Benefits of Dry Ginger : 40 வயதுக்கு மேல் இந்த பொடியை தினமும் உணவில் சேர்த்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்!
Health Tips : சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை. சுப்ரமணியனுக்கு மிஞ்சிய கடவுளும் இல்லை என்பது பழமொழி. 40 வயதை கடந்தவர்களுக்கு சுக்கு செய்யும் நன்மைகளை தெரிந்துகொள்ளுங்கள்.
40 வயதுக்கு மேல் உள்ளவர்கள் இந்தப்பொடியை கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் 40 வயதுக்கு உட்பட்டவர்களும் எடுத்துக்கொள்ளலாம்.
பல்வேறு பிரச்னைகள் காரணமாக சிலருக்கு இளம் வயதிலேயே மூட்டு வலி, நெஞ்செரிச்சல், பாத வலி, பாத எரிச்சல், இடுப்பு வலி அஜீரண கோளாறு, வயிற்று வலி, மலச்சிக்கல், வாய் துர்நாற்றம், தலைவலி, ஒற்றை தலைவலி, தலையில் நீர்கோர்த்தல், மூக்கொழுகுதல் போன்ற பல்வேறு பிரச்னைகளை சரிசெய்யக்கூடியது இந்தப்பொடி.
சுக்கு – ஒரு இன்ச்
(மேலே உள்ள தோலை கத்தியில் சுரண்டி எடுத்துவிட்டு, உள்ளே உள்ள சதைப்பகுதியை மட்டுமே பயன்படுத்த வேண்டும். தலைவலி, தலையில் நீர்கோர்த்தல், சைனஸ் பிரச்னைகள் இருமல், சளி போன்ற பிரச்னைகளால் சிலர் தொடர்ந்து அவதிப்பட்டு வருவார்கள்.
ஒற்றைததலைவலி பிரச்னைகளும் சிலருக்கு ஏற்படும். அவர்கள் நீண்ட தூர பயணங்கள் செய்ய முடியாது. பயணம், வேலைப்பளு, டென்சன் ஆகியவை காரணமாக தலைவலி ஏற்படும். இவையனைத்தையும் சரிசெய்யக்கூடியது சுக்கு.
இதுபோன்ற நீண்ட கால தலைவலியால் பாதிக்கப்பட்டவர்கள், ஒரு கல்லில் ஒரு ஸ்பூன் பால் சேர்த்து அதில் சுக்கை இழைத்து அந்த பேஸ்ட்டை தலைவலி உள்ள இடத்தில் தடவினால் தலைவலி நீங்கும். இதனுடன் பெருங்காயத்தையும் சேர்த்து இழைத்துக்கொள்ளலாம் அல்லது பெருங்காயப்பொடியை சேர்த்துக்கொள்ளலாம்.
10 நிமிடங்கள் கழித்து கழுவினால் தலைவலி நீங்கும். தலைபாரம், தலையில் நீர்கோர்த்தல் என அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வாகிறது.
சிறுநீரகப்பிரச்னை, மாதவிடாய், மூட்டு வலி, கை-கால் வலி பிரச்னைகளை இவையனைத்தையும் சரிசெய்யவும் சுக்கு உதவுகிறது.
சுக்குப்பொடி – சிறிதளவு
சுக்குப்பொடி ரெடிமேடாக கிடைப்பதை பயன்படுத்தலாம் அல்லது சுக்கு வாங்கி அதை தோல் நீக்கி, அதை உரலில் இடித்துவிட்டு, பின்னர் மிக்ஸியில் சேர்த்து பொடியாக்கி சலித்து வைத்து பயன்படுத்திக்கொள்ளலாம்.
இந்த சுக்குப்பொடியுடன், வெந்தயப்பொடியை சேர்த்து கலந்து தண்ணீருடன் பேஸ்ட் தயாரித்து இதை முழங்காலில் தடவினால் மூட்டுவலி குணமாகும். உடல் எடை குறைக்க சுக்குப்பொடி உதவும்.
ஒரு டம்ளர் தண்ணீரில் அரை ஸ்பூன் சுக்குப்பொடியை கலந்து அதை கொதிக்க வைத்து, வடிகட்டி, தேன் கலந்து தினமும் காலையில் பருகினால், உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைத்து தொப்பையின் அளவை குறைத்து உடல் எடையை சீராக பராமரிக்க உதவுகிறது.
மிதமான சூட்டில் உள்ள பாலில் அரை ஸ்பூன் சுக்குப்பொடி சேர்த்துவிட்டு, அதனுடன் பனங்கற்கண்டு, நாட்டுச்சர்க்கரை சேர்த்து தினமும் இரவில் உறங்கச்செல்லும் முன் பருகவேண்டும். இதனால் எவ்வித பக்கவிளையும் ஏற்படுத்தாது.
உடலில் பித்தம் சீராக இருக்க உதவுகிறது. அஜீரண கோளாறாறை சரிசெய்யும், மலச்சிக்கல் பிரச்னைகளும் இருக்காது. காலையில் வயிறு சுத்தமாகும். மாதவிடாய் கால பிரச்னைகள் நீங்கும். பயணத்தில் ஏற்படும் வாந்தி, சோர்வு நீங்கும். அனைத்து வயதினரும், அனைத்து தரப்பினரும் எடுத்துக்கொள்ளலாம். உடலுக்கு பல்வேறு நன்மைகளை தரும்.
சுக்குப்பொடியில் சிறிது உப்பு சேர்த்து பல் துலக்கினால், வாய் துர்நாற்றம் நீங்கும். இந்தப்பாலில் மிளகு சேர்த்து பருகினால், சளி, இருமலும் குணமாகும். 40 வயதை கடப்பவர்களுக்கு ஏற்படும் அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு தரும்.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்