Health Tips : உடலுக்கு தேவையான கால்சியம் மற்றும் புரதம் வேண்டுமா? இந்த லட்டு மட்டும் தினமும் சாப்பிடுங்க போதும்!
Health Tips : அரிசி உணவுகளைப்போல், அவலை சமைப்பதற்கு நீண்ட நேரம் தேவையில்லை. எளிதில் வெந்துவிடும் என்பதால், சுடுதண்ணீர் மற்றும் பாலிலே இதை சமைத்துவிட முடியும் என்பது அவலை வைத்து காலை உணவு தயாரிப்பதில் இருக்கக்கூடிய நன்மைகள்.

தேவையான பொருட்கள்
மாப்பிள்ளை சம்பா அவல் – ஒரு கப்
நெய் – 2 டேபிள் ஸ்பூன்
முந்திரி – ஒரு கைப்பிடி
திராட்சை – ஒரு கைப்பிடி
தேங்காய் துருவல் – ஒரு கப்
பாதாம் – 2 டேபிள் ஸ்பூன் (துருவியது) ‘
ஏலக்காய்ப்பொடி – 2 சிட்டிகை
காய்ச்சிய பால் – கால் டம்ளர்
நாட்டுச்சர்க்கரை அல்லது பொடித்த வெல்லம் – 4 ஸ்பூன்
செய்முறை
ஒரு கடாயில் நெய் சேர்த்து அதில் மாப்பிள்ளை சம்பா அவலை சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும்.
பின்னர் அதை ஆறவைத்து ஒரு காய்ந்த மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக பொடித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
கடாயில் நெய்யை சூடாக்கி, அதில் முந்திரி, திராட்சை வறுத்து பொடித்த அவலில் சேர்க்க வேண்டும்.
பின்னர் தேங்காயை அதே கடாயில் சேர்த்து வதக்கி அந்த கலவையில் சேர்க்க வேண்டும்.
பின்னர் துருவிய பாதாம், ஏலக்காய் பொடி, நாட்டுச்சர்க்கரை அல்லது பொடித்த வெல்லம் சேர்த்து அவல் கலவையை நன்றாக கலந்து பால் சேர்த்து லட்டுகளாக பிடித்து வைத்துக்கொள்ள வேண்டும்.
இந்த லட்டுகளை பள்ளி விட்டு வீடு திரும்பும் குழந்தைகளுக்கு ஸ்னாக்சாக கொடுக்கலாம். அவர்களுக்கு ஆரோக்கியம் நிறைந்த சுவையான லட்டாக இது இருக்கும்.
மாப்பிள்ளை சம்பா அவலின் நன்மைகள்
மாப்பிள்ளை சம்பா, தமிழகத்தில் வளர்க்கப்படும் பாரம்பரிய அரிசி. இது பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் நிறைந்தது. இந்த அரிசியில் இருந்து தயாரிக்கப்படுவது மாப்பிள்ளை சம்பா அவல், இதில் செய்யப்படும் காலை உணவு அல்லது ஸ்னாக்ஸ்கள் தென்னிந்தியாவில் மிகவும் பிரபலம்.
அரிசியை தீட்டி, இடித்தால், மாப்பிள்ளை சம்பா அவல் கிடைக்கும். இதில் உள்ள ஈரத்தை போக்கவும், நீண்ட நாள் நன்றாக இருக்கவும் இது பின்னர் காயவைக்கப்படுகிறது.
இதில் கொழுப்புச்சத்து குறைவு மற்றும் சோடிய சத்து நிறைந்தது. இது ஆரோக்கியம் நிறைந்த உணவாகிறது.
இந்த அவலை தயிருடன் சேர்த்து சாப்பிட அதிகளவில் கால்சியம் மற்றும் புரதச்சத்தும் கிடைக்கும். உடலுக்கு சிறப்பான ஆரோக்கியத்தை கொடுக்கிறது.
இது சுவையானது மற்றும் எளிதில் செரிமானமாகக் கூடியது. செரிமான கோளாறுகள் உள்ளவர்களுக்கு இது சிறந்த உணவு. உடனடியாக பலம் கொடுப்பது. இதில் வைட்டமின் பி1 சத்து நிறைந்துள்ளது. ரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது.
இதில் உள்ள இரும்புச்சத்துக்கள் கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு சிறந்த உணவு.
இது புரோபயோடிக் உணவு என்பதால், குடல் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. வயிறு உப்புசத்தை தடுக்கிறது. இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட் சத்துக்கள் நிறைந்துள்ளது. சருமம் மற்றும் இதயம் தொடர்பான பிரச்னைகளை சரிசெய்கிறது. நார்ச்சத்துக்கள் நிறைந்தது. இதில் உள்ள ஆரோக்கியமான கார்போஹைட்ரேட்கள் மற்றும் கொழுப்புகள் நீண்ட நேரம் பசி ஏற்படாமல் தடுக்கிறது.
அரிசி உணவுகளைப்போல், அவலை சமைப்பதற்கு நீண்ட நேரம் தேவையில்லை. எளிதில் வெந்துவிடும் என்பதால், சுடுதண்ணீர் மற்றும் பாலிலே இதை சமைத்துவிட முடியும் என்பது அவலை வைத்து காலை உணவு தயாரிப்பதில் இருக்கக்கூடிய நன்மைகள்.
மாப்பிள்ளை சம்பா அவலில் வடை, கட்லட், இட்லி, தோசை, உப்புமா, மிட்டாய், லட்டு என பல்வேறு உணவுகள் செய்யலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
https://www.facebook.com/HTTamilNews
https://www.youtube.com/@httamil
Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்