச்னைகள் என்றால், 5 நாள் தொடர்ந்து பருகலாம்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்