Chicken Ghee Roast : சிக்கன் நெய் ரோஸ்ட்! நாவில் எச்சில் ஊறும் சுவையில் செய்து சாப்பிடலாம்! இதோ ரெசிபி!
Chicken Ghee Roast : சிக்கன் நெய் ரோஸ்ட் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்
சிக்கனை ஊறவைக்க
சிக்கன் – ஒரு கிலோ
எலுமிச்சை பழச்சாறு – ஒரு பழம்
கெட்டி தயிர் – ஒரு டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
மிளகாய் தூள் – ஒரு ஸ்பூன்
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
மசாலா விழுது அரைக்க
வர மிளகாய் - 10
வரமல்லி – 2 டேபிள் ஸ்பூன்
சீரகம் – ஒரு ஸ்பூன்
சோம்பு – ஒரு ஸ்பூன்
முழு மிளளு – ஒரு ஸ்பூன்
வெந்தயம் – சிறிதளவு
பூண்டு – 8 பல்
ஊறவைத்த புளி – சிறிதளவு
சிக்கன் நெய் ரோஸ்ட்
நெய் – 6 டேபிள் ஸ்பூன்
ஊறவைத்த சிக்கன்
அரைத்த மசாலா விழுது
வெல்லம் – 2 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பில்லை – 2 கொத்து
செய்முறை -
சிக்கனை ஊறவைக்க
பாத்திரத்தில், சிக்கன், எலுமிச்சைபழச்சாறு, தயிர், உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து நன்றாக பிசையவேண்டும். இதை ஒரு மணி நேரம் ஊறவைக்கவேண்டும்.
மசாலா விழுது அரைக்க -
கடாயில், எண்ணெய் இன்றி, வர மிளகாய், வரமல்லி, சீரகம், சோம்பு, முழு மிளகு, வெந்தயம் சேர்த்து வாசனை வரும் வரை வறுக்கவேண்டும்.
வாசனை வந்ததும், ஆறவிட்டு, மிக்ஸியில் போடவேண்டும்.
இதனுடன், பூண்டு, ஊறவைத்த புளி, சிறிதளவு தண்ணீர் ஊற்றி, விழுதாக அரைக்கவேண்டும்.
சிக்கன் நெய் ரோஸ்ட் செய்ய -
அகலமான கடாயில், நெய், ஊறவைத்த சிக்கன் சேர்த்து அதிக தீயில் 10 நிமிடம் கிண்டவேண்டும்.
சிக்கன் துண்டுகளை எடுத்து வைக்கவேண்டும்.
கடாயில் உள்ள மசாலா நீரை ஒரு நிமிடம் கொதிக்கவிடவேண்டும்.
இதில் அரைத்த மசாலா விழுது மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் கொதிக்கவிடவேண்டும்.
இதில் வெல்லம் மற்றும் நெய் சேர்த்து மேலும் 5 நிமிடம் கொதிக்கவிடவேண்டும்.
நெய் பிரிய ஆரம்பித்ததும், இதில் எடுத்து வைத்த சிக்கன் துண்டுகளை போட்டு, உப்பு சேர்த்து மசாலாவில் ஈரம் வற்றும் வரை, 20 நிமிடம் கிண்டவேண்டும்.
கடைசியாக இதில் கறிவேப்பில்லை சேர்த்து கிண்டவேண்டும்.
சிக்கன் நெய் ரோஸ்ட் தயார்.
இந்த சிக்கனை நீங்கள் பிரியாணியுடன் பரிமாறிக்கொள்ள நன்றாக இருக்கும். இதை செய்வதும் எளிது. இதை ஊறவைத்து வறுக்கவேண்டும். அதிக நெய் ஊற்றி இதை வறுக்கவேண்டும். இதை கட்டாயம் செய்து, சாப்பிட்டு மகிழுங்கள்.
சிக்கன் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
மனஅழுத்தத்துக்கு மருந்து
சிக்கனில் டிரிப்டோஃபன் மற்றும் அமினோ அமிலம் உள்ளது. இவையிரண்டும் உடலில் செரோட்டினின் சுரக்க உதவுகிறது. இது உங்கள் மனநிலையை மகிழ்ச்சிப்படுத்தும் ஒரு வேதிப்பொருள்.
இதில் உள்ள வைட்டமின் மற்றும் மினரல்கள் மூளை இயக்கத்துக்கு உதவுகிறது
வைட்டமின் பி12 மற்றும் சோலைன் உள்ளது. இது குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது. நரம்பு மண்டலத்துக்கும் உதவுகிறது. வயோதிகர்களுக்கு நினைவாற்றலை வழங்குகிறது.
சாப்பிடுவதற்கு எளிதானது
சிக்கன் சாப்பிடுவது எளிதானது. கடித்து விழுங்க சிறந்தது. சுவை நிறைந்தது. இதில் அதிக புரதச்சத்து அதிகம் உள்ளது.
சிக்கன் தசையை வலுப்படுத்துகிறது
இதில் உயர்தர புரதச்சத்து உள்ளது. 30 கிராம் புரதச்சத்து தசை வளர்ச்சிக்கு உதவுகிறது.
எலும்பை வலுப்படுத்துகிறது
இதில் உள்ள புரதச்சத்து எலும்பு ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.
இதய ஆரோக்கியத்துக்கு உதவுகிறது
வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் நிறைந்தது. இது இதய ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.
எடை இழக்க உதவுகிறது
புரதச்சத்து நிறைந்தது. அது ரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது. எடையை மேலாண்மை செய்ய உதவுகிறது.
சிக்கனை முழுமையாக சமைத்துதான் சாப்பிட வேண்டும். முறையாக சாப்பிடவேண்டும். அப்போதுதான் உணவில் இருந்து பரவும் நோய்கள் குணமாகும். 165 டிகிரியில் அதை எப்போதும் சமைப்பதை உறுதிப்படுத்த வேண்டும். இது சளி, இருமலை குணப்படுத்த உதவுகிறது. இது சிங்க் மற்றும் புரதச்சத்து நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது.
டாபிக்ஸ்