தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Kerala Special Ghee Biriyani : கேரளா ஸ்பெஷல் சைவ நெய் சோறு! புரட்டாசி மாத பிரியாணி கிரேவிங்குகளுக்கு தீர்வு!

kerala special Ghee Biriyani : கேரளா ஸ்பெஷல் சைவ நெய் சோறு! புரட்டாசி மாத பிரியாணி கிரேவிங்குகளுக்கு தீர்வு!

Priyadarshini R HT Tamil
Oct 07, 2023 10:30 AM IST

Bai Veetu Biriyani : கேரளா ஸ்டைல் சைவ நெய் சோறு. புரட்டாசியில் உங்களுக்கு ஏற்படும் பிரியாணி கிரேவிங்குகளுக்கு இது ஒரு நல்ல தீர்வாகும்.

kerala special Ghee Biriyani : கேரளா ஸ்பெஷல் சைவ நெய் சோறு! புரட்டாசி மாத பிரியாணி கிரேவிங்குகளுக்கு தீர்வு!
kerala special Ghee Biriyani : கேரளா ஸ்பெஷல் சைவ நெய் சோறு! புரட்டாசி மாத பிரியாணி கிரேவிங்குகளுக்கு தீர்வு!

ட்ரெண்டிங் செய்திகள்

தேங்காய் பால் – 3 கப்

நெய் – 2 டேபிள் ஸ்பூன்

பச்சை மிளகாய் – 4

புதினா – கைப்பிடி

கொத்தமல்லித்தழை – கைப்பிடி

முந்திரி – கைப்பிடி

முழு கரம் மசாலா – பட்டை, கிராம், ஸ்டார் சோம்பு, ஏலக்காய், பிரியாணி இலை

வெங்காயம் – 2

தக்காளி – 1

இஞ்சி-பூண்டு விழுது – 1 ஸ்பூன்

தயிர் அல்லது எலுமிச்சை சாறு – சிறிதளவு

உப்பு – தேவையான அளவு

செய்முறை

பிரியாணி பாத்திரத்தில் நெய்விட்டு சூடானதும், எடுத்து வைத்துள்ள முழு கரம் மசாலா பட்டை, கிராம்பு, ஸ்டார் சோம்பு, ஏலக்காய், பிரியாணி இலை சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின்னர் அதில் வெங்காயம், பச்சை மிளகாய், போதியஅளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

வெங்காயம் கண்ணாடி பதம் வரும்வரை வதங்கியவுடன், இஞ்சி-பூண்டு விழுது, புதினா, கொத்தமல்லித்தழை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

அனைத்தும் நன்றாக வதங்கியவுடன் எடுத்து வைத்துள்ள முந்திரி சேர்த்து சிவந்தவுடன், தயிர் அல்லது எலுமிச்சை சாறு மற்றும் நறுக்கிய தக்காளி சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

சீரக சம்பா அரிசி, ஒரு கப் அரிசிக்கு இரண்டரை கப் தண்ணீர் சேர்க்க வேண்டும். எனவே எடுத்து வைத்துள்ள அரிசிக்கு 5 முதல் ஐந்தரை கப் தண்ணீர் வைத்துக்கொள்ளலாம் அல்லது நீங்கள் வழக்கமாக வைக்கும் அளவு தண்ணீரும் வைத்துக்கொள்ளுங்கள்.

நன்றாக இடையிடையே கிளறிவிட்டுக்கொள்ள வேண்டும். பின்னர் மூடிவைத்து கொதிக்க வைக்க வேண்டும்.

கொதி வந்தவுடன், குறைவான தீயில் 10 நிமிடம் மூடி வைத்து திறந்து பார்த்தால் மணமணக்கும் பாய் வீட்டு நெய் பிரியாணி சாப்பிட தயார்.

இதற்கு பன்னீர், மஸ்ரூம், காளிஃபிளவர், அனைத்து காய்கறிகளும் சேர்த்து செய்த எந்த கிரேவியும் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம்.

புரட்டாசி மாதத்தில் பிரியாணியை மிஸ் செய்பவர்களுக்கு இந்த பாய் வீட்டு நெய் பிரியாணி ஒரு சிறந்த சாய்ஸ்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel