தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Benefits Of Badam Pisin Apart From Cooling The Body See How Many Benefits There Are In Badam Pisin

Benefits of Badam Pisin : உடலை குளிர்விப்பது மட்டுமின்றி பாதாம் பிசினில் எத்தனை நன்மைகள் உள்ளது பாருங்க!

Priyadarshini R HT Tamil
Mar 19, 2024 07:30 AM IST

Benefits of Badam Pisin : ஜெல்லி போல் இருக்கும் பாதாம் பிசினை காயவைத்தால் அது கட்டியாகிவிடும். பார்க்க கற்கண்டு போல் இருக்கும். மரத்தில் கொஞ்சம் இலைகளும், பூக்களும் இருக்கும் இலையுதிர் காலத்தில் இது பெறப்படுகிறது. காய்ந்த பாதாம் பிசின் ஊறவைத்து பயன்படுத்தப்படுகிறது.

Benefits of Badam Pisin : உடலை குளிர்விப்பது மட்டுமின்றி பாதாம் பிசினில் எத்தனை நன்மைகள் உள்ளது பாருங்க!
Benefits of Badam Pisin : உடலை குளிர்விப்பது மட்டுமின்றி பாதாம் பிசினில் எத்தனை நன்மைகள் உள்ளது பாருங்க! (kannukutty organics)

ட்ரெண்டிங் செய்திகள்

பாதாம் பிசினில் 92.3 சதவீதம் கார்போஹைட்ரேட்கள் உள்ளது. 2.4 சதவீதம் புரதம் மற்றும் 0.8 சதவீத கொழுப்பு உள்ளது. மேலும் இதில் பொட்டாசியம், கால்சியம், சோடியம், இரும்புச்சத்து மற்றும் மெக்னீசிய சத்தும் நிறைந்துள்ளது.

மரத்தில் இருந்து வெளியேறும் பிசின் கத்தியில் வெட்டி எடுக்கப்படுகிறது. இதற்கு சுவையும், மணமும் கிடையாது. இயற்கையானது, தண்ணீரில் கரையக்கூடியது. இது காயவைத்து சந்தைக்கு அனுப்பப்படுகிறது.

ஜெல்லி போல் இருக்கும் பாதாம் பிசினை காயவைத்தால் அது கட்டியாகிவிடும். பார்க்க கற்கண்டு போல் இருக்கும். மரத்தில் கொஞ்சம் இலைகளும், பூக்களும் இருக்கும் இலையுதிர் காலத்தில் இது பெறப்படுகிறது. காய்ந்த பாதாம் பிசின் ஊறவைத்து பயன்படுத்தப்படுகிறது.

பாதாம் பிசின் எண்ணற்ற நன்மைகளை உடலுக்கு தருகிறது.

உடலை இயற்கையான முறையில் குளிர்விக்கிறது

பாதாம் பிசின் அல்சர், அசிடிட்டி, வயிறு உப்புசம், வயிறு எரிச்சல், மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு ஆகிய பிரச்னைகளுக்கு தீர்வு கொடுக்கிறது. இதில் உள்ள குளிர்விக்கும் திறன், உடலின் சூட்டை குறைக்கிறது. மூலநோய் கொண்டவர்களும், பாதாம் பிசினில் இருந்து நன்மைகளை பெற முடியும். உடலின் அதிக சூட்டை தணிக்கிறது.

உடல் எடை அதிகரிக்க உதவுகிறது

பாதாம் பிசின் உடல் எடையை அதிகரிக்கச் செய்கிறது. இதில் 90 சதவீதம் கார்போஹைட்ரேட்கள் உள்ளது. இதனால் அது உடல் எடையை அதிகரிக்க உதவுகிறது. இதை பாலில் சேர்த்து பருக ஒல்லியானவர்கள், உடல் எடையை அதிகரிக்கலாம். இதனால் எடை தூக்குபவர்கள் இதை அதிகளவில் பயன்படுத்துகிறார்கள். இதில் உள்ள சாப்பிடக் கூடிய பிசின் உடல் எடை அதிகரிக்க உதவுகிறது. அதன் மூலம் அதிக எடையை தூக்கலாம்.

கொழுப்பை குறைக்கிறது

பாதாம் பிசின் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்க உதவுகிறது. மேலும் ரத்தத்தில் உள்ள இன்சுலின் அளவையும் முறைப்படுத்துகிறது. பாதாம் பிசினை உணவில் வழக்கமாக எடுத்துக்கொண்டால், கொழுப்பை குறைப்பதுடன், உடலில் ரத்தத்தின் அளவையும் பராமரிக்க உதவுகிறது. இதய ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. இதனால் பல இதய நோய்கள் தடுக்கப்படுகிறது.

நோய் எதிர்ப்பை அதிகரிக்கிறது

பாதாம் பிசினில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் புரதச்சத்துக்களும், மினரல்களும் நரம்பு மண்டலத்தின் இயக்கத்தை அதிகரிக்கிறது. மேலும் உடலின் நோய் எதிர்ப்பை பலப்படுத்துகிறது.

வயோதிகத்தை தள்ளிப்போடுகிறது

சருமத்தை ஃப்ரி ரேடிக்கல்கள்களிடம் இருந்து காப்பாற்றுகிறது. இந்த ஃப்ரி ரேடிக்கல்களே இளம் வயதிலே வயோதிக தோற்றம் ஏற்படுவதற்கு காரணமாகிறது. இதில் உள்ள புரதம் மற்றும் மினரல்கள் இரண்டும், சிறந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்களாக உள்ளன.

தசைகளை வலுப்படுத்துகிறது

பாதாம் பிசின், உடல் வலி மற்றும் முதுகு வலிகளை குணப்படுத்துகிறது. இதனால் தசைகள் வலுவடைகிறது. இது உடலில் ஆரோக்கியமான தசைகள் உருவாக வழிவகுக்கிறது.

பருவகால பிரச்னைகளை போக்குகிறது

இருமல், சளி மற்றும் சளி அடைத்துக்கொள்வதை குணப்படுத்துகிறது. இது மேலும் பல குளிர்கால பிரச்னைகளையும் சரிசெய்கிறது. கோடை காலத்தில் உடலின் வெப்ப நிலையை முறைப்படுத்துகிறது. இதில் உள்ள குளிர்விக்கும் உட்பொருட்கள் கோடை கால சரும வறட்சியை போக்க உதவுகிறது. இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகளுக்காக இதை தினமும் உட்கொள்ளலாம்.

கருவுறுதலுக்கு உதவுகிறது

கருவுறுதலுக்கு முன் உடலை வலுப்படுத்த பாதாம் பிசின் உதவுகிறது. பாதாம் பிசினில் சக்தி வாய்ந்த ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இது மாதவிடாய் சுழற்சியை முறைப்படுத்த உதவுகிறது.

கர்ப்ப கால பயன்கள்

கர்ப்ப காலத்தில் எலும்பை உறுதிப்படுத்தி, உடலுக்கு வலு கொடுக்கிறது. கரு வளர்ச்சிக்கு உதவுகிறது. இது பிரசவித்த பின்னர் மாதவிடாய் சுழற்சி முறையாவதற்கு உதவுகிறது.

சருமத்தில் உள்ள காயங்களை விரைந்து குணப்படுத்த உதவுகிறது

இதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் சருமத்தில் உள்ள காயங்களை விரைந்து குணப்படுத்துகிறது. இது பல்வேற சரும நிலைகளுக்கு உதவுகிறது. இது சரும அழற்சி, வீக்கம், ரேஷ்கள், முகப்பருக்கள், தொற்றுகள் மற்றும் பல்வேறு பிரச்னைகளை குணப்படுத்துகிறது.

இதனால் கோடைக்காலத்தில் சருமத்திற்கு பயன்படுத்தும் அழகுசாதன பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது. வெயிலால் ஏற்படும் கட்டிகளை குணப்படுத்த உதவுகிறது.

உடல் எடை குறைப்பிலும் உதவுகிறது

பாதாம் பிசின் உடல் எடை அதிகரிப்பில் மட்டுமல்ல உடல் எடை குறைப்பிலும் உதவுகிறது. உடலின் வளர்சிதை மாற்றத்தை மாற்றுவதன் மூலம் உடல் எடையை குறைக்க உதவுகிறது. இது நீண்ட நேரத்துக்கு வயிறு நிறைந்த உணர்வை கொடுப்பதால் பசியைக் கட்டுப்படுத்துகிறது.

பாதாம் பிசினை கோடைக்காலத்தில் அதிகம் பயன்படுத்த வேண்டும். மற்ற காலங்களிலும் பயன்படுத்தலாம். கோடை காலங்களில் உடல் வெப்பநிலை சமநிலையில் பராமரிக்க உதவுகிறது.

குளிர் காலத்தில் உடலுக்கு தேவையான புரதச்சத்தை கொடுக்கிறது. மேலும் எலும்பு, மூட்டுகள், தசைகளை குளிரில் இருந்து காக்கிறது. உடலை குளிர்விக்கும் பானங்களில் கலந்து இது பெரும்பாலும் உட்கொள்ளப்படுகிறது.

இதை காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து ஒருமாதம் வரை இவற்றை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும்.

இதை அதிகளவில் எடுத்துக்கொள்வது, வயிற்றில் பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. எனவே இதை மிதமான அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். அதிகம் எடுத்தால் மூச்சுத்திணறல், நரம்பு கோளாறுகளை ஏற்படுத்தும். பாலூட்டும் தாய்மார்கள் மருத்துவரின் பரிந்துரையுடன் இதனை உட்கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்