National Almond Day 2024: கிமு காலம் முதலே விளைவிக்கப்படும் பாதாம்! தேசிய பாதாம் நாள் வரலாறு, முக்கியத்துவம் பின்னணி
தேசிய பாதாம் நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் அதன் வரலாறு, முக்கியத்துவம், பின்னணி குறித்து தெரிந்து கொள்ளலாம்
ஆண்டுதோறும் தேசிய பாதாம் நாள் பிப்ரவரிம் 16ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. பாதாமை டயட்டில் சேர்ப்பதற்கான முக்கியத்துவம், அதன் ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளவும், பாதாமை கொண்டாடுவதற்கான நாளாகவும் இந்த நாள் அமைகிறது.
ஊட்டச்சத்து மிகுந்த பாதாமில் இருந்து வரும் பன்முகதன்மையின் முக்கியத்துவத்தையும், பாதாம் கொட்டையின் அறுவடை குறித்த வரலாறும் நூற்றாண்டு காலமாக மனிதர்களால் பாதாம் எவ்வாறு கொண்டாடப்படுகிறது என்பது பற்றியும் விழிப்புணர்வும் இந்த நாளில் ஏற்படுத்தப்படுகிறது
பாதாம் வரலாறு
மேற்கு ஆசியாவை பூர்வீகமாக கொண்ட பாதாம் உடலுக்கு அடிப்படை தேவையான ஊட்டச்சத்துகள், புரதம், நார்ச்சத்து, தாதுக்கள், ஆரோக்கிய கொழுப்புகள் போன்றவற்றை ஏராமான கொண்டிருப்பதோடு, சாப்பிடுவதற்கு ஆரோக்கியமான தேர்வாக இருந்து வருகிறது.
தேசிய பாதாம் நாள் முக்கியத்துவம்
இந்த ஆண்டுக்கான தேசிய பாதாம் நாள் பிப்ரவரி 16, வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்கப்படுகிறது. சிறந்த உணவு ஆதாரங்களில் ஒன்றாக பாதாம் இருப்பதாக பைப்பிளில் கூறப்படும் நிலையில், சீனா மற்றும் மத்திய ஆசிய பகுதிகளில் இது அதிகமாக விளைவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதன் ஆரம்பகால அறுவடை தொடர்பாக பல்வேறு கருத்துகள் எழுந்தாலும், மனிதர்களால் விளைவிக்கப்பட்ட மிகவும் பழமை வாய்ந்த உணவு பொருள்களில் ஒன்றாக பாதாம் இருந்து வருகிறது. ஆசிய, மத்திய தரைக்கடல் பகுதிகளுக்கு இடையே பயனிப்பவர்கள் பாதாமை ஸ்நாக்ஸ் போன்று சாப்பிட்டதாக வரலாற்று ரீதியாக நம்பப்படுகிறது.
மத்திய தரைக்கடல் பகுதியிலும் இந்த மரங்கள் அதிகம் காணப்பட்டதால் ஐரோப்பாவில் பாதாம் விளைச்சல் அதிகமாக இருந்ததாகவும், குறிப்பாக ஸ்பெயின் மற்றும் இத்தாலி பகுதிகளில் பாதாம் அதிகமாக விளைந்ததாகவும் கூறப்படுகிறது. 1800களில் உலகில் அதிக அளவில் பாதாம் விளைவிக்கும் நாடாக அமெரிக்கா மாறியது.
தேசிய பாதாம் நாள் காலவரிசை
கி.மு. 4000ஆம் ஆண்டில் பாதாம் மரங்களின் சாகுபடி மத்தியதரைக் கடலில் நிலத்தில் தொடங்குகியதாக கூறப்படுகிறது. கி.மு. 1352 காலகட்டத்தில் டுட் மன்னரின் கல்லறையில்அவர் மறைவுக்கு பிறகான வாழ்க்கையில் உணவாக கருதப்பட்டு பாதாம் பருப்புகள் வைக்கப்பட்டன.
1850களில் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் பாதாம் வளர்ப்பது, உற்பத்தி செய்வது என்கிற புதிய தொழில் தொடங்கியது. 2003இல் 1.5 அவுன்ஸ் பாதாம் சாப்பிடுவது இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது என்று FDA எனப்படும் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (Food and Drug Administration) அறிவுறுத்தியது.
தேசிய பாதாம் நாள் கொண்டாடுவது எப்படி?
பாதாமை பரிசாக கொடுப்பது
பாதாம் ஒரு சுவை மிகுந்த பருப்பு வகையாக இருப்பதால் அதன் மீது உருகிய சாக்லேட்டை ஊற்றி, உலர்ந்த பழங்கள் போன்ற உங்கள் விருப்பத்தை ஈர்க்கும் பிற பொருட்களை சேர்த்து, சாக்லேட் கெட்டியானதும், அந்த பட்டையை துண்டுகளாக உடைத்து, பேக் செய்து விரும்பியவர்களுக்கு பரிசாக கொடுக்கலாம்
வெவ்வேறு காம்போவில் பாதாம் பருப்புகளை சாப்பிடுவது
பாதாமில் தேன் கலந்து, தேனுடன் வறுத்து என பல்வேறு சுவை விருப்பங்களில் சாப்பிடலாம்.
பாதாம் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்
- ஒற்றை நிறைவுறா கொழுப்புகள் நிறைந்திருக்கும் பாதாம் இதய நோய் பாதிப்பை குறைக்கிறது.
- கலோரி அடர்த்தி அதிகமாக காணப்படுவதால் உடல் எடையை நிர்வகிக்க உதவுகிறது. குறைவான க்ளைசெமிக் குறியீடு கொண்டிருக்கும் பாதாம் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கிறது
- கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் ஆகியவற்றின் சிறந்த ஆதாரமாக இருந்து வருவதால் வலுவான ஆரோக்கியமான எலும்புகளை பெற உதவுகிறது. பாதாமில் இருக்கும் வைட்டமின் ஈ சருமத்துக்கு ஆரோக்கியத்தை தருகிறது. சூரிய கதிர்களால் ஏற்படும் பாதிப்பிலிருந்து பாதுகாப்பு அரணாகவும், வயது மூப்பை குறைக்கவும் செய்கிறது.
- நார்ச்சத்து மிக்க பாதாம் செரிமான ஆரோக்கியத்தை பேனி பாதுகாத்து மலச்சிக்கல் ஏற்படுவதை தடுக்கிறது. புரதம், ஆரோக்கிய கொழுப்புகல் போன்ற ஆற்றலை மேம்படுத்தும் ஊட்டச்சத்துகள் நாள் முழுவதும் ஆற்றலுடன் இருக்க உதவுகிறது
- சுவையும், ஊட்டச்சத்தும் மிக்கதாக இருந்து வரும் பாதாமை உங்களது உணவில் சேர்த்து உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்