தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Badam Pisin Payasam Badam Pisin Payasam Can Be Made From Cotton Cools The Summer Heat Are There So Many Benefits

Badam Pisin Payasam : பட்டுன்னு செய்யலாம் பாதாம் பிசின் பாயாசம்! கோடை வெயிலை குளிர்விக்கும்! இத்தனை நன்மைகளும் உள்ளதா?

Priyadarshini R HT Tamil
Mar 12, 2024 01:00 PM IST

Badam Pisin Payasam : ஜெல்லி போல் இருக்கும் பாதாம் பிசினை காயவைத்தால் அது கட்டியாகிவிடும். பார்க்க கற்கண்டு போல் இருக்கும். மரத்தில் கொஞ்சம் இலைகளும், பூக்களும் இருக்கும் இலையுதிர் காலத்தில் இது பெறப்படுகிறது. காய்ந்த பாதாம் பிசின் ஊறவைத்து பயன்படுத்தப்படுகிறது.

Badam Pisin Payasam : பட்டுன்னு செய்யலாம் பாதாம் பிசின் பாயாசம்! கோடை வெயிலை குளிர்விக்கும்! இத்தனை நன்மைகளும் உள்ளதா?
Badam Pisin Payasam : பட்டுன்னு செய்யலாம் பாதாம் பிசின் பாயாசம்! கோடை வெயிலை குளிர்விக்கும்! இத்தனை நன்மைகளும் உள்ளதா?

ட்ரெண்டிங் செய்திகள்

முந்திரி – ஒரு கைப்பிடி

பிஸ்தா – ஒரு கைப்பிடி

பாதாம் – ஒரு கைப்பிடி

(பாதாம் பிசினை ஓரிரவு ஊறவைக்க வேண்டும். முந்திரி, பாதாம், பிஸ்தா என அனைத்தையும் தனியாக ஓரிவு ஊறவைக்க வேண்டும்)

துருவிய தேங்காய் – ஒரு கப்

நாட்டுச்சர்க்கரை – ஒரு ஸ்பூன்

மாதுளை முத்துக்கள் – 2 ஸ்பூன்

துருவிய நட்ஸ் – 2 ஸ்பூன்

செய்முறை

ஊறவைத்த நட்ஸ்களை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நல்ல பேஸ்டாக அரைத்துக்கொள்ள வேண்டும். இதனுடன், வாழைப்பழம் வேண்டுமானால் சேர்த்துக்கொள்ளலாம்.

ஒரு கப் தேங்காயை அரைத்து பால் எடுத்துக்கொள்ள வேண்டும்.

அந்தப்பாலில், அரைத்த நட்ஸ் பேஸ்ட்டை கலந்துவிடவேண்டும். பின்னர் பாதாம் பிசின், நட்ஸ் துருவல் மற்றும் மாதுளை முத்துக்களை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் மற்றும் நாட்டுச்சர்க்கரை சேர்த்து கலக்கினால் சுவையான பாதாம் பிசின் பாயாசம் தயார்.

வெயில் காலத்திற்கு உடலை குளிர்ச்சியாக வைக்கும்.

பாதாம் பிசினின் நன்மைகள்

பாதாம் மரத்தில் இருந்து வடியும் கம் அல்லது கோந்து அல்லது பிசின் போன்றது. இதில் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இது தென்மேற்கு ஆசியா மற்றும் ஈரான், இந்தியா, பாகிஸ்தானில் கிடைக்கிறது.

பாதாம் பிசினில் 92.3 சதவீதம் கார்போஹைட்ரேட்கள் உள்ளது. 2.4 சதவீதம் புரதம் மற்றும் 0.8 சதவீத கொழுப்பு உள்ளது. மேலும் இதில் பொட்டாசியம், கால்சியம், சோடியம், இரும்புச்சத்து மற்றும் மெக்னீசிய சத்தும் நிறைந்துள்ளது.

மரத்தில் இருந்து வெளியேறும் பிசின் கத்தியில் நறுக்கி எடுக்கப்படுகிறது. இதற்கு சுவையும், மணமும் கிடையாது. இயற்கையானது, தண்ணீரில் கரையக்கூடியது. இது காயவைத்து சந்தைக்கு அனுப்பப்படுகிறது. 

ஜெல்லி போல் இருக்கும் பாதாம் பிசினை காயவைத்தால் அது கட்டியாகிவிடும். பார்க்க கற்கண்டு போல் இருக்கும். மரத்தில் கொஞ்சம் இலைகளும், பூக்களும் இருக்கும் இலையுதிர் காலத்தில் இது பெறப்படுகிறது. காய்ந்த பாதாம் பிசின் ஊறவைத்து பயன்படுத்தப்படுகிறது.

பாதாம் பிசின் எண்ணற்ற நன்மைகளை உடலுக்கு தருகிறது.

உடலை இயற்கையான முறையில் குளிர்விக்கிறது.

உடல் எடை அதிகரிக்க உதவுகிறது.

கொழுப்பை குறைக்கிறது.

நோய் எதிர்ப்பை அதிகரிக்கிறது.

வயோதிகத்தை தள்ளிப்போடுகிறது.

தசைகளை வலுப்படுத்துகிறது.

பருவகால பிரச்னைகளை போக்குகிறது.

கருவுறுதலுக்கு உதவுகிறது.

கர்ப்ப காலத்தில் எலும்பை உறுதிப்படுத்தி, உடலுக்கு வலு கொடுக்கிறது. கரு வளர்ச்சிக்கு உதவுகிறது.

சருமத்தில் உள்ள காயங்களை விரைந்து குணப்படுத்த உதவுகிறது.

உடல் எடை குறைப்பிலும் உதவுகிறது.

பாதாம் பிசினை கோடைக்காலத்தில் அதிகம் பயன்படுத்த வேண்டும். மற்ற காலங்களிலும் பயன்படுத்தலாம். கோடை காலங்களில் உடல் வெப்பநிலை சமநிலையில் பராமரிக்க உதவுகிறது. 

குளிர் காலத்தில் உடலுக்கு தேவையான புரதச்சத்தை கொடுக்கிறது. மேலும் எலும்பு, மூட்டுகள், தசைகளை குளிரில் இருந்து காக்கிறது. உடலை குளிர்விக்கும் பானங்களில் கலந்து இது பெரும்பாலும் உட்கொள்ளப்படுகிறது.

இதை காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து ஒருமாதம் வரை இவற்றை பாதுகாப்பாக வைத்து பருக முடியும்.

இதை அதிகளவில் எடுத்துக்கொள்வது, வயிற்றில் பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. எனவே இதை மிதமான அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். அதிகம் எடுத்தால் மூச்சுத்திணறல், நரம்பு கோளாறுகளை ஏற்படுத்தும். பாலூட்டும் தாய்மார்கள் மருத்துவரின் பரிந்துரையுடன் இதனை உட்கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்