Mushroom Kuruma : மணமணக்கும், மனம் மயக்கும் சுவையில் காளான் குருமா! ஈசியாக செய்யலாம் இந்த மாதிரி!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Mushroom Kuruma : மணமணக்கும், மனம் மயக்கும் சுவையில் காளான் குருமா! ஈசியாக செய்யலாம் இந்த மாதிரி!

Mushroom Kuruma : மணமணக்கும், மனம் மயக்கும் சுவையில் காளான் குருமா! ஈசியாக செய்யலாம் இந்த மாதிரி!

Priyadarshini R HT Tamil
Apr 05, 2024 07:00 AM IST

Mushroom Kuruma : பசியை குறைக்கிறது காளானை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ள பசியும் அடிக்கடி எடுக்காது. காளான் நம் சருமத்திற்கும் நன்மை தரும். காளானை ஃபிரஷ்ஷாக சமைக்க வேண்டும். ஃபிரிட்ஜில் வைத்து சமைப்பதை தவிர்க்க வேண்டும்.

Mushroom Kuruma : மணமணக்கும், மனம் மயக்கும் சுவையில் காளான் குருமா! ஈசியாக செய்யலாம் இந்த மாதிரி!
Mushroom Kuruma : மணமணக்கும், மனம் மயக்கும் சுவையில் காளான் குருமா! ஈசியாக செய்யலாம் இந்த மாதிரி!

பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

பச்சை மிளகாய் – 2

இஞ்சி - பூண்டு விழுது – 2 ஸ்பூன்

கறிவேப்பிலை – கைப்பிடி

மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

மிளகாய்த் தூள் – ஒரு ஸ்பூன்

மல்லித் தூள் – அரை ஸ்பூன்

கரம் மசாலா தூள் – ஒரு ஸ்பூன்

புதினா இலைகள் – ஒரு கைப்பிடி

கொத்தமல்லி இலை – கைப்பிடியளவு

பட்டை – 2

கிராம்பு – 3

சோம்பு – ஒரு ஸ்பூன்

எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

நெய் – 2 டேபிள் ஸ்பூன்

அரைக்க தேவையான பொருட்கள்

தேங்காய்த்துருவல் – அரை கப்

முந்திரி – 7

சோம்பு – ஒரு ஸ்பூன்

பொட்டுக்கடலை – ஒரு டேபிள் ஸ்பூன்

செய்முறை

குக்கரில் நெய் மற்றும் எண்ணெய் விட்டு சூடானவுடன் ஒரு ஸ்பூன் சோம்பு, 2 பட்டை மற்றும் 3 கிராம்பு சேர்த்து தாளிக்கவேண்டும்.

பின் பொடியாக நறுக்கிய வெங்காயம், கீறிய பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவேண்டும்.

வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கியவுடன், 2 ஸ்பூன் இஞ்சி - பூண்டு விழுதை சேர்த்து வதக்கவேண்டும்.

இஞ்சி - பூண்டின் பச்சை வாசம் போனவுடன், பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவேண்டும். தக்காளி பாதியாக வதங்கியவுடன், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் மற்றும் மல்லித்தூள் சேர்த்து வதக்கவேண்டும்.

மிக்ஸி ஜாரில் அரை கப் தேங்காய்த்துருவல், 7 முந்திரி, ஒரு ஸ்பூன் சோம்பு மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் பொட்டுக்கடலை சேர்த்து சிறிது தண்ணீர்விட்டு நைசாக அரைத்துக்கொள்ளவேண்டும்.

தக்காளியோடு மசாலா பொருட்கள் நன்றாக சேர்ந்து வந்ததும், அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து கைவிடாமல் வதக்கவேண்டும். பின்னர், அதில் நறுக்கிய காளான் துண்டுகளை சேர்த்து கலந்து தேவையான அளவு உப்பு, ஒரு ஸ்பூன் கரம் மசாலா தூள் மற்றும் 2 கப் தண்ணீர் ஊற்றி மூடிவைத்து 2 விசில் வரும் வரை வேகவைத்து இறக்கவேண்டும்.

குக்கரில் இருக்கும் ஆவி தானாக அடங்கிய பின் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை மற்றும் புதினா சேர்த்து கலந்து 20 நிமிடங்கள் மூடி வைக்கவேண்டும். பின் பரிமாறும் பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளவேண்டும். ஈஸியான காளான் குருமா தயார்.

நன்றி – விருந்தோம்பல்.

காளானின் நன்மைகள்

வயிற்று பிரச்னை தீரும் காளானில் வயிற்று புண்ணை எதிர்க்கும் குணங்கள் உள்ளன. எலும்புகளை பலமாக்கும் காளானில் கால்சியம் சத்து அதிகம் உள்ளது.

பசியை குறைக்கிறது காளானை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ள பசியும் அடிக்கடி எடுக்காது. காளான் நம் சருமத்திற்கும் நன்மை தரும். காளானை ஃபிரஷ்ஷாக சமைக்க வேண்டும். ஃபிரிட்ஜில் வைத்து சமைப்பதை தவிர்க்க வேண்டும்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்த ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.