தமிழ் செய்திகள்  /  Latest News  /  Tamil Latest News Updates

இன்றைய முக்கிய நிகழ்வுகள்

Tamil Latest News Updates: ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம்-தமிழக அரசு உத்தரவு

06:04 PM ISTHT Tamil Desk
  • Share on Facebook
06:04 PM IST

இன்று (23-02-2022) தமிழ்நாடு, இந்தியா, உலகம், விளையாட்டு உள்ளிட்ட செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்தப் பக்கத்தில் இணைந்திருங்கள்.

Thu, 23 Feb 202304:15 PM IST

அரையிறுதியில் இந்தியா தோல்வி

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி அரையிறுதியில் தோல்வி அடைந்தது. ஆஸி., 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.

Thu, 23 Feb 202303:45 PM IST

பிரபல நடிகர் மயில்சாமி இறப்பு தவறான தகவல்கள் - மகன் எச்சரிக்கை!

அப்பாவை பற்றி தவறான தகவல்களை பரப்புவோர் மீது தேவைப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்.

-மயில்சாமி மகன் 

Thu, 23 Feb 202303:20 PM IST

ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்

தமிழக அரசு 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

Thu, 23 Feb 202303:13 PM IST

ரயிலை நிறுத்தி இரு தரப்பு கல்லூரி மாணவர்கள் மோதல்!

பொன்னேரி ரயில் நிலையம் அருகே புறநகர் ரயிலை நிறுத்தி இரு தரப்பு கல்லூரி மாணவர்கள் மோதி கொண்டனர். இதில் ஒருவர் காயம் அடைந்துள்ளார்

Thu, 23 Feb 202302:39 PM IST

ஆஸி., அபாரம்

டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான அரையிறுதியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 172 ரன்களை குவித்துள்ளது.

Thu, 23 Feb 202302:14 PM IST

காங்கிரஸ் மூத்த தலைவர் கைது

காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கெராவை டெல்லியில் போலீஸார் கைது செய்தனர். பின்னர், அவர் உச்சநீதிமன்றத்தில் இடைக்கால ஜாமீன் பெற்றார்.

Thu, 23 Feb 202301:43 PM IST

ஓபிஎஸ் நிலைப்பாடு என்ன?

"என்னுடைய நிலைப்பாட்டை அறிக்கை மூலம், விரைவில் தெரிவிக்க உள்ளேன்" என்று உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி அளித்தார்.

Thu, 23 Feb 202301:10 PM IST

டிஎன்பிஎல் ஏலம்

டிஎன்பிஎல் போட்டியில் வீரர்களுக்கான ஏலம் நடைபெற்று வருகிறது. அதில் விஜய் சங்கரை 10.25 லட்சத்துக்கு திருப்பூர் தமிழன்ஸ் அணியும் வாஷிங்டன் சுந்தரை மதுரை பாந்தர்ஸ் அணி ரூ.6.75 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது. மூன்றாவது வீரராக நடராஜனை ரூ. 6.25 லட்சத்துக்கு திருச்சி அணி ஏலம் எடுத்தது.

Thu, 23 Feb 202312:32 PM IST

கோகுல்ராஜ் வழக்கு: மேல்முறையீடு மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு 

கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கில், சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட தீரன் சின்னமலை பேரவை யுவராஜ் உள்ளிட்டோரின் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது உத்தரவிட்டுள்ளது. 

Thu, 23 Feb 202312:28 PM IST

கோவையில் உலாவிய மக்னா யானை பிடிபட்டது!

டாப்சிலிப் வனப்பகுதியில் இருந்து கிராமங்கள் வழியாக நுழைந்து வந்த மக்னா யானை, கோவை பேரூரில் தஞ்சமடைந்திருந்தது. அப்பகுதியில் சுற்றித் திரிந்த மக்னா காட்டு யானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது.

 

Thu, 23 Feb 202312:10 PM IST

இபிஎஸ்ஸுக்கு இது தற்காலிக வெற்றியே-டிடிவி தினகரன்

'இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி வெற்றிபெற்றிருக்கிறார். இது தற்காலிக வெற்றி தான்' என்று அமமுக பொதுச் செயலார் டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.

Thu, 23 Feb 202311:21 AM IST

சத்தீஸ்கர் புதிய ஆளுநர் பதவியேற்பு

சத்தீஸ்கர் மாநிலத்தின் 9வது ஆளுநராக பிஸ்வ பூசன் ஹரிசந்தன் பதவியேற்றார்.

Thu, 23 Feb 202310:07 AM IST

பெரம்பலூரில் அழுகிய முட்டைகள் விநியோகம்

பெரம்பலூர் மாவட்டம் ஆலந்தூர் ஊராட்சியில் உள்ள சத்துணவு மையங்களுக்கு கெட்டுபோன முட்டைகள் வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது. கெட்டுப்போன முட்டைகளுக்கு பதிலாக மாற்று முட்டைகள் வழங்க சத்துணவு மோளர் ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். 

Thu, 23 Feb 202309:20 AM IST

மலேசியாவில் கடந்த ஓராண்டில் 150 வெளிநாட்டவர்கள் பலி

கடந்த ஆண்டு 150 வெளிநாட்டவர்கள் புலம்பெயர்ந்தோர் தடுப்பு மையங்களில் இறந்தது குறித்து விசாரணை நடத்த மலேசியாவுக்கு மனித உரிமைகள் ஆணையம் அழுத்தம் கொடுத்துள்ளது.

Thu, 23 Feb 202308:00 AM IST

நரபலி:தமிழகத்தில் தஞ்சம் அடைந்த பெண்ணுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் !

மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஷாலினி என்ற பெண் வளர்ப்பு தாயினால் நரபலி அச்சம் இருப்பதாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கில் உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. 

Thu, 23 Feb 202307:53 AM IST

20 சதவிகிதம் ஈரப்பத நெல் கொள்முதலுக்கு  அனுமதி

22% ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் டெல்டா மாவட்டங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பத அளவை 19%-ல் இருந்து 20%ஆக உயர்த்தி மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. 

 

Thu, 23 Feb 202307:08 AM IST

உணவில் தலைமுடி

நடிகை மிமி சக்ரபோர்த்தி, எமிரேட்ஸ் விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் தலைமுடி இருந்தது தொடர்பாக புகார் செய்துள்ளார்.

Thu, 23 Feb 202305:44 AM IST

சன்ரைசர்ஸ் அணிக்கு புதிய கேப்டன்

ஐபிஎல் 2023 சீசனில் சன்ரைசர்ஸ் அணிக்கு புதிய கேப்டனாக எய்டன் மார்க்ரம் நியமிக்கப்பட்டுள்ளார்.

Thu, 23 Feb 202305:33 AM IST

இந்திய மக்கள் பயன்படுத்தும் டேட்டா

ஸ்மார்ட்போன் மூலம் சராசரியாக இந்திய மக்கள் மாதத்திற்கு 19.5 GB டேட்டா பயன்படுத்துவதாக சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்து உள்ளது.

Thu, 23 Feb 202305:16 AM IST

அதிமுக பொதுக்குழு செல்லும் - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வின் தீர்ப்பை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்.

Thu, 23 Feb 202304:44 AM IST

ஆம்னி பேருந்து மோதி விபத்து - 3 மாத குழந்தை உயிரிழப்பு

கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டினம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் டிராக்டர் மீது தனியார் ஆம்னி பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் 3 மாத குழந்தை உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Thu, 23 Feb 202304:28 AM IST

அதிமுக அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு இன்று வர உள்ளதையொட்டி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Thu, 23 Feb 202304:10 AM IST

மகனை கொன்று பெற்றோர் தற்கொலை

திருவள்ளூர்: வாலாஜாபாத் அருகே குடும்ப தகராறு காரணமாக மகனை கொன்று பெற்றோர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Thu, 23 Feb 202303:26 AM IST

மகளிர் உலகக்கோப்பை

டி-20 மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் அரையிறுதிப் போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.

Thu, 23 Feb 202303:12 AM IST

TNPL கிரிக்கெட் ஏலம்

TNPL கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் இன்றும் நாளையும் மாமல்லபுரத்தில் நடக்கிறது

Thu, 23 Feb 202303:10 AM IST

நிழல் வேளண்நிதிநிலை அறிக்கை

2023-2024-ஆம் ஆண்டுக்கான வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வெளியிடுகிறார்.

Thu, 23 Feb 202302:38 AM IST

3 முறை நிலநடுக்கம்

தஜிகிஸ்தான், சீனா எல்லையில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம் உணரப்பட்டது

Thu, 23 Feb 202302:25 AM IST

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சாமி தரிசனம்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சுவாமி தரிசனம் செய்தார். குடும்பத்துடன் வந்துள்ள ஆளுநருக்கு தீட்சிதர்கள் கும்ப மரியாதை அளித்தனர். ஆளுநர் வருகையை ஒட்டி, கடலூர், சிதம்பரம் பகுதிகளில் 600க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Thu, 23 Feb 202301:13 AM IST

அதிமுக பொதுக்குழு வழக்கில் இன்று தீர்ப்பு

எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்த அதிமுகவின் பொதுக்குழு முடிவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்

<p>ஓபிஎஸ், ஈபிஎஸ்,</p>
ஓபிஎஸ், ஈபிஎஸ்,