தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  How To Make Tasty Mushroom Matar

Mushroom Matar : செம டேஸ்டில் ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் கிரீமியாக மஸ்ரூம் மட்டர் செய்யலாமா? இதோ ஈஸி டிப்ஸ்!

Divya Sekar HT Tamil
Apr 18, 2024 09:44 AM IST

Mushroom Matar : மஸ்ரூம் மட்டர் ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் கிரீமியாக எப்படி செய்வது என்பது குறித்து இதில் பார்க்கலாம். கண்டிப்பாக இதனை வீட்டில் ட்ரை பண்ணி பாருங்கள்.

மஷ்ரூம் மட்டர்
மஷ்ரூம் மட்டர்

ட்ரெண்டிங் செய்திகள்

பட்டாணி 100 கிராம்

இலவங்கப்பட்டை (சிறிய துண்டு)

ஏலக்காய் (1)

கிராம்பு (2),

பெருஞ்சீரகம் விதைகள் 1/2 தேக்கரண்டி

வெங்காயம் 1

இஞ்சி பூண்டு விழுது 1 டீஸ்பூட்ஸ் செஃப்

தக்காளி 1

மிளகாய் தூள் 1 டீஸ்பூன்

மஞ்சள் தூள் 1/4 டீஸ்பூன்

மிளகு 1/2 டீஸ்பூன்

உப்பு 1 டீஸ்பூன்

தயிர் 2 டீஸ்பூன்

பாப்பி விதைகள் 1/2 டீஸ்பூன்

முந்திரி 5

கொத்துமல்லி தழை

மஷ்ரூம் மட்டர்

மஸ்ரூம் மட்டர் ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் கிரீமியாக எப்படி செய்வது என்பது குறித்து இதில் பார்க்கலாம். கண்டிப்பாக இதனை வீட்டில் ட்ரை பண்ணி பாருங்கள். ருசி உங்களை விடாது. மீண்டும் மீண்டும் சமைக்க தூண்டும் அந்த அளவிற்கு இதன் சுவை இருக்கும்.

முதலில் ஒரு கடாய் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் எண்ணெய், பட்டை, இலவங்கம், ஏலக்காய் சேர்த்து வதக்கி விடுங்கள். பின்னர் பெருஞ்சீரகமும் சேர்த்து வதக்குங்கள் அதில் நறுக்கி வைத்த வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.

பின்னர் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சிறிய தக்காளி இரண்டு பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். நன்கு வதக்க வேண்டும். பின்னர் அதில் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சேர்த்து நன்கு வதக்க வேண்டும். எண்ணெய் பிரியும் வரை அடுப்பை சிம்மில் வைத்து நன்கு வதக்க வேண்டும்.

இப்போது அதில் இரண்டு ஸ்பூன் கெட்டி தயிர் சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் ஐந்து முந்திரியுடன் அரை ஸ்பூன் கசகசாவை நன்கு ஊற வைத்து அதனை அரை மணி நேரம் வரை ஊற வைக்க வேண்டும். பின்னர் அதனை அரைத்து வதக்கி வைத்த தக்காளியில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

நன்கு என்னைப் பிரிந்து வதங்கியதும் அதில் சுத்தம் செய்து வைத்த மஷ்ரூம், பச்சை பட்டாணியை சேர்த்து வதக்குங்கள். சிறிது தண்ணீர் விடுங்கள் ஏனெனில் மஸ்ரூமில் தண்ணீர் இருக்கும் அதனால் சிறிது தண்ணீர் விட்டு 15 நிமிடம் மூடி வைத்து நன்கு வேக விடவும். 

கடைசியாக கொஞ்சம் பட்டர் கொத்தமல்லி தழையைதூவி இறக்கி விடுங்கள். அவ்வளவுதான் உங்களுக்கு இப்போது மஸ்ரூம் மட்டர் ரெடி.இந்த சுவையான ரெசிபியை வீட்டில் சமைத்து கொடுங்கள்.

காளானின் நன்மைகள்

வயிற்று பிரச்னை தீரும் காளானில் வயிற்று புண்ணை எதிர்க்கும் குணங்கள் உள்ளன. எலும்புகளை பலமாக்கும் காளானில் கால்சியம் சத்து அதிகம் உள்ளது.

பசியை குறைக்கிறது காளானை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ள பசியும் அடிக்கடி எடுக்காது. காளான் நம் சருமத்திற்கும் நன்மை தரும். காளானை ஃபிரஷ்ஷாக சமைக்க வேண்டும். ஃபிரிட்ஜில் வைத்து சமைப்பதை தவிர்க்க வேண்டும்.

மலச்சிக்கலைத் தீர்க்கும் தன்மை கொண்டது. கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் தினமும் காலான் சூப் அருந்தி வந்தால் விரைவில் உடல் தேறும்.

காளான் சாப்பிடுபவர்களுக்கு உடலில் இந்த செலினியம் சத்து அதிகரித்து உடலின் எலும்புகளின் உறுதித்தன்மையை அதிகப்படுத்துகிறது. பற்கள், நகங்கள், தலைமுடிகள் வளர்ச்சிக்கும் உறுதுணை புரிகிறது. ஆண்களுக்கு உயிரணுக்களை அதிகப்படுத்தி மலட்டு தன்மையை நீக்குகிறது.

WhatsApp channel

டாபிக்ஸ்