தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Ground Water : வாழ்வை மாற்றும் அடுத்த அதிர்ச்சி! நிலத்தடி நீர்மட்டம் குறைவு! பாதிப்புக்கள் என்ன?

Ground Water : வாழ்வை மாற்றும் அடுத்த அதிர்ச்சி! நிலத்தடி நீர்மட்டம் குறைவு! பாதிப்புக்கள் என்ன?

Priyadarshini R HT Tamil
May 10, 2024 07:00 AM IST

Ground Water Level : தமிழகத்தில் 26 மாவட்டங்களில் (மேற்கு மாவட்டங்கள் கூடுதல் பாதிப்பு) நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துள்ளது-

Ground Water : வாழ்வை மாற்றும் அடுத்த அதிர்ச்சி! நிலத்தடி நீர்மட்டம் குறைவு! பாதிப்புக்கள் என்ன?
Ground Water : வாழ்வை மாற்றும் அடுத்த அதிர்ச்சி! நிலத்தடி நீர்மட்டம் குறைவு! பாதிப்புக்கள் என்ன?

ட்ரெண்டிங் செய்திகள்

11 மாவட்டங்களில் (குறிப்பாக டிசம்பர் கனமழையால், தெற்கு மாவட்டங்கள்) நிலத்தடி நீர்மட்டம் சற்று உயர்ந்துள்ளது.

தமிழகத்தின் முக்கிய 90 நீர்தேக்கங்களில் 10ல் சொட்டு தண்ணீர் கூட கிடையாது.

குறிப்பாக, மேற்கு மாவட்டங்களில் போதிய மழையின்மை காரணமாக, நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துள்ளது.

தர்மபுரியில் கடந்த ஏப்ரலில் 5.78 மீட்டர் ஆழத்தில் நீர் கிடைத்தது. தற்போது, 8.98 மீட்டர் ஆழத்தில் தான் நீர் கிடைக்கிறது.

நாமக்கல்லில், கடந்த ஏப்ரலில், 6.15 மீட்டர் ஆழத்தில் நீர் கிடைத்தது. தற்போது 9.34 மீட்டர் ஆழத்தில் தான் கிடைக்கிறது.

கோயம்புத்தூரில் கடந்த ஏப்ரலில், 9.4 மீட்டர் ஆழத்தில் நீர் கிடைத்தது, தற்போது 10.85 மீட்டர் ஆழத்தில் தான் கிடைக்கிறது.

மாவட்ட வாரியான விவரம்

சேலம்- 5.62 மீட்டர்- 7.83 மீட்டர்

கிருஷ்ணகிரி- 2.99 மீட்டர்- 4.63 மீட்டர்,

திருப்பூர்-6.08 மீட்டர்- 7.63 மீட்டர்

பெரம்பலூர்-6.15 மீட்டர்-9.19 மீட்டர்,

திருப்பத்தூர்-4.15 மீட்டர்-7.1 மீட்டர்,

திருச்சி-5.39 மீட்டர்-7.91 மீட்டர்,

வேலூர்-5.17 மீட்டர்-6.79 மீட்டர்,

சிவகங்கை-3.64 மீட்டர்-5.2 மீட்டர்

என கடந்த ஏப்ரலைவிட இந்த ஏப்ரலில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது.

தலைநகர் சென்னையில் கடந்த ஏப்ரலைவிட இந்த ஏப்ரலில்,0.5 மீட்டர் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது.

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் கடந்தாண்டு டிசம்பரில் பெய்த கனமழையால், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

மழைநீரை சேமிக்கும் திட்டங்களும், பெய்யும் மழைநீரைத் தேக்கி வைக்க குளங்கள் அல்லது நீர்நிலைகள் தமிழகத்தில் முறையாக இல்லாததால், தமிழக அரசு அதை சரியாக பயன்படுத்திக் கொள்ளாததால் (உ.ம். சென்னையில் பெய்யும் 90 சதவீத மழைநீர் வீணாக கடலில் கலக்கிறது) நிலத்தடி நீர்மட்டம் குறைய அது முக்கிய காரணமாகிறது.

மேற்கு மாவட்டங்களில் போதிய நிலத்தடி நீர் இல்லாததால், அங்கு பயிரிடப்படும், நிலக்கடலை, தென்னை மற்றும் பிற பணப்பயிர்கள் பயிரிடுவதில் விவசாயிகள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர். மேற்கு மாவட்டங்களில் பயிர்களை நடவு செய்யாமல் விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

மேட்டூர் அணையில் நீர் அளவு மிகவும் குறைந்துள்ளதால்,அப்பகுதி விவசாயிகள், அடுத்து என்ன செய்வது என்ற அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

மழைநீரைத் தேக்கும் வடிகால் அமைப்புகளை உருவாக்குவதில், மக்களும், விவசாயிகளும் போதிய விழிப்புணர்வோடு செயல்படுதல் முக்கியம்.

அரசும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் 2,600 குளங்கள் காணாமல் போனதைக் கண்டுகொள்ளாமல் இருப்பது சரியா?

குளங்கள் பராமரிப்பு?

பல மழைநீரை சேமிக்கும் குளங்கள் முறையாக பராமரிக்கப்படாமல், பயன்பாட்டில் இல்லாமல் இருப்பது முக்கிய குறையாகும்.

நீர்மேலாண்மைத் திட்டங்களுக்கு (நீரை சேமிக்க) தமிழக அரசு அருகில் உள்ள கர்நாடகா, ஆந்திரா போன்று, அதிக நிதியை ஒதுக்குவதில்லை எனத் தமிழக நீர்வளத்துறை அதிகாரிகளே கூறுகின்றனர்.

தமிழக நீர்வளத்துறை, வெளியிலிருந்து நிறுவனங்கள் (Japan International Cooperation Agency) தரும் உதவியை நீர்மேலாண்மைத் திட்டங்களுக்கு எதிர்நோக்கி காத்திருப்பதால், பல திட்டங்களை உரிய நேரத்தில் செய்து முடிக்காமல் காலதாமதம் ஏற்படுகிறது.

ஏற்கனவே உள்ள ஆழ்துளைக் குழாய்களை மழைநீர் சேகரிப்பிற்கு பயன்படுத்த நீர்வளத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

தமிழக மாநில திட்டக்குழுவும், நீர்வளத்துறையும் இணைந்து, நிபுணர்கள், விவசாயிகள் பங்களிப்புடன் தமிழக அரசு நீர் மேலாண்மைக் கொள்கைகளை (1994,2012ம் ஆண்டுகளில் கொண்டுவரப்பட்டது) நடைமுறைப்படுத்த திட்டங்கள் தீட்டி வருகிறது.

இந்த இக்கட்டான கடும் வெப்ப அலை சூழலிலும், தென் மாவட்டங்களில் 2023 டிசம்பரில் பெய்த கனமழையாலும், அதன் பின்னர் ஏற்பட்ட கடும் வெப்பத்தாலும் (40°C), மதுரை, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் 1,000 எக்டேரில் பயிரிடப்பட்ட வேப்பமரத்தில் பூக்கள் நன்றாக பூத்திருப்பதால் (90 சதவீதம் in full bloom-கடந்த 30 ஆண்டுகளில் 4 முறை மட்டுமே அதிக வேப்பம் பூக்கள் பூத்துள்ளது.), 

அதைப் பறிக்க கிராமப் பெண்கள் முன்வந்து நாள் ஒன்றுக்கு ரூ.600 வரை வருமானம் ஈட்ட முடிகிறது என்பது மழை மற்றும் வெப்ப சூழலில் வேப்பம் பூக்கள் அதிகம் பூத்ததை கிராமப்புற பெண்கள் பயன்படுத்திக் கொண்டு, தங்களின் வாழ்வாதாரத்தை காத்துக் கொண்டது சிறப்பு.

பெய்யும் மழைநீரை முறையாக சேமித்தால் தான் தமிழக நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த முடியும். தமிழக அரசு அக்கறை காட்டுமா?

நன்றி – மருத்துவர். புகழேந்தி.

WhatsApp channel

டாபிக்ஸ்